What are symptoms of menopause and how to manage it: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் முக்கிய நிகழ்வாகவே மாதவிடாய் சுழற்சி கருதப்படுகிறது. இது பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட வயதில் முடிவடையும். ஒரு பெண் வழக்கமாக 10 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட நேரமானது முதல் மாதவிடாய் அடையும் நேரமாகக் கூறப்படுகிறது. பெண்கள் கருவுறுதலுக்கான ஒரு முக்கிய காரணமாகவே மாதவிடாய் நிகழ்வு ஏற்படுகிறது. எனினும், இது குறிப்பிட்ட காலத்தில் முற்றிலும் நின்று விடும்.
இவ்வாறு இயற்கையாகவே, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்று விடும் நிலையானது மெனோபாஸ் நிலை என்றழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தாயாகும் திறனை இழக்கிறார்கள். மேலும் மெனோபாஸ் நிலை அவர்களின் உடல் மற்றும் மன நலத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இது ஒரு நோய் அல்ல. மாறாக, வயதுக்கு ஏற்ப பெண்களின் உடலில் ஏற்படக்கூடிய இயல்பான செயல்பாடு ஆகும். இந்த மெனோபாஸ் நிலை குறித்தும், அதன் அறிகுறிகள் மற்றும் நிர்வகிக்கக் கூடிய வழிகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Perimenopause Diet: பெரிமெனோபாஸில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
மெனோபாஸ் நிலை
மெனோபாஸ் என்பது மாதவிடாய் நிறுத்தம் ஆகும். இந்நிலையில் பாலியல் ஹார்மோன்களின் அளவு குறைகிறது. ஒரு பெண்ணுக்கு ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் மாதவிடாய் வராதபோது மாதவிடாய் நின்றதாகக் கூறப்படுகிறது. இது பொதுவாக 44 - 52 வயதிற்குள் நிகழக்கூடியதாகும். சில நேரங்களில் கருப்பைகள் மற்றும் கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதன் மூலம் இந்த மெனோபாஸ் நிலை ஏற்படுகிறது. மெனோபாஸ் நிலைக்கான அறிகுறிகளைப் பெரும்பாலான பெண்கள் அனுபவிப்பதில்லை. எனினும் சிலர் சிக்கலான அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்.
மெனோபாஸ் நிலைக்கான அறிகுறிகள் மற்றும் நிர்வகிக்கும் முறைகள்
பிறப்புறுப்பு வறட்சி அடைவது
மாதவிடாய் நின்ற பிறகு, யோனி புறணி மெலிதாகி, லூப்ரிகேஷன் குறைந்து யோனி வறட்சி மற்றும் புண் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக, உடலுறவுக்குப் பின் வலி மற்றும் அரிப்பு, எரியும் உணர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்றவை ஏற்படலாம்.
நிர்வகிக்கும் முறை
உடலுறவின் போது நீர் சார்ந்த லூப்ரிகேட்டிங் க்ரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் வறட்சியை நிர்வகிக்கலாம். மேலும், யோனியை ஈரப்பதமாகவும் மீள்தன்மையுடனும் வைத்திருக்கும் பயன்பாடு குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதன் மூலம் வறட்சி அறிகுறிகளைக் குறைக்கலாம். சிறுநீர் சங்கடமான கசிவைத் தடுக்க மருத்துவ மேற்பார்வையின் கீழ் பயிற்சி மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் இதைக் குணமாக்க அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Menopause Effects On Health: மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இது தான்.!
மாதவிடாய் நின்ற இரத்தப்போக்கு
மாதவிடாய் நின்ற பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது புறக்கணிக்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் இது புற்றுநோயாக இருக்கலாம் அல்லது பிறப்புறுப்பு மண்டலத்தின் புற்றுநோய்க்கு முந்தைய நிலைமையின் அறிகுறியாக இருக்கலாம்.
நிர்வகிப்பது எப்படி?
மருத்துவரின் ஆலோசனைப் படி, புற்றுநோய்க்கான கண்டறிதலை உறுதி செய்ய வேண்டும். மேலும், உடலுறவுக்குப் பிறகு ஏற்படும் இரத்தப்போக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது புறக்கணிக்கப்படக்கூடாத ஒன்றாகும். இது யோனி இன்ஃபெக்ஷன் போன்ற தீங்கற்ற ஒன்றின் காரணமாகவும் இருக்கலாம். எனவே இது குறித்து கவலைப்படுவதற்குப் பதிலாக மருத்துவரை அணுகுவது நல்லது.
உளவியல் அறிகுறிகள்
மெனோபாஸ் நிலையில் சோர்வு, பதட்டம், தலைவலி, மனநிலை மாற்றங்கள் மற்றும் நன்றாக தூங்க இயலாமை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
எப்படி நிர்வகிப்பது?
உளவியல் அறிகுறிகளைச் சமாளிப்பதற்கான சிறந்த வழியாக புதிய பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களை வளர்த்துக் கொள்வதாகும். சில சமூகப் பணிகளைச் செய்வதன் மூலம், கவலை மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க முடியும். எனவே தினசரி வழக்கத்தில் யோகா மற்றும் தியானத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
இவை அனைத்து மெனோபாஸ் நிலையின் அறிகுறிகள் மற்றும் அதை நிர்வகிப்பதற்கான சிறந்த முறையாகும்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு மெனோபாஸ் ஸ்டார்ட் ஆகுதுனு அர்த்தம்
Image Source: Freepik