Doctor Verified

உறக்கம் தான் ஆரோக்கியத்தின் ரகசியம்! எந்த வயதில் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? மருத்துவர் விளக்கம்..

மனிதரின் ஆரோக்கியத்திற்கு உறக்கம் முக்கியம். National Sleep Foundation வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவர் Isac Abbas ஒவ்வொரு வயதிலும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதைக் கூறுகிறார். முழு விவரங்கள் இங்கே. 
  • SHARE
  • FOLLOW
உறக்கம் தான் ஆரோக்கியத்தின் ரகசியம்! எந்த வயதில் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? மருத்துவர் விளக்கம்..


“சாப்பாடு இல்லாமல் ஒருவன் சில நாட்கள் வாழலாம், ஆனால் தூக்கம் இல்லாமல் நீண்ட நாள் வாழ முடியாது” என்று மருத்துவ உலகம் வலியுறுத்துகிறது. உடலுக்கு ஆற்றல் தருவது உணவு என்றால், அந்த ஆற்றலைச் சீர்படுத்தி பயன்படுத்த வைக்கும் சக்தி தான் உறக்கம்.

சமீபத்தில் அமெரிக்காவின் National Sleep Foundation வெளியிட்ட ஆய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவர் Isac Abbas ஒவ்வொரு வயதினரும் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்பதை விளக்குகிறார்.

தூக்கமின்மை – ஒரு ‘அமைதியான எதிரி’

இரவு முழுவதும் சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் முழுவதும் மனஅழுத்தம், சோர்வு, எரிச்சல், நினைவாற்றல் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் நீண்டகால தூக்கமின்மை இதய நோய், சர்க்கரை நோய், உடல் எடை அதிகரிப்பு, மன அழுத்த நோய் போன்றவற்றிற்கும் வழிவகுக்கிறது

how to get sleep at night

எந்த வயதில் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

National Sleep Foundation பரிந்துரையின் படி:

* 0 – 3 மாத குழந்தைகள், தினமும் 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்க வேண்டும். குறைந்தபட்சம் 11 மணி நேரம், அதிகபட்சம் 19 மணிநேரத்தைத் தாண்டக்கூடாது.

* 4 -11 மாத குழந்தைகள், 12 – 15 மணி நேரம் தூக்கம் அவசியம். குறைந்தது 10 மணி நேரம் தூங்கினால் போதும், ஆனால் 18 மணி நேரத்தை மீறக் கூடாது.

* 1 – 2 வயது குழந்தைகள், தினமும் 11 முதல் 14 மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டும். குறைந்தது 9 மணி நேரம், அதிகபட்சம் 16 மணி நேரம் தூக்கம் கட்டாயம்.

* 3 – 5 வயது பிள்ளைகள், 10 – 13 மணி நேரம் பரிந்துரை. 8 மணி நேரத்திற்குக் குறைவோ அல்லது 14 மணி நேரத்தை மீறினாலோ உடல்நலம் பாதிக்கும்.

* 6 – 13 வயது பள்ளி செல்லும் குழந்தைகள், தினசரி 9 முதல் 11 மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டும். 7 மணிநேரத்திற்குக் குறைவோ, 12 மணிநேரத்திற்கும் மேலோ தூங்கக் கூடாது.

* 14 – 17 வயது பருவ வயதில் உள்ளவர்கள், 8 – 10 மணி நேரம் தூங்க வேண்டும். 7 மணிநேரத்திற்குக் குறைவோ அல்லது 11 மணிநேரத்திற்கும் மேலோ தூங்கினால் உடல்நலம் பாதிக்கப்படும்.

* 18 – 25 வயது உள்ளவர்கள், தினமும் 7 வரை 9 மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மணி குறையக்கூடாது.

இந்த பதிவும் உதவலாம்: சீக்கிரம் தூங்க இந்த 3 பொருட்களை பாலில் கலந்து குடிங்க.. 

தூக்கத்தை கெடுக்கும் பழக்கங்கள்

அடிக்கடி காபி, மது, எனர்ஜி டிரிங்க்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்வது, மொபைல், லேப்டாப் போன்ற டிஜிட்டல் சாதனங்களை தூங்கும் நேரத்திற்கு முன்பு அதிகமாகப் பயன்படுத்துவது, அலாரம், செயற்கை விளக்குகள், சூரிய வெளிச்ச குறைபாடு ஆகியவையும் உடலின் இயல்பான தூக்க சுழற்சியை பாதிக்கின்றன.

Main

நல்ல தூக்கத்திற்கான ஆலோசனைகள்

* தினமும் ஒரே நேரத்தில் படுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* தூங்குவதற்கு முன் மொபைல், டிவி பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

* சத்தான உணவு, ஒழுங்கான உடற்பயிற்சி தூக்கத்தை மேம்படுத்தும்.

* இரவு நேர காபி, டீ, மது தவிர்க்கப்பட வேண்டும்.

இறுதிச் சொல்..

நல்ல உறக்கம் = நல்ல ஆரோக்கியம்” என்பது மருத்துவர் Isac Abbas வலியுறுத்தும் முக்கியமான செய்தி. உணவு, உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ அதே அளவில் உறக்கமும் அவசியம். எனவே, உங்கள் வயதுக்கு ஏற்ப சரியான தூக்க நேரத்தை பின்பற்றி, நீண்ட ஆயுளும் ஆரோக்கியமான வாழ்க்கையும் பெறுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Read Next

Flower Allergy பற்றி தெரியுமா? மலர்கள் எல்லோருக்கும் ஏற்றதல்ல – தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை இதோ!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்