வயதுக்கு ஏற்ப தைராய்டு அளவு எவ்வளவு இருக்க வேண்டும்? மருத்துவர் தரும் குறிப்புகள் இதோ

Thyroid levels by age and gender: ஆரோக்கியமாக இருக்க, சீரான தைராய்டு ஹார்மோன்கள் இருப்பது முக்கியமாகும். இது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பின், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகிறது. இதில் எந்த வயதில் தைராய்டு அளவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
  • SHARE
  • FOLLOW
வயதுக்கு ஏற்ப தைராய்டு அளவு எவ்வளவு இருக்க வேண்டும்? மருத்துவர் தரும் குறிப்புகள் இதோ

Thyroid levels chart by age and gender: தற்போதைய சூழ்நிலையில் மோசமான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையால் பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் தைராய்டு அனைவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. குறிப்பாக, பெரும்பாலான பெண்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். உண்மையில், தைராய்டு என்பது கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள ஹார்மோன்களை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு சுரப்பி ஆகும். இந்த சுரப்பியானது மனிதர்கள் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்ற வேலை செய்கிறது. மேலும், இது உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.

இந்த சூழ்நிலையில் உடல் ஆரோக்கியத்திற்கு தைராய்டு ஹார்மோனை சமநிலையில் வைப்பது முக்கியமாகும். ஏனெனில், இதன் சிறிய ஏற்ற இறக்கம் கூட உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். தைராய்டு சுரப்பி அதிகப்படியான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நிலை ஹைப்பர் தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. அதே போல, ஹார்மோன் உற்பத்தி மிகக் குறைவாக இருப்பது ஹைப்போ தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு சூழ்நிலைகளுமே ஆபத்தானவை ஆகும். எனவே உடல் ஆரோக்கியத்திற்கு தைராய்டு ஹார்மோன்கள் சமநிலையில் இருப்பது முக்கியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Thyroid Food: தைராய்டு ஹார்மோன்களை சமநிலையில் வைக்க நீங்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

வயது மற்றும் பாலினத்திற்கு ஏற்ப இருக்க வேண்டிய தைராய்டு அளவு

பொதுவாக அனைத்து பாலினத்தவர்களும் வயதுடையவர்களும் தைராய்டு நோயால் பாதிக்கப்படலாம். எனினும், அதன் அளவு மாறுபட்டு இருக்கும். இது குறித்து பெங்களூரு ஹெப்பால் மணிப்பால் மருத்துவமனையின் ஆலோசகர் நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் டாக்டர் அபிஜீத் போக்ராஜ், அவர்கள் கூறுகையில், “தைராய்டு அனைத்து வயது மற்றும் பாலின மக்களையும் பாதிக்கலாம். ஆனால், பெண்களில் தைராய்டு நோய் அதிகமாகக் காணப்படுகிறது.

ஆனால், ஆண்களுக்கு தைராய்டு நோய் வராது என்பத் அர்த்தமல்ல. ஆண்கள் இதை வயதான காலத்திலும் பெற வாய்ப்புள்ளது. இதற்குக் காரணம் தன்னுடல் எதிர்ப்பு சக்தி ஆகும். இதனால் இளையோர் கூட பாதிக்கப்படுகின்றனர். ஒருவருக்கு தைராய்டு பிரச்சினைகள் இருந்தால், சிக்கலான தைராய்டு பிரச்சினைகளுக்கு ஒரு நிபுணரை அணுகுவது அவசியமாகும்” என்று கூறியுள்ளார்.

18-30 வயதுடைய நபர்களின் தைராய்டு அளவு

ஆண்களுக்கான, சாதாரண தைராய்டு அளவு 0.5-4.15 mIU/L ஆக இருக்க வேண்டும். இதில் தைராய்டு அளவு 0.5 mIU/L க்கும் குறைவாக இருந்தால் அது குறைவாக இருக்கும். அதேசமயம் தைராய்டு அளவு 4.5 mIU/L க்கும் அதிகமாக இருந்தால் அதிகமாக இருக்கும்.

மேலும் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சாதாரண தைராய்டு அளவு 0.4-2.34 mIU/L ஆக இருக்க வேண்டும்.

31-50 வயதுடைய நபர்களின் தைராய்டு அளவு

இந்த வயதுக்கு இடைப்பட்ட ஆண்களுக்கு தைராய்டு அளவு 0.5 முதல் 4.15 mIU/L வரை இருக்க வேண்டும். ஆனால், இந்த குறிப்பிடப்பட்ட அளவை விடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

மேலும், 30-49 வயதுடைய பெண்களின் தைராய்டு அளவு 0.4-4.0 mIU/L ஆக இருக்க வேண்டும். இதில் அவர்களின் தைராய்டு அளவு 0.4 mIU/L க்கும் குறைவாக இருந்தால், அது ஹைப்போ தைராய்டிசத்திற்கு வழிவகுக்கலாம். இந்த அளவை விட அதிகமாக இருப்பதும் தீங்கு விளைவிக்கும்.

51-70 வயதுடைய நபர்களின் தைராய்டு அளவுகள்

51 முதல் 70 வயதுடைய ஆண்களுக்கான சாதாரண தைராய்டு அளவுகள் 0.5-4.59 mIU/L ஆக இருக்க வேண்டும். ஆனால், இந்த குறிப்பிட்ட வயது வரம்புடைய ஆண்களுக்கு 0.5 mIU/L க்கும் குறைவாகவோ அல்லது 4.6 mIU/L க்கும் அதிகமாகவோ தைராய்டு அளவுகள் இருப்பது ஆரோக்கியத்திற்கு மோசமானதாக இருக்கலாம்.

50-70 வயதுடைய பெண்களுக்கு சாதாரண தைராய்டு அளவு 0.46-4.68 mIU/L ஆக இருக்கலாம். இதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பின், பெண்களில் தைராய்டு அறிகுறிகள் தோன்றலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Common causes of thirst: எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் மீண்டும் மீண்டும் தாகம் எடுக்குதா? உஷார் இந்த நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்!

71-90 வயதுடைய நபர்களின் தைராய்டு அளவுகள்

71 முதல் 90 வயதுடைய ஆண்களுக்கு தைராய்டு அளவு 0.4-5.49 mIU/L ஆக இருப்பது உடல் ஆரோக்கியமாக இருப்பதைக் குறிக்கிறது. இதில் 0.4 mIU/L க்கும் குறைவாக இருப்பின், ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள் தோன்றலாம். அதே சமயம், தைராய்டு அளவு 5.5 mIU/L ஐ விட அதிகமாக இருந்தால், ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள் தோன்றக்கூடும்.

கர்ப்ப காலத்தில் தைராய்டு அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

காசியாபாத், புளோரஸ் மருத்துவமனையின் டாக்டர் எம்.கே. சிங், எம்.டி., அவர்கள் TSH அளவுகளை பகிர்ந்துள்ளார். அதன் படி, தைராய்டு ஹார்மோன்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியைப் பாதிக்கலாம். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில். 12 வாரங்களில் குழந்தை தானாகவே தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யத் தொடங்கும். அதுவரை, குழந்தை தாயிடமிருந்து தைராய்டு ஹார்மோன்களின் பரிமாற்றத்தை முழுமையாகச் சார்ந்திருக்கிறது.

கர்ப்ப காலத்திலும் ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் இரண்டும் ஏற்படலாம். அதன் படி, கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் தைராய்டு அளவு 0.2 முதல் 2.5 mIU/L வரை இருக்க வேண்டும். அதற்கு அடுத்து, இரண்டாவது மூன்று மாதங்களில் தைராய்டு அளவு 0.3-3.0 mIU/L ஆக இருக்க வேண்டும். மேலும் மூன்றாவது மூன்று மாதங்களில் சாதாரண தைராய்டு அளவு 0.8-5.2 mIU/L ஆக இருக்க வேண்டும்.

இந்த குறிப்பிடப்பட்ட தைராய்டு அளவு இதை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில், இது ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் போன்ற நிலைமைகளை ஏற்படுத்துகிறது. இது பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Thyroid Disease: உடலின் இந்த பாகங்களிலும் வலி இருக்கா? உடனே இந்த டெஸ்ட் எடுங்க... தைராய்டு அறிகுறியாக இருக்கலாம்!

Image Source: Freepik

Read Next

இரும்புச்சத்து குறைபாடு: இந்த அறிகுறிகளை எக்காரணம் கொண்டும் புறக்காணிக்காதீர்கள்!

Disclaimer