How can thyroid be controlled naturally: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக தைராய்டு மாறிவிட்டது. பொதுவாக நம் உடலில் கழுத்துப் பகுதியில் சிறிய பட்டாம்பூச்சி வடிவில் தைராய்டு சுரப்பி காணப்படுகிறது. இது நம் உடலில் தைராய்டு செயல்பாட்டைப் பராமரிப்பதற்கும், உடலில் ஆற்றல் உற்பத்தியை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. தைராய்டு கோளாறுகளுக்கான சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் போன்றவை இருப்பினும், தைராய்டு ஆரோக்கியத்திற்கு நன்கு சமநிலையான உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது.
தைராய்டு பிரச்சனைகள்
பொதுவாக இன்று பலரும் சந்திக்கும் தைராய்டு பிரச்சனைகள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. முதலில் தைராய்டு கோளாறு என்றால் என்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். தைராய்டு கோளாறு என்பது தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும் எந்தவொரு நிலையையும் குறிக்கக் கூடியதாகும். இது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு வழிவகுக்கும் போது பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதற்கு பலர் சிகிச்சை முறைகளை நாடினாலும், ஊட்டச்சத்துக்களின் மூலமும் தைராய்டு ஆரோக்கியத்தை ஆதரிக்க சில இயற்கையான வழிகள் உள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: Thyroid Disease: உடலின் இந்த பாகங்களிலும் வலி இருக்கா? உடனே இந்த டெஸ்ட் எடுங்க... தைராய்டு அறிகுறியாக இருக்கலாம்!
ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தைராய்டு பிரச்சினைகளை நிர்வகிக்க உதவும் இயற்கை உணவு முறைகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "உங்கள் தைராய்டுக்கு ஒரு சிக்கலான திட்டம் தேவையில்லை," என்று கூறியுள்ளார். மேலும் அவர் தினசரி புரத உட்கொள்ளல், குடலுக்கு ஏற்ற உணவுகள் மற்றும் சீரான (அதிகப்படியான கட்டுப்பாடுகள் இல்லாத) உணவு உட்பட "சரியான உணவுகளில்" கவனம் செலுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
லோவ்னீத் பத்ராவின் கூற்றுப்படி, தைராய்டை இயற்கையாக நிர்வகிக்க 4 வழிகள்
குடலை குணப்படுத்துவது
ஆரோக்கியமான குடல், ஹார்மோன் உறிஞ்சுதலில் முக்கிய பங்கு வகிக்கக் கூடியதாகும். ஆனால், மோசமான குடல் ஆரோக்கியம் தைராய்டு ஹார்மோன்களை சரியாக உறிஞ்சி பயன்படுத்தும் உடலின் திறனை கணிசமாக பாதிக்கிறது. எனவே, குடல் குணப்படுத்துவதை ஆதரிக்கவும், ஒட்டுமொத்த ஹார்மோன் உறிஞ்சுதலை மேம்படுத்தவும் குடலுக்கு உகந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே புரோபயாடிக்குகள் நிறைந்த தயிர், மோர் மற்றும் புளித்த உணவுகள் போன்ற உணவுகளை அன்றாட உணவில் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நுண்ணூட்டச்சத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பது
தைராய்டு செயல்பாட்டிற்கு, அயோடின், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற முக்கிய நுண்ணூட்டச்சத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியமாகும். எனவே தைராய்டு ஆரோக்கியத்தை இயற்கையாகவே ஆதரிப்பதற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். இதற்கு உங்கள் வழக்கமான உணவில் முட்டை, கடல் உணவு, பூசணி விதைகள் மற்றும் பிரேசில் கொட்டைகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Thyroid Food: தைராய்டு ஹார்மோன்களை சமநிலையில் வைக்க நீங்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
டைரோசின் நிறைந்த உணவுகளை உண்ணுவது
டைரோசின், அயோடினுடன் இணைந்தால், தைராய்டு சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் முக்கிய ஹார்மோன்களான T3 மற்றும் T4 உற்பத்திக்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. உடல் இந்த ஹார்மோன்களை திறம்பட ஒருங்கிணைப்பதற்காக பனீர், முட்டை, பருப்பு, பாதாம், கோழி மற்றும் சால்மன் போன்ற டைரோசின் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தினைகளை அதிகமாக உட்கொள்ளக் கூடாது
தினை உடலுக்கு ஆரோக்கியமானதாகக் கருதப்பட்டாலும், அவற்றை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது முக்கியமாகும். ஏனெனில், தினந்தோறும் பஜ்ரா போன்ற தினைகளை அதிகளவு உட்கொள்வதால் உடலில் அயோடின் உறிஞ்சுதலில் தலையிடுவதுடன், அதன் பயன்பாட்டைத் தடுக்கிறது.
ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ராவின் கூற்றுப்படி, இந்த எளிய மாற்றங்களின் உதவியுடன் இயற்கையாகவே தைராய்டு செயல்பாட்டை குணப்படுத்தவும் ஆதரிக்கவும் முடியும் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: வயதுக்கு ஏற்ப தைராய்டு அளவு எவ்வளவு இருக்க வேண்டும்? மருத்துவர் தரும் குறிப்புகள் இதோ
Image Source: Freepik