Travel Tips: பயணம் செய்ய பிடிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அனைவரும் பயணம் செய்ய விருப்பப்படுவார்கள், ஆனால் அதன்பின் சந்திக்கும் சோர்வை நினைத்தால் பலருக்கும் அசௌகரிய உணர்வும் அச்சமும் இருக்கும். பலர் பயணத்திற்குப் பிறகு மிகவும் சோர்வடைகிறார்கள், குறைந்த ஆற்றலை உணர்கிறார்கள் மற்றும் சிலருக்கு காய்ச்சல் கூட வரும்.
உடல்நலக் குறைவு பாதிப்பு உள்ளவர்களும் சில நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களாக இருந்தாலும் சில சமயங்களில் பயணத்தை கட்டாயம் தவிர்க்க முடியாது.
பயணத்தின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உடல்நல பாதிப்பு உள்ள நேரத்தில் பயணத்தை தவிர்க்கும் படியே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பயணம் செய்பவர்கள் சில உதவிக்குறிப்புகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
மருத்துவர் ஆலோசனை அவசியம்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நோய் தாக்கத்தின் தீவிரத்தை உணர்ந்து மருத்துவர் ஆலோசனையை பெற்று பயணம் செய்வது அவசியம். மருத்துவரை சந்தித்து என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை கேளுங்கள்.
உதாரணமாக, நீங்கள் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால், அவர்கள் உங்களை நீண்ட நேரம் நடக்கவோ உட்காரவோ அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல், உங்கள் மனதில் என்ன கேள்விகள் இருந்தாலும், பயணத்திற்குச் செல்லும் முன் அவற்றை மருத்துவரிடம் கேளுங்கள்.
முதலதவி மருத்துவப் பெட்டியை எடுத்துச் செல்லுங்கள்
ஏதேனும் நோய் பாதிப்பு உங்களுக்கு இருந்தால் உங்களுடனே முதலதவி பெட்டியை எடுத்துச் செல்லுங்கள். ங்கள் செல்லும் இடத்தில் மருந்து கிடைக்காமல் போகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அத்தகைய நிலையில் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். எனவே, முதலுதவி பெட்டியை உங்களுடனே எடுத்துச் செல்லுங்கள்.
மருத்துவ சாதனங்கள் உடன் வைத்திருப்பது முக்கியம்
நீங்கள் சார்ந்திருக்கக் கூடிய மருத்துவ சாதனங்களை உங்களுடனே எப்போதும் வைத்திருங்கள். மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எப்போதும் உங்களுடனே எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு BP இருந்தால், இரத்த அழுத்தக் கருவி அல்லது குளுக்கோஸ் மானிட்டர் கருவியை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
உதவிக்கு நபர் இருத்தல் சிறப்பு
நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் உடல்நிலை குறித்து முன்கூட்டியே ஒருவருக்கு தெரிவிக்கவும். முடிந்தால், உங்களுக்கு உதவக்கூடிய ஒருவரைக் காப்பாளராக அழைத்துச் செல்லுங்கள். இது தவிர, நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு உதவக்கூடிய ஒருவரை நியமிக்கவும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எப்போதும் ஒருவரின் மேற்பார்வையில் இருப்பீர்கள், அவர் உங்கள் உடல்நிலையைப் புரிந்துகொண்டு தேவையான உதவிகளை வழங்க முடியும்.
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்
பேருந்தில் மயக்கம் வந்தால் என்ன செய்வது?
பேருந்தில் பயணம் செய்யும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உணவு முறையில் கவனம் செலுத்துவது அவசியம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடுங்கள். அதேபோல் பேருந்தில் பின்புற இருக்கையில் அமர வேண்டாம்.
இதையும் படிங்க: அதிகமா செல்போன் பயன்படுத்துபவரா நீங்க? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
அதிக பயணம் செய்வது தவறு
யாராவது அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவர்கள் அதிக பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இது உடல் நலத்திற்கு நல்லதல்ல. இதன் காரணமாக, உங்கள் வழக்கமான வாழ்க்கை முறையும் பாதிக்கப்படுகிறது, இது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
Pic Courtesy: FreePik