தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், கொண்டாட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. பண்டிகை மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களுக்கு ஒத்ததாக இருந்தாலும், நம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை மறந்துவிடக் கூடாது. தீபாவளி பண்டிகையில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் தீக்காயங்கள் மட்டுமல்ல, புகையால் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
எனவே உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான தீபாவளியை உறுதிசெய்ய சில எளிய குறிப்புகள் இதோ…
முக்கிய கட்டுரைகள்
1.வெளிப்புறக் காற்றின் வெளிப்பாட்டைக் குறைத்தல்:
குழந்தைகள் பெரும்பாலும் வெளிப்புற விளையாட்டில் ஈடுபடுவதால், அவர்கள் புகை மூட்டத்தால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். எனவே காற்று மாசு அதிகமுள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
காற்று மாசுபாட்டின் தொடர்ச்சியான வெளிப்பாடு, குறிப்பாக புகைமூட்டம், ஆஸ்துமா மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் சுவாச நிலைமைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கூடுதல் பாதுகாப்புக்காக N-95/KN-95 மாஸ்களை அணிய குழந்தைகளை ஊக்குவிக்கலாம்.
2.பாதுகாப்பான சுற்றுப்புறங்கள்:
தற்செயலான தீக்காயங்களைத் தடுக்க உங்கள் குழந்தைகளை எரியும் விளக்கில் இருந்து பாதுகாக்க வேண்டும். குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத வகையில் பாதுகாப்பான தூரத்தில் வைக்க வேண்டும். குறிப்பாக திரைச்சீலைகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அருகே எரியும் விளக்குகளை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: Diwali 2023: தீபாவளி விருந்திற்கு முன்னும், பின்பும் உடலை தயார் படுத்துவது எப்படி?
தரை அல்லது வேறெங்காவது எண்ணெய் சிந்தினால் எளிதில் தீப்பற்றக்கூடும் என்பதால் உடனடியாக குறைத்துக்கொள்ள வேண்டும். மின் விளக்குகளுக்கு, கூடுதல் பாதுகாப்புக்காக அது நன்கு டேப் செய்யப்பட்டு லேமினேட் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்
3.பட்டாசு வெடிக்கும் போது கண்காணியுங்கள்:
பதுகாப்பான தீபாவளியை அனுபவிக்க விரும்பினால் பட்டாசுகளை வெடிக்கும் போது குழந்தைகளுக்கு அருகே பெரியவர்கள் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.குழந்தையின் வயதுக்கு ஏற்றார் போல் பட்டாசுகளை தேர்வு செய்யுங்கள். காற்று மற்றும் ஒலி மாசுவால் பாதிக்கப்படுவதை தவிர்க்க சிறிய வயதிலான குழந்தைகளுக்கு உரத்த சத்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளை தவிர்க்கவும்.
ஆர்வம் காரணமாக குழந்தைகள் பட்டாசுக்கு அருகே வருவதை தடுக்க, அதனை பற்றவைக்கும் போது பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்கவும். தீக்காயங்கள் அல்லது உடல்நலக் கேடுகளைத் தடுக்க ஒரு வாளி தண்ணீரைக் கையில் வைத்திருக்கவும்.
4.உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்:
தீபாவளி என்பது மகிழ்ச்சியான இனிப்புகள் மற்றும் விருந்திற்கான பண்டிகையாகும். இந்த சமயத்தில் குழந்தைகள் அளவுக்கு அதிகமான இனிப்பு மற்றும் எண்ணெய் பலகாரங்களை எடுத்துக்கொள்வதால் ஃபுட் பாய்சன், வயிற்றுப்போக்கு போன்ற உணவு தொடர்பான நோய்களின் ஆபத்தைத் தவிர்க்க,உணவு கவனமாக தயாரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுவதை உறுதிசெய்யவும்.
கை சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுங்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு, உணவைக் கையாளும் முன் அல்லது உட்கொள்ளும் முன் அனைவரும் கைகளைக் கழுவுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து சமநிலையில் சரியான கவனம் செலுத்துவதன் மூலம், உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான தீபாவளியை அனுபவிப்பதை உறுதிசெய்யலாம்.
5.ஒலி மாசுபாட்டைக் கண்காணிக்கவும்:
குழந்தைகளின் காதுகள் பெரியவர்களை விட அதிக உணர்திறன் கொண்டவை, மேலும் உரத்த ஒலிகளை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின்காதுகளில் பஞ்சு உருண்டைகளை சொருகுவது சாத்தியமான தீங்குகளிலிருந்து பாதுகாக்க பரிந்துரைக்கப்படுகிறது.
6.கண் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை:
திகைப்பூட்டும் வானவேடிக்கைகளில் இருந்து உங்கள் பிள்ளையின் கண்களை விலக்கி வைப்பது சவாலானது. கண்ணில் ஏற்படும் காயங்களைத் தவிர்க்க, வெடிக்கும் தீப்பொறிகள் அல்லது பட்டாசுகளிலிருந்து முகத்தைத் திருப்பிக்கொள்ள உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
கண்களைத் தொடுவதற்கு முன் சோப்பு மற்றும் தண்ணீருடன் நன்கு கைகளை கழுவி சுத்தப்படுத்த ஊக்கப்படுத்துங்கள். பட்டாசுகளை அருகில் வெடிக்கும் போது பாதுகாப்பு கண்ணாடி அல்லது கண்ணாடி அணிய அவர்களை ஊக்குவிக்கவும்.
Image Source: Freepik