Should Women Get More Sleep Than Men: தூக்கம் என்பது அனைத்து வயதினரும் பெற வேண்டிய ஒன்றாகும். ஆனால் இன்று பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதியுறுகின்றனர். ஏனெனில் நல்ல தூக்கம் என்பது உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல், நல்ல மன ஆரோக்கியத்திற்கும் அவசியமான ஒன்றாகும். மேலும் ஒவ்வொருவரின் வயதைப் பொறுத்து ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு நாளும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். ஒரு நாளைக்கு எவ்வளவு தூக்கம் போதுமானது என்பது ஒருவரின் வயதைப் பொறுத்து மட்டுமல்லாமல், பாலினத்தைப் பொறுத்தும் அமையும் எனக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Cardiac Disease after Pregnancy: பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு இதய நோய்களின் ஆபத்து ஏன் அதிகரிக்கிறது?
எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, 26 முதல் 64 வயது கொண்ட இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 7 முதல் 9 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். மேலும், 64 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்கலாம். பள்ளி வயது குழந்தைகள் மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்கு சுமார் 9 முதல் 10 மணி நேரத்திற்கும் அதிகம் தூக்கம் தேவைப்படுகிறது.
ஆண்களுக்கா? பெண்களுக்கா?
தூக்கத்தைப் பொறுத்த வரை, ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கே அதிக நேரம் தூக்கம் தேவைப்படுகிறது. அதன் படி, ஆண்களை விட பெண்களுக்கு 20 நிமிடம் அதிக தூக்கம் தேவைப்படலாம். ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் அதிகளவு தூக்கமின்மை அனுபவிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுவதற்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம்.
பெண்களுக்கு ஏன் அதிக தூக்கம் தேவை?
மோசமான தூக்கம்
சில வாழ்க்கை நிலைகள் மற்றும் உடலியல் மாற்றங்களால் பெண்கள் சரியான தூக்கம் பெற இயலவில்லை. இவர்கள் அமைதியற்றவர்களாகி, இளமைப்பருவத்தில் தூக்கமின்மை பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். இதனால் தூக்கத்தின் தரம் நன்றாக இல்லாமல் போகலாம். இதன் காரணமாக பெண்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவைப்படுகிறது.
ஹார்மோன் மாற்றங்கள்
மாதவிடாய், கர்ப்ப காலம், மாதாந்திர மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்டவை பெண்களுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இது பெண்களின் உடல் மற்றும் உணர்ச்சியில் மாற்றங்களை ஏற்படுத்தி தூக்கத்தின் தரத்தை பாதிக்கிறது. மேலும் உடல் அசௌகரியத்தையும் வலியையும் தருகிறது. இதனால் பெண்களுக்குக் கூடுதல் ஓய்வு தேவைப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Bone Health Strengthening Tips: மாதவிடாய் நிற்கும் முன் ஏற்படும் மூட்டு வலி. எப்படி தவிர்ப்பது?
பிஸியான கால அட்டவணை
ஆண்களை விட பெண்களுக்கு பிஸியான கால அட்டவணை உண்டு. பெண்கள் வீட்டு வேலைகளைக் கவனிப்பது, குழந்தைகளை கவனித்துக் கொள்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு அதிக ஓய்வு பெறுவதில் சிக்கல் உண்டாகலாம். மேலும் இதற்கு மன ஆற்றலும் தேவைப்படுகிறது. போதுமான தூக்கமின்மையால் உடல் மற்றும் மனதில் பாதிப்பு ஏற்படலாம்.
அமைதியற்ற கால் நோய்க்குறி
பெண்கள் பலரும் கால் நோய்க்குறியால் அவதிப்படுகின்றனர். இது கால்களை நகர்த்துவதற்கான கட்டுப்பாடற்ற தூண்டுதலை ஏற்படுத்தலாம். குறிப்பாக இதன் அறிகுறிகள் மாலை மற்றும் இரவில் மோசமாகலாம். இதனால் பெண்களுக்கு இரவில் நன்றாக தூங்குவதில் சிக்கல் உண்டாகலாம்
அதிக எடை
ஆண்களை விட பெண்கள் உடல் எடையைக் குறைப்பது கடினமே ஆகும். மேலும் இதற்கு சரியான அளவு தூக்கம் இல்லாதது காரணமாகலாம். ஏனெனில் தூக்கமின்மையால் உடல் எடை அதிகரிப்பு ஏற்படும். தூக்கமின்மை கார்டிசோல் எனப்படக்கூடிய மன அழுத்த ஹார்மோனை வெளியிடுவதற்கு வழிவகுக்கிறது. இது பசியை அதிகரிப்பதுடன், உடல் பருமனுக்கு வழிவகுக்கலாம்.
நல்ல இரவு தூக்கத்திற்கான வழிகள்
இரவு நேரங்களில் நல்ல தூக்கத்தைப் பெற சில வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
- தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருக்க வேண்டும்.
- இரவில் காபி, டீ அல்லது மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- உறங்கச் செல்லும் ஒரு மணி நேரம் முன்னதாகவே லேப்டாப், ஸ்மார்ட்போன், மற்றும் டிவி பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.
- நல்ல தரமான படுக்கை அல்லது மெத்தை துணியைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Postpone Periods Tips: மாதவிடாய் தள்ளிப் போக இயற்கை வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க
Image Source: Freepik