இந்த பருவமழை காலத்தில் எந்த நோயும் அண்டாமல் இருக்க நீங்க எடுத்துக் கொள்ள வேண்டிய 7 மூலிகைகள் இதோ

Herbs to avoid health problems during monsoon season: பருவகாலத்தில் ஏற்படக்கூடிய நோய்களைத் தடுப்பதற்கு அன்றாட உணவுமுறையில் கவனம் செலுத்துவது அவசியம். இதில் மூலிகைகளும் அடங்கும். இதில் பருவகாலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபட நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சில மூலிகைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இந்த பருவமழை காலத்தில் எந்த நோயும் அண்டாமல் இருக்க நீங்க எடுத்துக் கொள்ள வேண்டிய 7 மூலிகைகள் இதோ

How to stay healthy in monsoon season: பொதுவாக மழைக்காலம் என்றாலே அனைவருக்கும் விருப்பமான காலநிலையாக அமையக்கூடியதாகும். மேலும் இது கடுமையான வெப்பத்திலிருந்து நிவாரணம் தருகிறது, ஆனால், இந்த ஈரப்பதம் மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகள் நோய்த்தொற்றுகளுக்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆம். உண்மையில், இந்த காலநிலையிலேயே நீர்வழி நோய்கள், சுவாசக்குழாய் தொற்றுகள் மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற பொதுவான பருவமழை நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.

எனினும், அன்றாட உணவுமுறையில் சில உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த கால சூழ்நிலையில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபடலாம். குறிப்பாக, இந்த பருவ காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது அவசியமாகும். ஆயுர்வேதத்தில் சில மூலிகைகளின் உதவியுடன், இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கும் தொற்றுகளைத் தடுப்பதற்கும் ஒரு முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது.

ஆயுர்வேத மூலிகை எவ்வாறு உதவுகிறது?

ஆயுர்வேத மூலிகைகள் அதன் சக்திவாய்ந்த மருத்துவ குணங்களுக்காக அறியப்படுகிறது. மேலும், பல நூற்றாண்டுகளாக, இவை ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகைகளை எடுத்துக் கொள்வது உடலின் இயற்கையான குணப்படுத்தும் வழிமுறைகளை ஆதரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. இவ்வாறு மழைக்காலங்களில் தொற்றுகளைத் தடுக்க ஆயுர்வேத மூலிகைகள் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மழைக்காலத்தில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க இந்த 5 விஷயத்தை செய்யுங்க!

பருவகால நோய்களைத் தவிர்க்க உதவும் மூலிகைகள்

அஸ்வகந்தா

ஆயுர்வேதத்தின் படி, அஸ்வகந்தா பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடிய மூலிகை ஆகும். இது மன அழுத்தத்திற்கு ஏற்ப உடலை மாற்றியமைக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் ஒரு பிரபலமான அடாப்டோஜெனிக் மூலிகையாக அமைகிறது. இதில் உள்ள சக்திவாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் மற்றும் நோயெதிர்ப்பு அதிகரிக்கும் பண்புகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

இதை அன்றாட வழக்கத்தில் அஸ்வகந்தா பொடி அல்லது காப்ஸ்யூல்கள் வடிவில் சேர்ப்பதன் மூலம் தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும் இது மன அழுத்தத்திற்கு உடலின் எதிர்வினையை மேம்படுத்துகிறது. மழைக்காலத்தில் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதன் மூலம் பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபடலாம்.

குடுச்சி

இது கிலோய் என்றும் அழைக்கப்படுகிறது. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்ட சிறந்த ஆயுர்வேத மூலிகையாகும். இது ஆன்டிபயாடிக், வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் உடலின் இயற்கையான பாதுகாப்பை மேம்படுத்தி, தொற்றுக்களுக்கு எதிராக நம்மைப் பாதுகாக்கிறது. மேலும் இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கிலோய் சாறு அல்லது காப்ஸ்யூல்கள் வடிவில் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.

திரிபலா

இது ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்ட நன்கு அறியப்பட்ட மூலிகை ஆகும். இது செரிமானம், நச்சு நீக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. திரிபலா பவுடரை இரவில் உட்கொள்வது செரிமான கோளாறுகளைத் தடுக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை மழைக்காலங்களில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மழை வெளுத்து வாங்குது மக்களே... நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிமையான வீட்டு வைத்தியம்!

மஞ்சள்

மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றதாகும். இதில் உள்ள குர்குமின் எனப்படும் செயலில் உள்ள கலவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. எனவே அன்றாட உணவில் மஞ்சள் தூளைச் சேர்ப்பது அல்லது மஞ்சள் பால் உட்கொள்வது போன்றவை நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

துளசி

இது ஆயுர்வேதத்தில் ஒரு புனித மூலிகையாகக் கருதப்படுகிறது. இதன் வலுவான ஆன்டிவைரல், ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும் இவை சுவாச ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. துளசி உட்கொள்வது நோயெதிப்பு சக்தியை அதிகரித்து, மழைக்காலங்களில் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது.

அஜ்வைன்

மழைக்காலங்களில் ஏற்படும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைப் போக்குவதில் அஜ்வைன் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது இந்த காலநிலையில் ஏற்படும் வீக்கம், அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தைப் போக்கவும் உதவுகின்றன. இதற்கு அஜ்வைன் நெர் தயார் செய்து குடிக்கலாம். குறிப்பாக, உணவுக்குப் பிறகு சூடான ஓம நீரைக் குடிப்பது செரிமானத்தை சீராக்க மற்றும் நச்சுகளை அகற்ற பெரிதும் நன்மை பயக்கும்.

வேம்பு

இது இரத்தத்தை சுத்திகரிக்க, கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்க மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த மூலிகையாகும். அன்றாட வாழ்வில் வேப்ப இலைகளை உட்கொள்வது, வேப்ப எண்ணெய் பயன்பாடு போன்றவை மழைக்காலங்களில் நோய்த்தொற்றுக்களைத் தடுக்கவும், வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் வேம்பு தோல் தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உங்க நோயெதிர்ப்புச் சக்தியை பாதிக்கும் இந்த பழக்கங்களை நீங்க கட்டாயம் தவிர்க்கணும்

Image Source: Freepik

Read Next

தைராய்டு உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிடலாமா? மருத்துவர் தரும் டிப்ஸ் இதோ

Disclaimer