How to protect yourself from foodborne illnesses: ஃபுட் பாய்சனிங் என்பது பொதுவாக உணவு மூலம் பரவக்கூடிய நோயாகும். இதற்கு நோய்கள், பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் அல்லது ரசாயனப் பொருட்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளால் மாசுபட்ட உணவு அல்லது பானங்களை மக்கள் உட்கொள்ளும்போது ஏற்படக்கூடியதாகும். இந்த மாசுபாட்டின் காரணமாக, லேசான இரைப்பை குடல் அசௌகரியம் முதல் கடுமையான, உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் வரை பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.
இந்தியாவில் உணவு மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, இந்த நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதும், பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியமாகும். இதன் மூலம் உணவினால் உடலுக்கு ஏற்படக்கூடிய சில பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். இதில், உணவின் மூலம் பரவும் நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு உதவும் சில உதவிக்குறிப்புகள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Reheating Food: ஃப்ரிட்ஜில் வைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது நல்லதா?
உணவின் மூலம் பரவும் நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கான சில உதவிக்குறிப்புகள்
சில உதவிக்குறிப்புகளின் உதவியுடன் உணவின் மூலம் பரவும் நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
கைகளை அடிக்கடி நன்றாகக் கழுவுவது
உணவின் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதில் கை சுகாதாரம் மிக முக்கியமான படிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது உணவைக் கையாள்வதற்கு முன்பும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், இறைச்சி அல்லது கழுவப்படாத பொருள்களைத் தொட்ட பிறகும் குறைந்தது 20 வினாடிகள் சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கைகளைக் கழுவ வேண்டும்.
உணவை சரியான வெப்பநிலையில் சமைப்பது
உணவை சரியான முறையில் சமைப்பது அவசியமாகும். எனவே சரியான வெப்பநிலையில் உணவை சமைப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் அழிக்கப்படுவதை உறுதி செய்யலாம். உணவு வெப்பமானியைப் பயன்படுத்துவது துல்லியத்தை உறுதிசெய்யவும், யூகங்களை நீக்கவும் உதவுகிறது. ஏனெனில், சரியாக சமைக்கப்படாத உணவுகள் அதிலும் குறிப்பாக, இறைச்சிகள், உணவினால் பரவும் நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பாதுகாப்பான வெப்பநிலையில் உணவை சேமிப்பது
பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பதற்கு, அழுகக்கூடிய உணவுகளை பொருத்தமான வெப்பநிலையில் சேமிக்க வேண்டும். பொதுவாக அழுகக்கூடிய உணவுகளை அறை வெப்பநிலையில் 2 மணி நேரத்திற்கு மேல் (அல்லது வெப்பமான காலநிலையில் 1 மணி நேரத்திற்கு மேல்) வெளியே வைக்க வேண்டாம். சரியான சேமிப்பில் மற்ற மூலங்களிலிருந்து மாசுபடுவதைத் தவிர்க்க உணவை சரியாக மூடுவது அவசியமாகும்.
குறுக்கு மாசுபாட்டைத் தவிர்ப்பது
தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் சமைத்த அல்லது சாப்பிடத் தயாராக உள்ள உணவுகளுடன் பச்சையான உணவு தொடர்பு கொள்வதால் குறுக்கு-மாசுபாடு ஏற்படுகிறது. எனவே, பச்சையான இறைச்சி, கோழி, கடல் உணவுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் சாப்பிடத் தயாராக உள்ள பிற பொருட்களிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது வெவ்வேறு உணவுகளுக்கு இடையில் பாக்டீரியா பரவும் அபாயத்தைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Food Safety Myths: தரையில் விழுந்த உணவை சாப்பிடுவது எவ்வளவு ஆபத்து தெரியுமா? தீமைகள் இங்கே!
பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியாக கழுவுவது
பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை பாக்டீரியா, அழுக்கு மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் கொண்டிருக்கலாம். எனவே இவற்றை உட்கொள்வதற்கு முன்பாக நன்கு கழுவுவது அவசியமாகும். இது தேங்கி நிற்கும் நீர் மாசுபாட்டை பரப்பக்கூடும் என்பதால், இதை ஒரு கிண்ணத்தில் ஊறவைப்பதற்குப் பதிலாக ஓடும் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.
பாதுகாப்பான, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது
பொதுவாக மாசுபட்ட நீர் குறிப்பாக போதுமான சுகாதாரம் இல்லாத பகுதிகளில் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு ஒரு பொதுவான காரணமாக அமைகிறது. எனவே பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளை அகற்ற எப்போதும் வடிகட்டிய அல்லது வேகவைத்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதே போல, சுத்தமில்லாத, நீரின் தரம் குறைவாக உள்ள இடங்களுக்குச் சென்றால், சுத்தமான தண்ணீரை பாட்டிலில் ஊற்றி எடுத்துச் சென்று குடிக்க வேண்டும்.
தெருவோர மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கவனம்
இந்தியாவில் தெருவோரத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகள் பிரபலமாக இருப்பினும், அதன் தரநிலைகள் மாறுபடலாம். சுத்தமாகப் பராமரிக்கும், சூடான, புதிதாக தயார் செய்யப்பட்ட உணவை வழங்கும் விற்பனையாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதே சமயம், பச்சையாகவோ அல்லது சரியாக சமைக்கப்படாத தெரு உணவையோ தவிர்க்கலாம். ஏனெனில், இது மாசுபட்டிருக்கலாம்.
பாத்திரங்களை சுத்தமாக வைத்திருப்பது
மாசுபட்ட மேற்பரப்புகளிலிருந்து கிருமிகள், உணவுப்பொருள்களுக்குப் பரவக்கூடும். எனவே, சரியான சுத்தம் செய்வது அவசியமாகும். வெட்டும் பலகைகள், பாத்திரங்களைக் கழுவுவதற்கு சூடான நீர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்பைப் பயன்படுத்தலாம். இது தொடர்ந்து கிருமி நீக்கம் செய்ய உதவுகிறது.
காலாவதி தேதிகளில் கவனம் செலுத்துவது
ஒரு பொருள் மாசுபட்டதாகவோ அல்லது நுகர்வுக்குப் பாதுகாப்பற்றதாகவோ கண்டறியப்பட்டால் அது உணவு மாசுபாட்டை ஏற்படுத்தலாம். அதே போல, தொகுக்கப்பட்ட உணவை உட்கொள்வதற்கு முன்பாக எப்போதும் காலாவதி தேதிகளைச் சரிபார்க்க வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களைக் கையாள்வதன் மூலம், தனிநபர்கள் உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைத்து, பாதுகாப்பான உணவைப் பெறலாம். இதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மீண்டும் சூடு செய்து சாப்பிடக்கூடாத உணவுகள் இங்கே
Image Source: Freepik