Diwali Crackers: பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. அனைவருத்தும் பிடித்தமான பண்டிகைகளில் தீபாவளி பிரதான ஒன்று. இந்த நாளின் பல்வேறு கொண்டாட்டங்களில் பட்டாசுகள் வெடித்த மகிழ்வது என்பது பிரதான ஒன்று.
சுற்றுச்சூழலுக்கு அதிகபட்ச சேதம் பட்டாசுகளால் ஏற்படுகிறது. இது தவிர பட்டாசு வெடிப்பதாலும் காயங்கள் ஏற்படும். எனவே இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது முக்கியம்.
பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
- பட்டாசு வெடிக்கும் போது செருப்பு அல்லது காலணிகளை அணிய வேண்டும்.
- எப்போதும் திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்கவும், வீட்டுக்குள்ளோ அல்லது மூடிய இடத்திலோ பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
- பட்டாசுகளை கொளுத்தும்போது தண்ணீர் அருகிலேயே வைத்திருக்கவும், தீ காயம் ஏற்பட்டால் பயன்படுத்த வேண்டிய மருந்துகளை வைக்கவும்.
- பட்டாசுகளை எரிக்கும் போது தள்ளியே இருப்பது நல்லது.
- பட்டாசுகளை எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களிலிருந்து விலக்கி வைக்கவும்.
- எரியும் போது உடனடியாக தண்ணீரை தெளிக்கவும்.
- உங்கள் கைகளில் பட்டாசுகளை கொளுத்தாதீர்கள், ஏனெனில் அவ்வாறு செய்தால் உங்கள் கைகளில் பட்டாசுகள் வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம். இது ஒட்டுமொத்த வாழ்நாளையும் பாதிக்கும்.
- விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளுக்கு அருகில் பட்டாசுகளை எரிக்க வேண்டாம்.
- நீளமான பத்தியை பயன்படுத்தி பட்டாசை வெடிக்க முயற்சிக்கவும்.
- உங்களைச் சுற்றி யாராவது பட்டாசுகளை வெடிக்கும் போது நீங்கள் கவனமாக இருங்கள்.
- மின் கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
- பட்டாசு வெடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டால், அதை மீண்டும் பற்ற வைக்க முயற்சிக்காமல், அதன்மீது தண்ணீர் ஊற்றிவிடவும்.
- பாதி எரிந்த பட்டாசுகளை ஆங்காங்கே வீச வேண்டாம்.
தீபாவளிக்கு வெடி வெடிக்கலாமா? வேண்டாமா?
பட்டாசு வெடிக்கவே வேண்டாம் என்று கூறிவிட முடியாது, ஆனால் நமக்கான அளவோடு இருப்பது நல்லது. காரணம், பட்டாசு உற்பத்தியை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருக்கின்றனர். பட்டாசு வெடிக்கும் ஏற்படும் மாசு, சத்தம், பிறருக்கு ஏற்படும் பாதிப்பு, மருத்துவமனை, நோயாளிகள் அருகில் இருக்கிறார்களா என்பதையும் அறிந்திருக்க வேண்டியது முக்கியம். அதேநேரத்தில் பட்டாசை பாதுகாப்பாக வெடித்து தீபாவளியை கொண்டாடுங்கள்.
image source: freepik