Fri Sep 11, 2026 | 11:30 PM IST

PCOS-ஐ இயற்கையாகவே நிர்வகிக்க தினமும் நீங்க செய்ய வேண்டிய பழக்கங்கள்

PCOS உடன் வாழ்வது ஒரு சவாலான பாதையாக அமைகிறது. எனினும் சில ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையுடன் இதை நிர்வகிக்க முடியும். இதில் PCOS-ஐ இயற்கையான முறையில் நிர்வகிப்பதற்கான குறிப்புகளைக் காணலாம்.

இன்று பலருக்கும் PCOS உடன் வாழ்வது ஒரு சவாலான பயணமாக அமைகிறது. எனினும், சில ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுமுறை மாற்றங்களின் உதவியுடன் இதை சரிசெய்யலாம். சிலருக்கு PCOS-ன் அறிகுறிகள் அதிகமாக தோன்றலாம். எனினும் இதை சில ஆரோக்கியமான முறையில் நிர்வகிக்க முடியும். சரியான உணவுத் தேர்வுகள் மற்றும் தினசரி பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், PCOS உள்ள நபர்கள் தங்கள் அறிகுறிகளைக் குறைக்கலாம்.

இவ்வாறு PCOS-ஐ நிர்வகிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா தனது இன்ஸ்டாகிராமில் PCOS மேலாண்மை குறித்த தனது நுண்ணறிவுகளைப் பகிர்ந்துள்ளார். அதன் படி, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மூன்று முக்கியமான தினசரி பழக்கங்களை எடுத்துக் கூறியுள்ளார். மேலும் இந்த பழக்கங்கள் எளிமையானவை மற்றும் சக்திவாய்ந்தவை ஆகும். இதில் PCOS-ஐ நிர்வகிக்க உதவும் ஆரோக்கியமான பழக்கங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: PCOS உள்ள பெண்கள் ஈசியா உடல் எடையைக் குறைக்க... இந்த 7 உடற்பயிற்சிகள் கைகொடுக்கும்...!

PCOS-ஐ நிர்வகிக்க உதவும் சிறந்த உணவுகள்

PCOS-ஐ நிர்வகிப்பதில் குறிப்பிட்ட உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே சமயம், முழு உணவுகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் மெலிந்த புரதங்கள் நிறைந்த ஒரு சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது PCOS அறிகுறிகளைப் போக்க உதவுகிறது. குறிப்பாக, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகள் இதற்கு மிகவும் நன்மை பயக்கும்.

PCOS-ஐ பாதிக்கும் மோசமான உணவுகள்

PCOS-ஐ நிர்வகிக்க ஆரோக்கியமான உணவுகள் இருந்த போதிலும், இதன் அறிகுறிகளை அதிகரிக்கக்கூடிய சில உணவுகளும் உள்ளது. இந்த உணவுகளைக் கட்டுப்படுத்துவது அல்லது தவிர்ப்பது அவசியமாகும். இதில் சர்க்கரை பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் போன்றவை அடங்கும்.

இயற்கையாகவே PCOS-ஐ நிர்வகிக்க உதவும் பழக்க வழக்கங்கள்

ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் குறிப்பிட்டபடி, இந்த எளிய பழக்க வழக்கங்களின் உதவியுடன் நாம் இயற்கையாகவே PCOS-ஐ நிர்வகிக்கலாம்.

நாளை வெதுவெதுப்பான நீரில் தொடங்குவது

தேநீர் அல்லது காபியுடன் நாளைத் தொடங்குவதற்குப் பதிலாக, இலவங்கப்பட்டை தூள் அல்லது ஆப்பிள் சீடர் வினிகர் கலந்த வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இவை தொப்பை கொழுப்பைக் குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. நிபுணரின் கூற்றுப்படி, காலையில் முதலில் காஃபின் உட்கொள்வது, குறிப்பாக வெறும் வயிற்றில், கார்டிசோல் அளவை அதிகரித்து இன்சுலின் உணர்திறனை எதிர்மறையாக பாதிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: PCOS ஆல் எடை குறைப்பதில் சிரமமா? இதோ நிபுணர் சொன்ன வெயிட்லாஸ் சீக்ரெட்  

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது

எழுந்தவுடன் முதல் ஒரு மணி நேரத்தில் உட்கார்ந்த வாழ்க்கை முறையைத் தவிர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்துகிறார். இதற்கு ஜிம்மிற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஒரு எளிய பொழுதுபோக்கு நடைப்பயிற்சி போதுமானதாகும். முதல் ஒரு மணி நேரத்திற்குள் உடல் செயல்பாட்டை மேற்கொள்வது, வெறும் 10 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது போன்றவை உதவும். அதிகாலை எந்த அசைவும் இல்லாதது இன்சுலின் செயல்பாட்டைக் குறைத்து ஹார்மோன்களை மந்தமாக வைத்திருக்கும்.

View this post on Instagram

A post shared by Lovneet Batra (@lovneetb)

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது

நார்ச்சத்துகள் மற்றும் புரதம் நிறைந்த ஊட்டமளிக்கும் காலை உணவை எப்போதும் சாப்பிட வேண்டும் என நிபுணர் அறிவுறுத்துகிறார். ஏனெனில், காலை உணவைத் தவிர்ப்பது உடலுக்கு மிகவும் தேவைப்படக்கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இழக்கச் செய்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குவதுடன், நாளின் பிற்பகுதியில் பசியை அதிகரிக்கலாம். எனவே ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நிபுணரின் கூற்றுப்படி, இந்த 3 பழக்கங்களை அன்றாட வழக்கத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம், PCOS அறிகுறிகளை நிர்வகிக்கலாம். இதன் மூலம் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: PCOS பிரச்சனையால் அவதியா? இந்த விதைகளை உங்க டயட்ல சேர்க்க மறக்காதீங்க

Image Source: Freepik

Read Next

பிரசவத்திற்குப் பிறகு வரும் முதல் பீரியட்ஸ்.. மருத்துவர் சொன்ன இந்த தகவல்களை நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content