பெண்கள் எப்போதும் தங்கள் தோலைப் பராமரிப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் 40 வயதுக்குப் பிறகு சில தவறான பராமரிப்பு முறைகள், சரும ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கக்கூடும் என்கிறார்கள் தோல் நிபுணர்கள். குறிப்பாக முகத்தில் தசைகள் தளர்வு, வறட்சி, எரிச்சல், சுருக்கம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து தோல் நிபுணர் டாக்டர் ஷ்வேதா ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவர் கூறிய. 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான தவறுகளை இங்கே பார்க்கலாம்.
சரும ஆரோக்கியத்திற்காக தவிர்க்க வேண்டிய தவறுகள்
வேகமாக எடை இழப்பது
மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதனால் பலர் வேகமாக எடை குறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் திடீர் எடை இழப்பு முகத் தசைகளை தளரச்செய்து, வயதான தோற்றத்தை விரைவாக காட்டும். எடை குறைப்பு மெதுவாகவும், ஆரோக்கியமான முறையிலும் மட்டுமே செய்ய வேண்டும்.
புரத உணவுகளை தவிர்ப்பது
எடை குறைக்கும் முயற்சியில் பெண்கள் புரதம் நிறைந்த உணவுகளை தவிர்க்கிறார்கள். ஆனால் புரதம் இல்லாமல் சருமத்துக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. ஒரு கிலோ எடைக்கு குறைந்தபட்சம் 0.8 கிராம் புரதம் அவசியம்.
முகத்தில் தேவையற்ற முடியை புறக்கணித்தல்
40 வயதுக்குப் பிறகு முகத்தில் இருக்கும் தேவையற்ற முடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் தோன்றும். இதை அப்படியே விட்டுவிட்டால் 40 வயதுக்குப் பிறகு லேசர் சிகிச்சையும் பயனில்லை. எனவே இந்த வயதிலேயே நிபுணரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெறுவது அவசியம்.
திடீரென புதிய சரும பராமரிப்பு தொடங்குவது
40 வயது வரை எந்த பராமரிப்பும் செய்யாமல் இருந்தவர்கள் திடீரென ரெட்டினால், AHA, BHA போன்ற பல்வேறு தயாரிப்புகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது ஆபத்தானது. சருமம் வறண்ட நிலையில் இருக்கும். அதிக ரெட்டினால் பயன்படுத்தினால் எரிச்சல் மற்றும் காய்ச்சல் ஏற்படும்.
இந்த பதிவும் உதவலாம்: Beauty Secret.! நிபுணர் பரிந்துரைக்கும் Best Serum Ingredients..
தூக்கத்தை புறக்கணித்தல்
இந்த வயதில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகம். தூக்கக் குறைவு, மன அழுத்தம் போன்றவை சருமத்தை பாதிக்கும். தினமும் குறைந்தது 7–8 மணி நேரம் தூங்குவது சரும ஆரோக்கியத்திற்கு அவசியம்.
இறுதிச் சொல்..
40 வயதுக்கு பிறகு பெண்கள் செய்யும் சிறிய தவறுகள் கூட, தோல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கக்கூடும். எனவே மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே சரும பராமரிப்பை தொடங்குவது, ஆரோக்கியமான உணவுகள், சீரான தூக்கம் மற்றும் முறையான சிகிச்சைகளை பின்பற்றுவது தான் நீண்ட காலத்தில் தோலை இளமையாக வைத்திருக்கும் ரகசியம் என்று மருத்துவர் கூறினார்.
Disclaimer: இங்கே பகிரப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அறிவுரைகளாகும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் உடல் நிலை மற்றும் சருமத்தின் தன்மைகள் மாறுபடும். எனவே, புதிய சிகிச்சை, அழகு சாதனப் பொருட்கள் அல்லது உணவுமுறை மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன் தகுதியான மருத்துவர் அல்லது டெர்மடாலஜிஸ்ட் ஆலோசனையை பெறுவது அவசியம். இந்தப் பதிவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் எந்தவொரு முடிவுக்கும் எங்களால் பொறுப்பு ஏற்கப்படமாட்டாது.