Fri Sep 11, 2026 | 11:45 PM IST

Expert

இளம் வயதிலேயே மாதவிடாய் நிறுத்தமா? இந்த உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க..

பெண்களுக்கு இளம் வயதிலேயே ஏற்படக்கூடிய ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தத்தைத் தவிர்க்க, உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில ஆரோக்கியமான உணவுகளைச் சேர்க்க வேண்டும். இதில் ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தத்தைத் தடுக்க எந்த உணவுகள் உதவும் என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் நிகழ்வு மிகவும் பொதுவானதாகும். இது பெண்களின் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தொடங்கி, மற்றொரு குறிப்பிட்ட பருவத்தில் முடிவடையக்கூடியதாகும். மாதவிடாய் தொடக்கம் நிகழ்வது போலவே, வயது அதிகரிக்க அதிகரிக்க மாதவிடாய் நிறுத்தமும் அமைகிறது. இது ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கக்கூடிய ஒரு இயற்கையான செயல்முறையாகக் கருதப்படுகிறது. எனினும், பெரும்பாலான மக்கள் இதை ஒரு நோயாகக் கருதுகிறார்கள். உண்மையில், இது ஒரு நோயல்ல.

பெண்களின் மாதவிடாய் தொடங்குவது போலவே, மாதவிடாய் நிறுத்தமும் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகும் நின்றுவிடக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். இந்த செயல்முறை மாதவிடாய் நிறுத்தம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன், பெண்கள் தங்கள் உடலில் பல்வேறு பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். உண்மையில், அவை மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகளில் மனநிலை மாற்றங்கள், எடை அதிகரிப்பு, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை அடங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Menopause ஒரு முடிவு அல்ல… புதிய தொடக்கம்! – ஆரோக்கியமாக கடக்க டாக்டர் பால் மாணிக்கம் தரும் முக்கிய ஆலோசனைகள்!

இளம் வயதில் மாதவிடாய் நிறுத்தம்

நிபுணர்களின் கூற்றுப்படி, மாதவிடாய் நிறுத்தத்திற்கு ஏற்ற வயது 45 முதல் 55 வயது வரையாகக் கூறப்படுகிறது. எனினும், சில பெண்கள் முன்கூட்டியே மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது. மற்றவர்கள் பின்னர் அதை அனுபவிக்கலாம். இது முற்றிலும் சாதாரணமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், தற்போதைய பிரச்சனை என்னவெனில், அதிகமான பெண்கள் இளம் வயதிலேயே மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கின்ற சூழ்நிலை ஏற்படுகிறது.

இதற்கு மோசமான வாழ்க்கை முறை அல்லது மரபணு பிரச்சினைகள் போன்றவை காரணமாக இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, உணவில் சில ஆரோக்கியமான உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தத்தைத் தடுக்க முடியும். இதில் மாதவிடாய் நிறுத்தத்தை தாமதப்படுத்த உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள் குறித்து திவ்யா காந்தி டயட் & நியூட்ரிஷன் கிளினிக்கின் டயட்டீஷியன் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா காந்தி அவர்கள் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

மாதவிடாய் நிறுத்தத்தை தாமதப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள்

புரதம் நிறைந்த உணவுகள்

பொதுவாக மக்கள் புரத உணவை ஆண்களின் உடற்கட்டமைப்போடு தொடர்புபடுத்துகின்றனர். உண்மையில், புரதம் நிறைந்த உணவுகள் பெண்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கும். இதில் சிவப்பு இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுகளும் அடங்கும். எனவே, புரதம் நிறைந்த உணவை உட்கொள்வது முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தத்தைத் தடுக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். புரதம் மாதவிடாய் நிறுத்தத்தை நேரடியாகப் பாதிக்கவில்லை என்றாலும், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தத்தைத் தடுக்கிறது.

பருப்பு வகைகள் மற்றும் மீன்கள்

இவை மாதவிடாய் நிறுத்தத்தை தாமதப்படுத்த உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே, பெண்கள் சிறு வயதிலிருந்தே பல்வேறு வகையான பருப்பு வகைகளை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. மேலும், மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உணவில் சேர்த்துக் கொள்வது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது ஹார்மோன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் கருப்பைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த உணவுகளின் மூலம், பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தத்தைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மெனோபாஸ் நிலையை எளிதாக நிர்வகிக்க உதவும் எளிய பழக்க வழக்கங்கள் இதோ..

பால் பொருட்கள்

பெரும்பாலான பெண்கள் பால் குடிப்பதை விரும்பினாலும், அதை முழுவதுமாக ஒதுக்குபவர்களும் உள்ளனர். உண்மையில், உணவில் பால் பொருள்களைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது அவசியம். கூடுதலாக, பால் மற்றும் சோயா பொருட்களை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். இந்த பொருட்கள் உடல் ஆரோக்கியத்தையும், ஹார்மோன் உற்பத்தியையும் மேம்படுத்துகின்றன. இது மாதவிடாய் நிறுத்தத்தை தாமதப்படுத்த உதவுகிறது. அதாவது, பால் மற்றும் சோயா பொருட்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

வைட்டமின் டி நிறைந்த உணவுமுறை

பெண்கள் தங்கள் உணவில் வைட்டமின் டி-உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவு முறை தவிர, சூரிய ஒளியிலிருந்தும் வைட்டமின் டி பெறலாம். எனினும், வைட்டமின் டி நேரடியாக மாதவிடாய் நிறுத்தத்தை தாமதப்படுத்த உதவாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், வைட்டமின் டி ஆரம்பகால மாதவிடாய் நிறுத்த அபாயத்தைக் குறைத்து எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாத ஒன்றாகும். உண்மையில், வைட்டமின் டி கருப்பை செயல்பாட்டை பாதிக்கிறது, மேலும் பெண்கள் வயதாகும்போது, அவர்களின் முட்டைகள் பலவீனமடைகின்றன. இந்நிலையில், வைட்டமின் டி நிறைந்த உணவுகள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தத்தைத் தடுக்கின்றன.

பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள்

சிறு வயதிலிருந்தே பெண்கள் தங்கள் உணவில் ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். காய்கறிகள், குறிப்பாக பச்சை காய்கறிகள், பெண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அவை அவர்களின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்போது, ஆரம்பகால மாதவிடாய் நிறுத்த அபாயமும் குறைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பெரிமெனோபாஸ் நிலையில் குடிக்க வேண்டிய 3 அழற்சிப் பண்புகள் நிறைந்த சிறந்த பானங்கள்

Image Source: Freepik

Read Next

பெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகளும், அவற்றை சரிசெய்யும் முறைகளும்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 16, 2025 22:26 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content