$
How can I turn my grey hair into black hair: இன்றைய வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறை காரணமாக பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக தலைமுடி உதிர்வு மற்றும் இளநரை பிரச்சினை. தலைமுடியை சரிவர கவனிக்காமல் இருப்பது, கூந்தலுக்கு எண்ணெய் தடவாமல் இருப்பது, தவறான உணவுமுறை, உடலில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மருந்துகளின் பக்க விளைவு காரணமாக இளநரை பிரச்சினைகள் ஏற்படலாம்.
உங்களுக்கு வெள்ளை முடி பிரச்சனை இருந்தால், நாம் ஒரு சில விஷயங்களை பின்பற்றினால் போதும். இளநரை பிரச்சினையை போக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகள் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். இவை, உங்கள் தலைமுடியை மீண்டும் கருப்பாக்குவதற்கு, அதாவது வெள்ளை முடியை கருப்பாக மாற்ற உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : இந்த 9 பழக்கங்கள் முடி ஆரோக்கியத்தை பாதிக்கும்!
ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் தீக்ஷா பவ்சர் சவாலியா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இளநரை பிரச்சினைக்கான சில ஆயுர்வேத குறிப்புகளை பதிவிட்டுள்ளார். இது உங்கள் தலைமுடியை மீண்டும் இயற்கையாக கருப்பாக்க உதவும். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இளநரை பிரச்சினையை போக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகள்:

நாசிய கிரியா பயிற்சி
இரவு தூங்கும் முன் இரண்டு துளிகள் பசுவின் நெய்யை இரு நாசியிலும் ஒரு ஒரு சொட்டு விடவும்.
இந்த மூலிகையை சாப்பிடுங்கள்
ஆயுர்வேதத்தில் நரைமுடியை போக்க உதவும் 4 மூலிகைகள் உள்ளன. அவை, ஆம்லா, பிரிங்ராஜ், பிராமி மற்றும் கறிவேப்பிலை. இது செல்லுலார் அழுத்தத்தைக் குறைப்பதற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும், முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், இளநரையை தடுப்பதற்கும் உதவும். இவற்றின் பொடியை 1 டீஸ்பூன் காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரவில் தூங்கும் முன் நெய்யுடன் கலந்து சாப்பிட வேண்டும்.
மயிர்க்கால்களுக்கு நேரடியாக ஊட்டச்சத்தை வழங்க வழக்கமான ஷாம்பு (உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுதல்) அல்லது மூலிகை ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்தவும்.
இந்த பதிவும் உதவலாம் : Cinnamon for hair : அடர்த்தியான கூந்தலை பெற இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!
செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பம்பூ, நெல்லிக்காய், பிரமி ஆகியவற்றை முக்கிய பொருட்களாகக் கொண்ட முடி எண்ணெயைப் பயன்படுத்தலாம். உங்கள் தலைமுடியின் வகை மற்றும் உங்களுக்கு எது பொருத்தமானது என்பதைப் பொறுத்து வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மூன்று முறை உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவலாம்.
எண்ணெய் தடவ உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் ஹேர் மாஸ்கை தேர்வு செய்யலாம். உங்கள் ஹேர் மாஸ்க்கில் செம்பருத்தி, வேம்பு, யஷ்டிமது, பிராமி, நெல்லிக்காய் மற்றும் பிரிங்ராஜ் ஆகியவை உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முடியைக் கழுவுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் வாரத்திற்கு 2-3 முறை ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : அடர்த்தியான முடியை கட்டுப்படுத்த சில வழிகள்!
மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

- இனிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்பு உணவுகளை உண்ணுங்கள்.
- கறிவேப்பிலை, எள், நெல்லிக்காய், பாகற்காய் மற்றும் பசு நெய் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- சீக்கிரம் தூங்குவது மிகவும் அவசியம். உங்கள் தூக்கத்தின் தரம், உங்கள் தலைமுடியின் தரம் சிறப்பாக இருக்கும். இரவு 10 மணிக்குள் படுக்கையில் இருக்க முயற்சி செய்யுங்கள்.
- எப்போதும் உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான அல்லது அறை வெப்பநிலை நீரில் கழுவவும்.
- அனுலோம்-விலோம் மற்றும் பிராணயாமத்தை தினமும் காலை மற்றும் தூங்கும் முன் 21 முறை பயிற்சி செய்யவும்.
- இந்த வைத்தியங்களை ஒரு மாதத்திற்கு பின்பற்றுவது, இளநரை பிரச்சனையை சமாளிக்கவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் நிச்சயமாக உதவும்.
Pic Courtesy: Freepik