How to relieve common menopause symptoms at home: ஒவ்வொரு பெண்களும் தங்களின் வயதுக்கேற்ப பல்வேறு உடல்நல மாற்றங்களைச் சந்திக்கின்றனர். பருவகாலத்தில் அவர்கள் மாதவிடாயை சந்திக்கும் நிலையைப் போன்றே, மெனோபாஸ் நிலை என்ற மாதவிடாய் நிறுத்தத்தை சந்திக்கும் நிலையையும் அடைகின்றனர். அதாவது, மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை முற்றிலுமாக நிறுத்தும் நேரத்தைக் குறிக்கிறது. பொதுவாக பெண்களுக்கு 45-55 வயதிற்குள், பெண்களின் உடலில் மாதவிடாய் நிறுத்தம் போன்ற பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. உண்மையில், இந்த நேரத்தில் கருப்பைகள் ஆண்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் இரண்டின் உற்பத்தியையும் குறைக்கிறது.
இதன் காரணமாக, மாதவிடாய் நின்று கருவுறுதல் குறையத் தொடங்குகிறது. இந்நிலையில், மாதவிடாய் நின்ற பெண்களின் உடலில் சூடான ஃப்ளாஷ்கள், மனநிலை மாற்றங்கள், தூக்கப் பிரச்சினைகள், மற்றும் மன அழுத்தம் மற்றும் யோனி வறட்சி போன்ற பல்வேறு அறிகுறிகள் காணப்படுகிறது. இந்த அறிகுறிகளால், அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது. மேலும் இது உற்பத்தித் திறனையும் பாதிக்கக்கூடும். இந்நிலையில், இந்த அறிகுறிகளைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இதில் பெங்களூரு, மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல், ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனை, முன்னணி ஆலோசகர் மருத்துவர். என். சப்னா லுல்லா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Menopause Symptoms: மாதவிடாய் நிறுத்தத்திற்கான முக்கிய அறிகுறி என்ன தெரியுமா?
மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளைக் குறைப்பதற்கான குறிப்புகள்
மருத்துவரின் கூற்றுப்படி,”மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையின் இயற்கையான கட்டம்” என விளக்குகிறார். ஆனால், அதனுடன் திடீர் சூடான ஃப்ளாஷ்கள், மனநிலை மாற்றங்கள், தூக்கப் பிரச்சினைகள் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகளும் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில், இந்த குறிப்புகளின் உதவியுடன், மெனோபாஸ் நிலையின் அறிகுறிகளை நிர்வகிக்கலாம்.
சரிவிகித உணவை உண்ணுதல்
மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளைக் குறைப்பதற்கு அன்றாட உணவில் அதிக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், ஆற்றல் அளவை சீராக வைத்திருக்கவும் வறுத்த மற்றும் இனிப்பு உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும் உதவும். உண்மையில், உணவுமுறை நம் உடலின் பல பிரச்சனைகளை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். எனவே சரியான உணவைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சுறுசுறுப்பாக இருப்பது
பொதுவாக, வயது அதிகரிக்கும் போது, உடல் அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லாமல் சோர்வாக காணப்படும். இதன் காரணமாக பல பிரச்சனைகள் எழுகின்றன. அதேசமயம், மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளை நிர்வகிக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. வழக்கமான உடற்பயிற்சி, நடைபயிற்சி போலவே, யோகா அல்லது லேசான வலிமை பயிற்சி செய்யலாம். இவை எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது மனநிலையையும் மேம்படுத்துகிறது. இதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், சிறந்த தூக்கத்திற்கும் வழிவகுக்கலாம். எனவே இந்த விஷயங்களை வாழ்க்கை முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.
தூக்கத்தை மேம்படுத்துவதற்கு
மாதவிடாய் நிற்கும் காலநிலையில் சீரான தூக்கத்தைக் கையாள வேண்டும். நாள்தோறும் ஒரே நேரத்தில் தூங்கி, படுக்கையறையை குளிர்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்திருக்கலாம். மேலும் படுக்கைக்கு முன்பாக, கனமான உணவு மற்றும் காஃபின் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நல்ல தூக்கத்தைப் பெறுவதன் மூலம் சோர்வைக் குறைத்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவை ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Menopause: மாதவிடாய் நிறுத்தம் திடீரென ஏற்படுமா அல்லது படிப்படியாக ஏற்படுமா?
மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு
ஆழ்ந்த சுவாசம், தியானம் மற்றும் உங்களுக்குப் பிடித்தமான ஒன்றில் நேரத்தைச் செலவிடுதல் போன்ற எளிய வழிகளின் மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். இந்த வழியில் மன அழுத்தத்தை நிர்வகிப்பது மாதவிடாய் காலத்தில் ஏற்பட மனநிலை ஊசலாட்டங்கள் மற்றும் பதட்டத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே, மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளால் தொந்தரவு செய்யப்பட்டால் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.
மருத்துவரை அணுகுதல்
மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதை மக்கள் பலரும் யோசிப்பதில்லை. எனினும், மருத்துவரை அணுகுவது பல பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். உதாரணமாக, மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் இது பெரிதும் உதவுகிறது. எனவே அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருந்தால், மருந்துகள், ஹார்மோன் சிகிச்சை அல்லது சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ள மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த கட்டத்தில் ஆரோக்கியமாக இருக்க வழக்கமான சுகாதார பரிசோதனைகளும் அவசியமாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் நிறுத்த அனுபவமும் வேறுபட்டது என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும், சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம், பெண்கள் மாற்றங்களை நேர்மறையாக ஏற்றுக்கொண்டு அவர்கள் தங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியும். மேலும் தினமும் எடுக்கும் சிறிய நடவடிக்கைகள் இந்த மாற்றத்தை எளிதாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Menopause symptoms: மெனோபாஸின் அறிகுறிகள் என்னென்ன? அதை எவ்வாறு கையாள்வது?
Image Source: Freepik