Which ayurvedic herbs are anti-aging: இன்றைய வேகமான உலகில் பல்வேறு சரும பராமரிப்புகளைக் கையாள்வதன் மூலம் சருமத்தைப் பாதுகாப்பாக வைக்க முயற்சிக்கின்றனர். எனினும், சில மோசமான உணவுமுறை மட்டுமல்லாமல், இது போன்ற ஆரோக்கியமற்ற சரும பராமரிப்பு முறைகளைக் கையாள்வதால் சருமம் வேகமாக வயதாகிறது. இந்நிலையில், சருமத்திற்கு வயதான எதிர்ப்பு சீரம்கள் மற்றும் சருமத்தை இறுக்கும் சிகிச்சைகள் தவிர, ஆயுர்வேத வைத்தியங்கள் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. ஆயுர்வேத முறையானது ஒரு மென்மையான, ஆழமான அணுகுமுறையை வழங்குகிறது.
ஆயுர்வேதம் வயதானதை சரிசெய்ய வேண்டிய ஒரு குறைபாடாக அல்ல. மாறாக அழகாக ஆதரிக்கப்பட வேண்டிய ஒரு இயற்கை செயல்முறையாக அமைகிறது. அவ்வாறு சில ஆயுர்வேத வைத்தியங்கள் சருமத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மூலிகைகள் உடலை வளர்க்கவும், உயிர்ச்சக்தியைப் பாதுகாக்கவும் மற்றும் வயதான அறிகுறிகளைத் தாமதப்படுத்தவும் உதவுகின்றன. இந்த மூலிகைகள் சுருக்கங்களை மென்மையாக்குவது மட்டுமல்லாமல், உடலின் அமைப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உள் பிரகாசத்தை ஆதரிக்கவும் உள்ளிருந்து செயல்படுகிறது. இதில் வயதை மெதுவாக்க உதவும் மூலிகைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சீக்கிரம் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க... இந்த காலை உணவுகள சாப்பிடுங்க!
முதுமையை எதிர்த்துப் போராட உதவும் சிறந்த மூலிகைகள்
ஆம்லா
இந்திய நெல்லிக்காய் என்றழைக்கப்படும் ஆம்லா வைட்டமின் சி நிறைந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாகும். இது கொலாஜன் தொகுப்பு மற்றும் தோல் நெகிழ்ச்சித்தன்மைக்கு ஒரு முக்கியமான ஊட்டச்சத்தாகக் கருதப்படுகிறது. இந்த சிறிய, புளிப்பு பழம் ஒரு சிறந்த சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.
நெல்லிக்காயைத் தொடர்ந்து உட்கொள்வது முடி நரைப்பதை மெதுவாக்குகிறது. இது நிறமியைக் குறைக்கவும், சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், மற்றும் கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கவும் வழிவகுக்கிறது.
பயன்படுத்தும் முறை
தினமும் வெறும் வயிற்றில் 1–2 டீஸ்பூன் அளவிலான நெல்லிக்காய் சாற்றை எடுத்துக் கொள்ளலாம் அல்லது இதை தேனுடன் கலந்து பொடியாக உட்கொள்ளலாம்.
முக்கிய கட்டுரைகள்
குடுச்சி
கிலோய் என்றழைக்கப்படும் குடுச்சியானது அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தில், இது உடலைப் புத்துணர்ச்சியடையச் செய்வதன் மூலம் நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
மேலும் வயதாகும்போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடல் தொற்றுகள், சோர்வு மற்றும் வீக்கத்திற்கு ஆளாக நேரிடலாம். இந்நிலையில் குடுச்சயின் பயன்பாடு ஆற்றல் அளவை பராமரிக்க உதவுகிறது. இது நாள்பட்ட சோர்வை எதிர்த்துப் போராடவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. இதில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரும வயதாவதை தாமதப்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த நீண்ட ஆயுளை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
குடுச்சி சாறு குடிக்கலாம் அல்லது இதை ஒரு துணைப் பொருளாக எடுத்துக்கொள்ளலாம். முழு நன்மைகளைப் பெற குடுச்சியை இது பெரும்பாலும் நெல்லிக்காய் மற்றும் பிற மூலிகைகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
பிராமி
ஆயுர்வேதத்தில், பிராமியானது நினைவாற்றலை மேம்படுத்தவும், கவனத்தை மேம்படுத்தவும், மன சோர்வைக் குறைப்பதற்கும் உதவுகிறது. இவை அனைத்துமே ஆரோக்கியமான வயதானதன் முக்கிய குறிகாட்டிகள் ஆகும். இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், நிம்மதியான தூக்கத்திற்கும் வழிவகுக்கிறது. இது பதட்டம், மனச்சோர்வு போன்ற மனநிலை கோளாறுகளை சமநிலைப்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: நீங்க குடிக்கும் இந்த பானங்கள் உங்களை வயதாவது போல காட்டும்.. இதைக் குடிப்பதை உடனே நிறுத்துங்க
இது வயதானவுடன் ஏற்படக்கூடிய அறிவாற்றல் வீழ்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது. இதன் குளிர்ச்சியான தன்மை பித்த தோஷ ஏற்றத்தாழ்வு உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது பெரும்பாலும் முன்கூட்டியே நரைத்தல் மற்றும் எரிச்சலுடன் தொடர்புடையதாகும்.
எப்படி பயன்படுத்துவது?
பிராமி பொடியை வெதுவெதுப்பான நீர் அல்லது நெய்யில் கலந்து குடிக்கலாம். இது காப்ஸ்யூல் வடிவத்திலும் எடுத்துக் கொள்ளலாம். உச்சந்தலையில் மசாஜ் செய்வதற்காக இதை மூலிகை எண்ணெய்களில் சேர்த்து பயன்படுத்தலாம்.
அஸ்வகந்தா
இந்திய ஜின்ஸெங் என்றழைக்கப்படும் அஸ்வகந்தா, ஆயுர்வேத வைத்தியத்தில் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இது மிகவும் சக்திவாய்ந்த அடாப்டோஜென்களில் ஒன்றாகும். இவை மன அழுத்தத்தை நிர்வகிக்கும் உடலின் திறனை ஆதரிக்க ஏதுவாக அமைகிறது. மேலும் இது உடலில் கார்டிசோல் அளவை சமநிலைப்படுத்தி அமைதியை ஊக்குவிப்பதன் மூலம் முன்கூட்டிய வயதாவதைத் தாமதப்படுத்துகிறது.
இது சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும், ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இவை கருவளையங்களைக் குறைப்பதில் இருந்து பளபளப்பை மீட்டெடுப்பது வரை பல நன்மைகளைத் தருகிறது. இது முகம் மற்றும் உடலில் வெளிப்படுகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் வயதானதற்கு முக்கிய காரணமாக விளங்கும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுவதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது.
பயன்படுத்தும் முறை
1 டீஸ்பூன் அஸ்வகந்தா பொடியை சூடான பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காயுடன் சேர்த்து படுக்கைக்கு முன் குடிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த உலர் பழங்கள் கொலாஜன் குறைபாட்டை நீக்குகின்றன..
Image Source: Freepik