How To Prevent Child From Seasonal Diseases: குழந்தைகளுக்கு இயல்பாகவே உடலில் நோயெதிப்புச் சக்தி குறைவாக இருக்கும். அதிலும் குறிப்பாக, மழைக்காலத்தில் குழந்தைகள் எளிதாக நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இருமல், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளுடன் போராடுகின்றனர். இந்த அறிகுறிகள் அவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துகிறது. மழைக்காலத்தில் ஏற்படும் அதிக ஈரப்பதம் மற்றும் தேங்கி நிற்கும் நீர் போன்றவற்றால் நோய்த்தொற்றுக்கள் அதிகமாகி குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
மேலும், இந்த அதிகரித்த ஈரப்பதம் மற்றும் ஈரமான சூழ்நிலைகள் வைரஸ், பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்தை உருவாக்குகிறது. இது சளி, காய்ச்சல் மற்றும் பிற நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது. இந்த இளம் பருவத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிப்பதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவற்றைக் குறைக்க சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். இந்த எளிய தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் நல்வாழ்வைப் பாதுகாக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Hepatitis Infection: குழந்தைகளிடம் ஏற்படும் ஹெபடைடிஸ் தொற்று? தடுப்பது எப்படி?
குழந்தைகளுக்கு இருமல், சளி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சுகாதாரத்தை பின்பற்றுவது
குழந்தைகளை கிருமிகளிலிருந்து பாதுகாப்பாக வைப்பதற்கு அன்றாட வாழ்க்கையில் சில நடவடிக்கைகளைக் கையாள வேண்டும். அதன் படி, குழந்தையின் கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும். எனவே சாப்பிடும் முன்பாகவும், விளையாடிய பிறகு குழந்தைகள் கைகள் கழுவுவதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நல்ல சுகாதாரத்தைப் பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளுக்கான நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்க முடியும்.
கொசுக்களை விலக்கி வைப்பது
குழந்தைகளை கொசுக்களிலிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும். இதற்கு அவர்களின் தோல் மற்றும் ஆடைகளில் கொசு விரட்டியைப் பயன்படுத்தி கொசு கடிப்பதைத் தடுக்க வேண்டும். எனவே கொசுக்கள் வராமல் இருப்பதற்கு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் உதவியுடன், கொசுக்களால் பரவும் நோய்களின் அபாயத்தை வெகுவாகக் குறைக்கலாம்.
சரியான ஆடை அணிவிப்பது
குழந்தைகளுக்கு சரியான ஆடை அணிவிப்பதன் மூலம் பல்வேறு நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்க முடியும். எனவே அவர்களுக்கு எளிதாக சுவாசிக்கக்கூடிய மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சும் ஆடைகளை அணிவிக்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு மழையின் போது அவற்றை உலர வைக்க நீர்ப்புகா போன்சோஸ் அல்லது குழந்தை உடைகளைப் பயன்படுத்த வேண்டும். இது பாரம்பரிய ரெயின்கோட்களை விட மிகவும் பொருத்தமானவையாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Immue Boosting Foods: குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை சாப்பிட கொடுக்கவும்..
பாதுகாப்பான குடிநீர்
குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே அவர்கள் சுத்தமான மற்றும் வடிகட்டிய தண்ணீரைக் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், நீர் மாசுபடுவதைத் தவிர்க்க, சுத்திகரிப்பாளரைப் பயன்படுத்தலாம்.
சமச்சீரான உணவு
குழந்தைகளுக்கு அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமான உணவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கீரை வகைகள் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தலாம்.
நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது
குழந்தைகளை நோய்த்தொற்றுக்களிலிருந்து தவிர்க்க நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் இருக்கும் பகுதி நன்கு காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், குழந்தைகளை நோய்வாய்ப்பட்ட மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு எளிமையான முறையில் பருவகால நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Tooth Decay Tips: சிறு குழந்தைகளை எளிதில் அட்டாக் செய்யும் பற்சொத்தை! எப்படி தடுப்பது?
Image Source: Freepik