“யாரு பாப்பா.. இது உங்க அக்காவா?” 50 வயதில் யாராவது உங்கள் பிள்ளைகளிடம் இப்படி கேட்டால், முதலில் ஒரு வெக்கம், பிறகு ஒரு சிரிப்பு. இந்த மாதிரி சுகமான தருணங்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உணர விரும்புகிறீர்களா? வயதை வெல்லும் ரகசியம், உங்கள் பிளேட்டில்தான் உள்ளது.
வயது ஏற ஏற, தோலில் சுருக்கம், கரும்புள்ளிகள், மென்மை குறைதல் போன்றவை ஏற்பட தொடங்கும். இது இயல்பேதான். ஆனால் இதை முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும், தாமதப்படுத்த முடியும். அதற்கான முதல் படி உங்கள் உணவுப் பழக்கத்தில் துவங்க வேண்டும்.
வெளிப்புற பராமரிப்பைவிட, உள் ஊட்டச்சத்து தான் நிலையான இளமையை தரும். சில உணவுகள் உங்கள் சருமத்திற்கு தேவையான கொல்லாஜன் (collagen), ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள், நல்ல கொழுப்பு (healthy fats) போன்றவைகளைக் கொடுத்து தோலை இளமையாக வைத்திருக்க உதவுகின்றன.
இளமையை தக்கவைக்கும் சூப்பர் உணவுகள்!
அவகேடோ
நல்ல கொழுப்புகள் மற்றும் Vitamin E, C நிறைந்த அவகேடோ, கொல்லாஜன் உற்பத்தியை ஊக்குவித்து தோலை மென்மையாக்கும். இதனை சாலட், ஸ்மூத்தி, சாண்ட்விச் வடிவில் உட்கொள்ளலாம்.
சால்மன் மீன்
ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இந்த சாலமன் மீன், தோல் பளபளப்புக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் பெரிய ஆதரவாக உள்ளது. வாரத்தில் 2 முறை சாப்பிடலாம்.
தக்காளி
தக்காளியில், UV நச்சு தாக்கத்திலிருந்து தோலை காக்கும் லைசோபீன் நிறைந்துள்ளது. ஜூஸ் வடிவிலும் எடுத்துக்கொள்ளலாம், சமைத்தும் சாப்பிடலாம்.
கேரட்
பீட்டா கரோட்டீன் வாய்ந்த கேரட், Vitamin A-ஆக மாறி தோலை புதுப்பிக்க உதவுகிறது. அப்படியே சாப்பிடலாம், அல்லது ஜூஸ் மற்றும் உணவு மூலமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
பூண்டு
ஆலிசின் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்த பூண்டு, தோலை உள்முறையில் சுத்தம் செய்கிறது. குழம்பு, சட்னி, பச்சடி போன்ற வழியில் இதை உட்கொள்ளலாம்.
மேலும் படிக்க: மான்சூனில் உங்க ஸ்கின் ரொம்ப ஹெல்த்தியா இருக்க இந்த ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க
ப்ளூபெரி
மூடிய செல்கள் பழையதாய் ஆகாமல் பாதுகாக்கும் ஒர் அற்புதமான ‘சூப்பர்ஃப்ரூட்’ ப்ளூபெரி. ஓட்ஸ், ஸ்மூத்தி, யோகர்ட் ஆகியவற்றில் இணைத்து சாப்பிடலாம்.
பாதாம் மற்றும் வேர்கடலை
பாதாம் மற்றும் வேர்கடலை, Vitamin E, Zinc, selenium நிறைந்தவை. இவை தோலை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். ஒரு கைப்பிடி அளவு, தினசரி சாப்பிடலாம்.
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் பிப்ளவனாயிட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்தது. தோலை UV radiation-இல் இருந்து பாதுகாக்கும்.
உணவு மட்டுமல்ல.. இந்த பழக்கங்களும் அவசியம்..
* தினசரி 2.5–3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
* 7–8 மணி நேரம் தூங்குவது அவசியம்.
* Vitamin D கிடைக்க தினசரி 15 நிமிடம் வெளியில் இருக்கவும்.
* இயற்கை மாய்ச்சரைஸர் மற்றும் sunscreen பயன்படுத்தவும்.
* தியானம், யோகா வழியாக மன அழுத்தம் குறைக்கவும்.
குறிப்பு
50 வயதிலும் பளபளப்பாகவும், சுருக்கமின்றியும், உங்கள் பிள்ளைகளுக்கு ‘அக்கா’ போல் தோன்ற முடியும். அதற்காக வெறும் அழகு சாதனங்கள் மட்டும் போதாது. உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இங்கே சொன்ன உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்தால், வயதுக்கு எதிரான சக்தியை இயற்கையாகவே பெற முடியும்.