Fri Sep 11, 2026 | 11:11 PM IST

Doctor Verified

ஆலிவ் ஆயில் vs பாதாம் ஆயில்.. முதுமையைத் தடுக்க எது சிறந்தது?

இளம் வயதிலேயே பலரும் முதுமை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், வயதாவதை எதிர்த்துப் போராட சில எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். அவ்வாறு, பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெய். இதில் எந்த எண்ணெய் முதுமையை எதிர்த்துப் போராட உதவுகிறது என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், மக்கள் பலரும் தங்களது உடல்நலத்தின் மீதும், சருமம், முடி ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்த தவறுகின்றனர். ஆனால், இதனால் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படக்கூடும். இதில் சரும பிரச்சனைகளாக, சருமத்தில் தடிப்புகள், முகப்பரு, அரிப்பு, மந்தமான தன்மை மற்றும் சரும வறட்சி போன்ற பல தோல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இது தவிர, வயது அதிகரிக்கும் போது முதுமை தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்கின்றனர்.

ஆனால் சில நேரங்களில் அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக, இளம் வயதிலேயே மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளை மக்கள் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் தங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த முதுமையைப் போக்குவதற்கு பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெய்களை சருமத்தில் தடவ பரிந்துரைக்கின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: பளபளப்பான சருமம் வேண்டுமா? கிரீம் எல்லாத்தையும் தூக்கி போடுங்க.. இந்த கொலாஜன் டிரிங்க்ஸ் குடிங்க..

இதில் எந்த எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்ற கேள்வி பெரும்பாலும் மக்களின் மனதில் எழுகிறது. இதில் ஜெய்ப்பூரில் உள்ள மேவார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், இயற்கை மருத்துவ மருத்துவமனையின் மூத்த மருத்துவருமான டாக்டர் கிரண் குப்தா அவர்கள் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் - இதில் எந்த எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இதில் காண்போம்.

முதுமையைத் தவிர்க்க எந்த எண்ணெய் சிறந்தது?

டாக்டர் கிரண் குப்தா அவர்களின் கூற்றுப்படி, பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் - இந்த இரண்டு எண்ணெய்களுமே சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இவை இரண்டையும் பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் மிகுந்த பயனளிக்கிறது. ஆனால், மருத்துவரின் கூற்றுப்படி, சருமத்திற்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், பாதாம் எண்ணெய் அதிக நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

ஏன் பாதாம் எண்ணெய் சிறந்தது?

பாதாம் எண்ணெயைச் சருமத்திற்குப் பயன்படுத்துவது சருமத்தை லேசானதாக வைக்க உதவுகிறது. மேலும் பாதாம் எண்ணெயில் நல்ல அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் டி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இது தவிர, பாதாம் எண்ணெயில் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் போன்றவை உள்ளது. மறுபுறம், ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை சருமத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

முதுமையை எதிர்த்துப் போராட பாதாம் எண்ணெயின் நன்மைகள்

டாக்டர் கிரண் கருத்துப்படி, பாதாம் எண்ணெயில் பல்வேறு பண்புகள் உள்ளன. இவை சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கி இயற்கையாகவே ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Beauty Secret.! நிபுணர் பரிந்துரைக்கும் Best Serum Ingredients..

ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக பாதுகாக்க

பாதாம் எண்ணெயில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இதை சருமத்திற்கு மேற்பூச்சாகப் பயன்படுத்துவது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், சருமத்தை இயற்கையாகவே இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

வீக்கத்தைக் குறைக்க

பாதாம் எண்ணெயில் குறிப்பிடத்தக்க அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதை சருமத்தில் பயன்படுத்துவது வீக்கம், தழும்புகள் மற்றும் முகப்பருவைக் குறைத்து, சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இளமையாக இருக்க வீட்டிலேயே தயார் செய்த இந்த வயதான எதிர்ப்பு பானத்தை குடிங்க.. நிபுணர் தரும் டிப்ஸ் இதோ

Image Source: Freepik

Read Next

வெறும் 5 நாள் போதும்.. மணப்பெண் பொலிவோடு இருக்க உதவும் டயட் பிளான்.. நிபுணர் தரும் கூடுதல் டிப்ஸ்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 01, 2025 22:01 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content