மான்சூன் சீசனிலிருந்து பாதுகாப்பாக இருக்க நீங்க பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ

Monsoon health tips: how to protect yourself from seasonal illnesses: மழைக்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில நடவடிக்கைகளைக் கையாள்வது அவசியமாகும். இதில் பருவமழை காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன விஷயங்களைக் கையாளலாம் என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
மான்சூன் சீசனிலிருந்து பாதுகாப்பாக இருக்க நீங்க பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ


Effective ways to stay safe from monsoon related diseases: மழைக்காலம் என்றாலே அனைவருக்கும் சௌகரியத்தைத் தரக்கூடிய காலமாகும். ஆனால், இந்த காலகட்டத்தில் அதிகரித்த ஈரப்பதம், தேங்கி நிற்கும் நீர் மற்றும் மாசுபட்ட உணவு மற்றும் நீர் போன்றவற்றின் காரணமாக, பல்வேறு தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு சரியான காலமாகவும் அமைகிறது. பொதுவாக, பருவமழை காலத்திலேயே டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, டைபாய்டு, லெப்டோஸ்பிரோசிஸ், காலரா, வைரஸ் காய்ச்சல், காய்ச்சல் மற்றும் வயிற்று தொற்றுகள் போன்றவை அடங்குகிறது.

இதில் முதன்மையாக கொசுக்கள், மாசுபட்ட நீர் அல்லது சுகாதாரமற்ற சூழல்கள் மூலம் நோய்கள் பரவுகின்றன. அதிர்ஷ்டவசமாக, சில தடுப்பு முறைகளின் உதவியுடன் பருவமழை நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். இதில் மழைக்காலத்தில் நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்க உதவும் குறிப்புகள் சிலவற்றைக் காணலாம்.

மழைக்கால நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வழிகள்

சுற்றியுள்ள தேங்கி நிற்கும் தண்ணீரைத் தவிர்ப்பது

நீரில் பெருகக்கூடிய கொசுக்கள் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களைப் பரப்புகிறது. குறிப்பாக, வீட்டிற்கு அருகிலுள்ள பூந்தொட்டிகள், பழைய டயர்கள் அல்லது திறந்த கொள்கலன்களில் தண்ணீர் சேகரிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர் தொட்டிகளை தவறாமல் சுத்தம் செய்து அவற்றை சரியாக மூடி வைக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த பருவமழை காலத்தில் எந்த நோயும் அண்டாமல் இருக்க நீங்க எடுத்துக் கொள்ள வேண்டிய 7 மூலிகைகள் இதோ

கொசு விரட்டிகள், வலைகளைப் பயன்படுத்துவது

குறிப்பாக மாலையில் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவதும், கொசு வலைகளின் கீழ் தூங்குவதும் கொசுக்களால் பரவும் நோய்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது. மேலும், விடியற்காலை நேரத்தில் வெளியில் செல்லும் போது முழு கை ஆடைகளை அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

வீட்டில் சமைத்த புதிய உணவுகளை உண்ணுவது

இந்த காலநிலையில் தெரு உணவு மற்றும் சாலையோர சிற்றுண்டிகளை சாப்பிடுவதற்கு அதிக ஈடுபாடு இருக்கலாம். ஆனால் மழைக்காலங்களில் இவை மாசுபடுவதற்கான வாய்ப்புகளை அதிகம் உள்ளது. எனவே அன்றாட உணவில் புதிய, சூடான, வீட்டில் சமைத்த உணவை மட்டும் சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். அதே சமயம், சமைப்பதற்கு முன் காய்கறிகளை நன்கு கழுவ வேண்டும்.

தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவது

மழைக்காலத்தில் குளிப்பதை சிலர் தவிர்ப்பர். ஆனால் தினமும் குளிப்பது நகங்களை வெட்டுவது, கைகளை அடிக்கடி கழுவுதல் குறிப்பாக சாப்பிடுவதற்கு அல்லது சமைப்பதற்கு முன்பு செய்வதை உறுதி செய்ய வேண்டும். தோல் வெடிப்புகள், பூஞ்சை தொற்றுகள் மற்றும் வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிராக பாதுகாக்க உதவும் தனிப்பட்ட சுகாதாரமாகும்.

இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது

அன்றாட உணவில் இஞ்சி, மஞ்சள், பூண்டு, நெல்லிக்காய், துளசி மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தவிர, மூலிகை தேநீர், சூப்கள் மற்றும் வெதுவெதுப்பான நீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வது பொதுவான தொற்றுகளை எதிர்த்துப் போராடவும், உற்சாகமாக இருக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: கேன்சர் நோயாளிகள் மழைக்கால தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க இதை செய்யவும்..

கொதிக்க வைத்த அல்லது வடிகட்டிய தண்ணீரை மட்டும் குடிப்பது

மழைக்காலங்களில் காலரா, டைபாய்டு போன்ற நீரினால் பரவும் நோய்கள் அதிகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில், குழாய் நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் எப்போதும் வேகவைத்த, வடிகட்டிய அல்லது பாட்டில் தண்ணீரைக் குடிக்கலாம். மேலும் பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகள் இல்லாததை உறுதிசெய்ய வேண்டும்.

ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிக்கக்கூடாது

உடல் வலி, வயிற்று வலி, லேசான காய்ச்சல் அல்லது இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பின், அதைப் புறக்கணிக்கக்கூடாது. ஆரம்பகால நோயறிதலின் மூலம் சிக்கல்களைத் தடுக்கலாம். குறிப்பாக, டெங்கு, டைபாய்டு அல்லது வைரஸ் தொற்றுகள் போன்ற நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது

ஈரமான சுற்றுப்புறம் காரணமாக பூஞ்சை, பாக்டீரியா மற்றும் பூச்சிகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது. நல்ல வடிகாலை உறுதி செய்ய வேண்டும். காலணிகள் மற்றும் துணிகளை உலர வைக்க வேண்டும். மேலும், தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளைத் தவிர்க்க தரையைத் தொடர்ந்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

சுகாதார நடைமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உணவுப் பராமரிப்புகளின் மூலம் மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கவனமாக இருங்கள்! ஆட்டத்தை தொடங்கும் டெங்கு - மலேரியா.. இந்த வழியில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்..

Image Source: Freepik

Read Next

அக்குள் கருப்பா இருக்கா.? ஸ்லீவ்லெஸ் போட சங்கட்டமா இருக்கா.? இப்படி பண்ணுங்க.. கருமை நீங்கும்.!

Disclaimer