வயசானாலும் உங்க ஸ்கின் இளமையா இருக்கணுமா? இந்த ஐந்து உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Best anti aging foods for younger looking skin: எவ்வளவு வயதான போதிலும் சருமத்தை இளமையாக வைத்திருக்க சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இவை சருமத்தின் முதுமை அறிகுறிகளை நீக்கி, என்றென்றும் இளமையாக வைக்க உதவுகிறது. இதில் இளமை சருமத்திற்கு சாப்பிட வேண்டிய சில உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
வயசானாலும் உங்க ஸ்கின் இளமையா இருக்கணுமா? இந்த ஐந்து உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

What are the best foods for younger looking skin: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சருமம் சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இதனால் சரும எரிச்சல், அரிப்பு, கரடுமுரடானதாக, வறண்டதாக அல்லது வயதான அறிகுறிகளைக் கொண்டதாக காணப்படலாம். இது இளம் வயதிலேயே ஏற்படக்கூடிய அபாயமாக இருக்கலாம். இந்நிலையில் சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு, பராமரிப்புப் பொருள்களை மட்டும் நம்பாமல், அன்றாட உணவில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும்.

அதன் படி, உணவில் கவனம் செலுத்துவது சரும ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, தாவர அடிப்படையிலான உணவுகள் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. இதற்கு இந்த வகை உணவுகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின், பாலிபினால்கள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் போன்ற உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்கள் இருப்பதே காரணமாகும். மேலும், இந்த வகையான ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், சரும அமைப்பு மற்றும் நீரேற்றத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Grapes benefits for skin: சருமம் வைரம் போல மின்னனுமா? திராட்சையை இப்படி யூஸ் பண்ணி பாருங்க

சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் உணவுகள்

ஆரோக்கியமான மற்றும் இளமையான சருமத்தைப் பெற விரும்பும் நபர்கள் சில குறிப்பிட்ட பழங்கள், காய்கறிகள், நட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் பாலிஃபீனால் நிறைந்த பானங்களை அதிகம் உட்கொள்வது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. இந்த வகை உணவுகள் ஒவ்வொன்றுமே இளமை மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவக்கூடிய பைட்டோ கெமிக்கல்களின் தனித்துவமான கலவையை வழங்குகிறது.

பாதாம்

பாதாம் வைட்டமின் E, மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் (MUFA) மற்றும் பாலிபினால்கள் நிறைந்ததாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே சருமப் பாதுகாப்பிற்கு பங்களிக்கிறது. ஆராய்ச்சி ஒன்றில், மாதவிடாய் நின்ற பெண்கள் 16 வாரங்களுக்கு தங்கள் மொத்த தினசரி கலோரி உட்கொள்ளலில் 20% பாதாம் பருப்பை உட்கொண்டதால், நட்ஸ் இல்லாத சிற்றுண்டிகளை சாப்பிட்டவர்களுடன் ஒப்பிடுகையில் சுருக்கங்களின் ஒட்டுமொத்த தீவிரத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு ஏற்பட்டதாக ஆய்வில் கூறப்படுகிறது.

தக்காளி

இதில் லைகோபீன்கள் உள்ளது. இவை சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். குறிப்பாக, 21 முதல் 74 வயதுடைய பெண்கள் சம்பந்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 12 வாரங்களுக்கு தினமும் 55 கிராம் தக்காளி விழுதை ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து உட்கொள்வது, ஆலிவ் எண்ணெயை மட்டுமே உட்கொள்பவர்களுடன் ஒப்பிடும்போது சரும எதிர்ப்பை கணிசமாக அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இது சூரிய ஒளி மற்றும் மாசுபாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு எதிராக சருமத்தைப் பாதுகாக்க உதவும் என அறிவுறுத்துகிறது.

கோகோ

கோகோவில் ஃபிளவனோல்கள் நிறைந்துள்ளது. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 43 முதல் 86 வயதுடைய கொரியப் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தொடர்ந்து 24 வாரங்களுக்கு தினமும் 320 மி.கி ஃபிளவனோல்கள் கொண்ட கோகோ பானத்தை அருந்துவது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை கணிசமாக மேம்படுத்துகிறது. இது சருமத்தின் கரடுமுரடான தன்மையைக் குறைப்பதாகவும், சுருக்கங்களைக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Antioxidant Rich Foods: சருமம் ஜொலிக்க வேண்டுமா.? ஆன்டி ஆக்ஸிடண்ட் எடுத்துக்கோங்க…

ஆரஞ்சு

இது வைட்டமின் சி நிறைந்த சிறந்த மூலமாகும். இவை கொலாஜன் தொகுப்பு மற்றும் தோல் பழுதுபார்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, அடர் சிவப்பு சதை கொண்ட ஒரு வகை ஆரஞ்சு ஆனது சரும ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். ஆய்வு ஒன்றில், 20 முதல் 27 வயதுடைய பெரியவர்கள் 21 நாட்களுக்கு தினமும் 600 மில்லி இரத்த ஆரஞ்சு சாற்றை உட்கொள்வதால், டிஎன்ஏ சேதம் குறைந்து வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகளின் அளவு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

சோயாபீன்ஸ்

சோயாபீன்ஸில் ஐசோஃப்ளேவோன்கள் என்ற சேர்மங்கள் உள்ளது. இவை ஈஸ்ட்ரோஜனைப் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளதால், ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளுடன் தொடர்பு கொள்வதாகக் கூறப்படுகிறது. மாதவிடாய் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறைவதால் சருமத்தில் சுருக்கம், சரும வறட்சி, மோசமான காயம் குணமடைதல் போன்றவற்றுக்கு ஆளாகிறது. சோயாபீன் உட்கொள்வது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை, அதிகரித்த நீரேற்றம் மற்றும் நேர்த்தியான கோடுகளைக் குறைப்பது போன்றவற்றுடன் தொடர்புடையதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Glowing Skin: சருமம் பால் போல் பளபளக்க... இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க...!

Image Source: Freepik

Read Next

Forehead Acne: உங்களுக்கு நெற்றியில் மட்டும் பரு வருதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்க!

Disclaimer