இன்றைய காலகட்டத்தில் மலச்சிக்கல் என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. மலச்சிக்கல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் பாதிக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனைக்கு நமது உணவுப் பழக்கம் தான் காரணம்.மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பலர் மலச்சிக்கலால் அவதிப்பட்டு, அதை எப்படி குணப்படுத்துவது என்று தெரியாமல், ஆயிரக்கணக்கில் மருத்துவமனைகளில் செலவு செய்கின்றனர். இந்த பிரச்னையை யாரிடமும் வெளிப்படையாக கூற முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். உண்மையான மலச்சிக்கலுக்கு எந்த மருந்தைப் பயன்படுத்துவது என்ற குழப்பத்தில் உள்ளனர். குழந்தைகளின் இந்த மலச்சிக்கல் பிரச்சனையை ஆயுர்வேத மருந்துகளை உபயோகிப்பதன் மூலம் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய கட்டுரைகள்
இப்போதெல்லாம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பற்றி பல வழிகளில் கவலைப்படுகிறார்கள். இந்த நாட்களில் குழந்தைகள் வெளிப்புற விளையாட்டுகளை முற்றிலும் மறந்து விடுகிறார்கள்.மேலும் திடீர் திடீரென பரவும் தொற்றுநோயால் வெளியில் விளையாடவும் பிள்ளைகளை அனுமதிப்பதில்லை. அப்படிப்பட்ட காலத்தில் வீடுகளும், போன்களும் இவர்களுக்கு உலகமாகிவிட்டன. இதுவும் இவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகிறது.
குழந்தைகளில் மலச்சிக்கல் ஏன் அதிகமாக இருக்கிறது?
- குறைவாக விளையாடுதல்/அதிக உட்கார்ந்திருப்பது
- குறைவாக தண்ணீர் பருகுதுவது
- ஜங்க் ஃபுட் அதிகம் சாப்பிடுவது
- மிகவும் தாமதமாக தூங்குதல்
- நினைத்த நேரத்திற்கு சாப்பிடுவது
- சரியான தூக்கமின்மை
- குடல் ஆரோக்கியமின்மை
- உணவுடன் அதிக திரவங்களை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை குறைக்க எளிய வீட்டு வைத்தியங்கள்:
- மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் காலையில் வெந்நீரை அருந்த வேண்டும்.
- இரவில் ஊறவைத்த 4-5 திராட்சையை காலையில் சாப்பிட கொடுக்கலாம்.
- தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் பசும்பாலில் ஒரு டீஸ்பூன் பசுவின் நெய்யைக் கலந்து கொடுக்கலாம்.
- பச்சையான உணவுகளுக்குப் பதிலாக வேகவைத்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். இப்படி வேகவைத்த உணவுகளை உண்பதால் எளிதில் ஜீரணமாகும்.
- இனிப்பு, நொறுக்குத் தீனிகள் மற்றும் பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகளை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். அதற்குப் பதிலாக புதிதாக சமைத்த உணவை சாப்பிட பழக்குங்கள்.
- நொறுக்குத் தீனிகளை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே குழந்தைகள் வெளி உணவுகளை உண்ணக்கூடாது. நொறுக்குத் தீனிகளை உண்பதால் உடல் பருமன் மற்றும் மலச்சிக்கல் ஏற்படும். எனவே தேவையான சூழ்நிலைகளில் மட்டுமே வெளி உணவுகளை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- குழந்தைகளை எப்போதும் நடைபயிற்சி மற்றும் ஓட்டத்துடன் தொடர்புடைய விளையாட்டுகளை விளையாட ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்களின் வளர்சிதை மாற்றம் மேம்படும். இந்த எளிய குறிப்புகள் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை வீட்டிலேயே தீர்க்கலாம்.
- ஒருவேளை இப்படிச் செய்த பிறகும், மலச்சிக்கல் பிரச்னை குறையாமல், குழந்தைகள் தொடர்ந்து அவதிப்பட்டால், மருத்துவரை அணுகி, மலச்சிக்கலைத் தடுக்க நல்ல மருந்துகளைப் பயன்படுத்துவது நல்லது.
Image Source: Freepik