Doctor Verified

PCOS-ஐ எளிதில் சமாளிக்கலாம்! – நிபுணர் டிப்ஸ்

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது பல பெண்களை பாதிக்கும் ஹார்மோன் கோளாறு. இதை எவ்வாறு உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் கட்டுப்படுத்தலாம் என்பதை டாக்டர் பால் மணிக்கம் விளக்குகிறார்.
  • SHARE
  • FOLLOW
PCOS-ஐ எளிதில் சமாளிக்கலாம்! – நிபுணர் டிப்ஸ்


பெண்களிடம் பொதுவாகக் காணப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) குறித்து குடல்நோய் நிபுணர் டாக்டர் பால் மணிக்கம் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். பெண்களில் 10-ல் ஒருவர், இந்த PCOS பிரச்னையால் பாதிக்கப்படுகிறார். இது மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன் நிலை, தோல், முடி மற்றும் கருப்பை செயல்பாடு ஆகியவற்றை சீர்குலைக்கிறது.

இது பொதுவான பிரச்சினை என்றாலும், பலர் இதைப் பற்றி தவறாக புரிந்து கொள்வது வழக்கமாக உள்ளது என்று டாக்டர் பால் கூறுகிறார். இதை எவ்வாறு உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் கட்டுப்படுத்தலாம் என்பதை அவர் விளக்குகிறார்.

artical  - 2025-08-25T124528.703

PCOS-இன் முக்கிய அறிகுறிகள்

* ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி

* முகப்பரு மற்றும் எண்ணெய் சருமம்

* முகம் மற்றும் உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி

* உச்சந்தலையில் முடி கொட்டுதல் அல்லது மெலிதல்

* வயிற்றுப்பகுதியில் அதிக எடை சேர்தல்

* கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்

* மனநிலை மாற்றங்கள், பதட்டம், மனச்சோர்வு

* கழுத்து, அக்குள் போன்ற பகுதிகளில் கருமை தோல் புள்ளிகள்

இந்த பதிவும் உதவலாம்: PCOS, PCODக்கு உதவும் Top 5 ஆயுர்வேத உணவுகள் - நிபுணர் பரிந்துரை

PCOS ஏன் வருகிறது?

இதற்குக் காரணம் இன்னும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை. ஆனால் மரபியல், இன்சுலின் எதிர்ப்பு, மற்றும் ஆண் ஹார்மோன் (ஆண்ட்ரோஜன்) அதிகரிப்பு ஆகியவை முக்கிய காரணிகளாக இருக்காலம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

PCOS எப்படி கண்டறியப்படுகிறது?

* ஒழுங்கற்ற மாதவிடாய்.

* இரத்த பரிசோதனையில் அதிக ஆண்ட்ரோஜன்.

* அல்ட்ராசவுண்டில் கருப்பையில் சின்ன சிஸ்ட் காணப்படுதல் போன்ற அம்சங்கள் பார்க்கப்படுகின்றன.

which-is-the-best-exercise-for-pcos-main

கட்டுப்படுத்தாமல் விட்டால் ஏற்படும் ஆபத்துகள்

PCOS-ஐ சரியாக கவனிக்காமல் விட்டால்,

* வகை 2 நீரிழிவு,

* உயர் இரத்த அழுத்தம்,

* இதய நோய்,

* கருவுறாமை,

* கடுமையான மனச்சோர்வு போன்ற ஆபத்துகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆய்வுகளின் படி, PCOS உள்ள பெண்களில் 75% பேருக்கு இன்சுலின் எதிர்ப்பு காணப்படுகிறது. இது உடலில் வீக்கம் (inflammation) ஏற்பட வழிவகுக்கிறது.

இதையும் படிங்க: PCOS ஹார்மோன் சமநிலையை சரிசெய்ய உதவும் 5 சக்திவாய்ந்த பானங்கள்!

PCOS-ஐ கட்டுப்படுத்தும் நிபுணர் பரிந்துரைகள்

வாழ்க்கை முறை மாற்றங்கள்

* தினசரி உடற்பயிற்சி (நடைபயிற்சி, யோகா, வலிமை பயிற்சி)

* மன அழுத்தத்தை குறைத்தல்

* எடையை கட்டுப்படுத்தல் (சிறிய அளவு எடை குறைப்பு கூட உதவும்)

* போதுமான தூக்கம் பெறுதல்

* நிபுணர் உணவியல் ஆலோசனையைப் பின்பற்றுதல்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

* வறுத்த உணவுகள் (சிப்ஸ், வறுத்த கோழி)

* வெண்ணெய், நெய், சிவப்பு இறைச்சி

* இனிப்புகள், கேக், குளிர்பானங்கள்

* வெள்ளை ரொட்டி, பீட்சா, வெள்ளை அரிசி

* ஆல்கஹால் மற்றும் குளுகுளுப்பான பானங்கள்

View this post on Instagram

A post shared by Dr. Pal's NewME (@dr.pals_newme)

சேர்க்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்

* ஒமேகா-3 நிறைந்த மீன்கள் (சால்மன் போன்றவை)

* ஆலிவ் எண்ணெய், பருப்பு வகைகள், பட்டாணி

* முழு பழங்கள் (நார்ச்சத்து அதிகம்)

* முழு தானியங்கள் (பழுப்பு அரிசி, ஓட்ஸ், பார்லி)

* இலை கீரைகள், ப்ரோக்கோலி, காளான்

* தண்ணீர், மூலிகை தேநீர்

இறுதியாக..

PCOS வாழ்க்கையை சிரமமாக்கும் நிலையில் இருந்தாலும், சரியான வழிகாட்டுதலுடன் அதை எளிதாக கட்டுப்படுத்த முடியும். “உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சி, மன அமைதி — இவை மூன்றையும் பின்பற்றினால் PCOS-ஐ சமாளிக்க முடியும்” என டாக்டர் பால் மணிக்கம் தெரிவித்துள்ளார்.

Read Next

மார்பகத்தில் மாற்றம் தெரியுதா? உடனே கவனிக்கணும்.. இது உடம்பு அனுப்பும் எச்சரிக்கை அறிகுறி!

Disclaimer

குறிச்சொற்கள்