Mustard Oil For Hair Growth: ஒவ்வொரு பெண்ணும் தனது கூந்தல் நீளமாக வளர்க்க விரும்புவார்கள். ஏனெற்றால், முடி நீளமாக இருந்தால் தங்களின் அழகு இன்னும் அதிகரிக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, முடியை சரியாக பராமரிக்காததாலும், ரசாயனங்கள் அடங்கிய ஷாம்பூவை பயன்படுத்துவதாலும் ஒருபுறம் முடி உதிர ஆரம்பித்தாலும், மறுபுறம் முடி வளர்ச்சி தடைப்படுகிறது.
கடுகு எண்ணெயை தினமும் தலைமுடியில் தடவி வந்தால், முடி வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், உண்மை தான். கடுகு எண்ணெய் உங்கள் முடி வளர்ச்சிக்கு காரணமான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. பாட்டி காலத்திலிருந்தே முடி வளர்ச்சிக்கு இந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : ஆரோக்கியமான கூந்தலுக்கு பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத குறிப்புகள்
கடுகு எண்ணெய் முடி வளர்ச்சிக்கு எவ்வாறு உதவும்?

கடுகு எண்ணெயில் ஆக்ஸிஜனேற்றிகள், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும், இதில் வைட்டமின் டி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இவை அனைத்தும் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இது தவிர, கடுகு எண்ணெயில் லினோலிக் மற்றும் ஒலிக் என்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது முடி வளர்ச்சிக்கு இந்த எண்ணெயை சிறந்த எண்ணெயாக மாற்றுகிறது. இந்த சத்துக்கள் முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Cinnamon for hair : அடர்த்தியான கூந்தலை பெற இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!
கடுகு எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். உங்கள் மயிர்க்கால்களுக்கு இரத்தம் மூலம் ஊட்டச்சத்து கிடைக்கிறது, இது முடி வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது?

- ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை எடுத்து வெதுவெதுப்பாக சூடாக்கவும்.
- இப்போது முடியை அவிழ்த்து இரண்டு பகுதிகளாக பிரிக்கவும்.
- பின்னர், உங்கள் விரல்களை எண்ணெயில் நனைத்து, விரல் நுனிகளால் எண்ணெயை உச்சந்தலையில் தடவவும்.
இந்த பதிவும் உதவலாம் : ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? உங்களுக்கான 6 ஆசனங்கள் இங்கே…
- விரல் நுனிகளின் உதவியுடன், 10-15 நிமிடங்கள் தலையை மெதுவாக மசாஜ் செய்யவும்.
- தலையில் எண்ணெய் தடவியவுடன், முடியின் நீளத்திலும் தடவவும்.
- நீங்கள் விரும்பினால், இரவு முழுவது தலைமுடியில் எண்ணெயை அப்படியே விடவும். இல்லையெனில், எண்ணெய் தேய்த்த 2 மணி நேரம் கழித்து லேசான ஷாம்பூவை கொண்டு தலைமுடியை அலசவும்.
Pic Courtesy: Freepik