Best Pre-Workout Foods: பல்வேறு ஆரோக்கியங்களையும், உடற்கட்டமைப்பை பெறவும் உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். ஆனால் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல. உடற்பயிற்சி செய்வதற்கு முன் அதற்கான டயட் பிளானை தயார் செய்வது அவசியம். உடற்பயிற்சி தொடங்குவதற்கு கீழே குறிப்பிட்டுள்ள உணவு வகைகளை சாப்பிடலாம்.
உடற்பயிற்சி செய்யும் முன் சாப்பிட வேண்டிய உணவுகள்

ஜிம் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்படி செய்யும்பட்சத்தில் எந்தவித பின்விளைவுகளும் வராது. அதேபோல் சில உணவுப் பொருட்களையும் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?
இதனால் உடல் அதிக கலோரிகளை எரித்து நீண்ட நேரம் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது. வொர்க்அவுட்டுக்கு முன் 5 முதல் 6 பாதாம் பருப்பை சாப்பிடுங்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இப்படி சாப்பிடுவதால், உடற்பயிற்சி செய்ய போதுமான ஆற்றல் கிடைக்கும். பாதாமை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.
டேட்ஸ்
பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஆக்ஸிஜனை வழங்கும் திறனும் அதிகரிக்கிறது. உடலுக்கு ஆற்றலை வழங்குவதில் பேரிச்சம்பழம் சிறப்பாக செயல்படுகிறது. உண்ணாவிரதம் இருப்பவர்கள் பல பேரீச்சம்பழங்களை உடனுக்குடன் சாப்பிடுவதை கவனத்திருப்பீர்கள். காரணம் இதில் உடலுக்கு தேவையான பல மூலப்பொருட்கள் நிரம்பியுள்ளது. தினசரி 3 முதல் 6 பேரிச்சம்பழம் எப்போதும் சாப்பிடலாம்.
கொழுப்பு இல்லாத தயிர்
எடைப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் அதிக தானியங்களை உட்கொள்ளலாம். வேகவைத்த பட்டாணி, கொழுப்பு இல்லாத தயிர், பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் 190 கலோரிகள் உள்ளன. இவற்றை சாப்பிடுவதால், உடற்பயிற்சியின் போது சோர்வு ஏற்படாது. உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கும்.
பிரவுன் பிரட் மற்றும் ஃப்ரூட் ஜா
பிரவுன் பிரட் மற்றும் ஃப்ரூட் ஜாம் எடுத்துக் கொள்ளலாம். இது 160 கலோரி சக்தியை வழங்குகிறது. அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக வேலை செய்யலாம். பிரவுன் பிரட் பல தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றை உண்பதால் உடற்பயிற்சி செய்ய போதுமான ஆற்றல் கிடைக்கும்.
தேனுடன் பேரிக்காய்
கார்டியோ உள்ளவர்கள் உடற்பயிற்சிக்கு அரை மணி நேரத்திற்கு முன் பேரிக்காய் தேனுடன் கலந்து சாப்பிடுவது நல்லது. இது 150 கலோரி சக்தியை அளிக்கிறது. அதேபோல் பேரிக்காய் உடலுக்கும் மிகவும் நல்லது. எனவே இவற்றையும் மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம்.
மில்க் ஷேக், ஃப்ரூட் ஷேக்
உடற்பயிற்சிக்குப் பின் மில்க் ஷேக், ஃப்ரூட் ஷேக் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை உட்கொள்வதன் மூலம் சோர்வடைந்த உடலுக்கு மீண்டும் ஆற்றல் கிடைக்கிறது. அதுவும் வெளியில் வாங்குவதற்குப் பதிலாக தாங்களாகவே ஃப்ரெஷ்ஷாகச் செய்து குடியுங்கள்.
கூடுதல் பலன் கிடைக்கும்
ஜிம், ஒர்க்அவுட் செய்பவர்கள் உணவு சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிகம் சாப்பிட வேண்டாம். வாழைப்பழம், பேரீச்சம்பழம், முட்டை போன்றவற்றை சிறிதளவு சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டு ஒர்க் அவுட் செய்தால் வொர்க்அவுட்டை சந்தோஷமாக செய்யலாம் பலனும் இரட்டையாக கிடைக்கும்.
இதையும் படிங்க: கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க 6 குளிர்கால பானங்கள்
டயட் மேற்கொள்பவர்கள் முறையாக நிபுணர்கள் ஆலோசனை பெற்று அதை பின்பற்ற வேண்டும் என்பது மிக முக்கியம்.
image source: freepik