அழகு மற்றும் Skin Care-ல் இப்போது Serums முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த சரும வகையினருக்கும், எந்த வயதினருக்கும் பாதுகாப்பாகப் பயன்படுத்தக்கூடிய சில Molecules உள்ளன. அந்த மூன்று முக்கிய Molecules பற்றிய தகவலை தோல் நிபுணர் டாக்டர் ஷ்வேதா ராகுல் தனது Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மருத்துவர் கூறிய Serum Ingredients
1. Niacinamide
Niacinamide எந்த Skin type-க்கும் பொருந்தும். எல்லா வயதினரும் இதைப் பயன்படுத்தலாம். டாக்டர் ஷ்வேதா ராகுல் கூறியபடி, இது சருமத்தில் பளபளப்பை அதிகரிக்கிறது மற்றும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தினசரி Skin Care-ல் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
2. Lactic Acid
Lactic Acid ஒரு சிறந்த Moisturizer. சரியான அளவில் பயன்படுத்தினால், irritation ஏற்படாது என்றும், அனைத்து வயதினரும் இதைப் பயன்படுத்தலாம் என்றும் நிபுணர் கூறுகிறார். இது சருமத்திற்கு Moisturizer-ஆக செயல்படுவதோடு , முகத்தில் natural glow-ஐ தருகிறது.
3. Peptides
Peptides ஒரு சக்திவாய்ந்த Anti-Aging Molecule. இதை 20 வயதிலிருந்தே பயன்படுத்தலாம் என்றும், இது சருமம் இறுக்கமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது என்றும் நிபுணர் குறிப்பிட்டார். யாரும் பாதுகாப்பாகப் பயன்படுத்தக்கூடிய Serum ஆகும்.
நிபுணரின் கருத்து
இந்த மூன்று Molecules – Niacinamide, Lactic Acid, Peptides – கொண்ட Serum-களை எந்த Skin type-க்கும், எந்த வயதினரும் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என்று டாக்டர் ஷ்வேதா ராகுல் வலியுறுத்துகிறார்.
இறுதியாக..
அழகான, பளபளப்பான சருமம் பெற, dermatologist பரிந்துரைக்கும் இந்த Molecules கொண்ட Serums-ஐ தினசரி Skin Care-ல் சேர்த்துக் கொள்ளலாம்.
Disclaimer: இந்தப் பதிவில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அறிவுத் தேவைக்காக மட்டுமே. இங்கு கூறப்பட்ட தகவல் தோல் நிபுணர் டாக்டர் ஷ்வேதா ராகுல் அவர்களின் இன்ஸ்டாகிராம் பதிவின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் தோல் தன்மை மாறுபடும்; எனவே, ஏதேனும் ஒவ்வாமை, அரிப்பு, சிவப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்தி, மருத்துவ ஆலோசனை பெறவும்.