பொதுவாக, கர்ப்பிணி பெண்களும், புதிய தாய்மார்களும் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது அவசியமாகும். அதிலும் புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தையின் சிறிய செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் குறிப்பாக, குழந்தைகள் பிறந்த பிறகு பெற்றோருக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை அவர்களைத் தூங்க வைப்பதே ஆகும். ஏனெனில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் பிறந்த பிறகு முதல் சில நாட்களுக்கு அதிக நேரம் தூங்குவர்.
ஆனால் அவர்கள் வயதாகும்போது, அவர்களின் தூக்க நேரம் குறையக்கூடும். குழந்தைகளின் மன மற்றும் உடல் வளர்ச்சிக்கு போதுமான தூக்கம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் அவர்களின் தூக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியனாகும். எனவே, குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்ப பகலில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் சான்றளிக்கப்பட்ட குழந்தை தூக்க ஆலோசகர் சாஹிபா மதன் அவர்கள், ஒரு குழந்தை அவர்களின் வயதுக்கு ஏற்ப எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Baby Sleep Tips: குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுகிறதா? காரணம் இதுவாக இருக்கலாம்!
குழந்தைகள் தங்கள் வயதைப் பொறுத்து பகலில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
3 முதல் 4 மாத குழந்தை ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?
3 முதல் 4 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு பகலில் குறைந்தது 5 மணிநேரம் தூக்கம் தேவைப்படுகிறது. இந்த வயது வரையிலான குழந்தைகள் விரைவான உடல் மற்றும் மன வளர்ச்சியை அனுபவிப்பர். மேலும், அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி தூக்கத்தின் போது நிகழ்கிறது.
எனவே தான், இந்த வயதில் குழந்தைகள் அதிக நேரம் தூங்குவார்கள். இந்நிலையில், அவர்கள் பகலில் 3-4 முறை குறுகிய தூக்கம் எடுப்பது இயல்பானதாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு அதிக தூக்கம் தேவையில்லை. அவர்கள் பகலில் 5 மணி நேரத்திற்கு மேல் தூங்கக்கூடாது.
5 முதல் 7 மாதங்களுக்கு இடையில் ஒரு குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
5 முதல் 7 மாதங்கள் வரையியான குழந்தைகள், அவர்களின் பகல்நேர தூக்க நேரம் சுமார் 4 மணி நேரமாக இருக்கும். இந்த வயது வரம்பில் அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகி, அவர்களின் தசைகள் வலுவடையத் தொடங்குகின்றன. மேலும், அவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களைக் கவனித்து நகர்வதன் மூலம் கற்றுக்கொள்கின்றனர்.
இந்த வயதில், குழந்தைகள் அதிக விழிப்புடன் இருப்பார்கள். மேலும் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களால் அதிக உற்சாகத்தை அடைவார்கள். எனவே, அவர்களின் பகல்நேர தூக்க நேரமும் குறைகிறது. சில குழந்தைகளுக்கு இன்னும் சிறிது தூக்கம் தேவைப்பட்டாலும், பகலில் 4 மணி நேரத்திற்கு மேல் தூங்கக்கூடாது.
7 முதல் 9 மாத குழந்தை பகலில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
இந்த வயது வரம்புடைய குழந்தைகள், பகல் நேரத்தில் தூங்குவது குறைவாக இருக்கும். ஏனெனில், இந்த வயதில், குழந்தைகள் பொதுவாக பகலில் அதிக நேரம் விழித்திருந்து, நல்ல இரவுநேர தூக்கப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளத் தொடங்குவார்கள்.
இந்த சமயத்தில், பகல்நேர தூக்கம் 3.5 மணிநேரமாக இருக்க வேண்டும். இந்த வயதில் குழந்தைகளின் உடல் வளர்ச்சி வேகமாக இருக்கும், மேலும் அவர்கள் ஊர்ந்து செல்லவும், உட்காரவும், நகரவும் தொடங்குவார்கள். எனவே, அவர்கள் அதிக நேரம் விழித்திருப்பதுடன், பகலில் குறைவான தூக்கத்தைப் பெறுவார்கள்.
இந்த பதிவும் உதவலாம்: உங்க குழந்தையை சீக்கிரம் தூங்க வைக்க... இந்த ரெண்டு வழிய பாலோப் பண்ணுங்க!
10 முதல் 24 மாத குழந்தை ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?
10 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு பகல்நேர தூக்கம் 2 முதல் 3 மணிநேரம் வரை இருக்க வேண்டும். இந்த வயதில் குழந்தைகள் குறுகிய இடைவெளியில் தூங்குவார்கள். மேலும், அவர்கள் அதிக சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
குறிப்பாக, அவர்கள் விளையாட்டு, கற்றல் மற்றும் உடல் செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர். இது அவர்களின் பகல்நேர தூக்கத்தைக் குறைக்கிறது. எனினும், அவர்களின் இரவுநேர தூக்க முறைகள் மிகவும் நிலையானவை ஆகும். மேலும் அவர்கள் இரவில் நன்றாக தூங்குவார்கள். எனவே, இந்த வயது குழந்தைகளுக்கு பொதுவாக 2 முதல் 3 மணிநேர பகல்நேர தூக்கம் போதுமானதாக இருக்கும். ஆனால் சிலர் சிறிது நேரம் தூங்கலாம்.
முடிவுரை
ஒவ்வொரு குழந்தைகளும் அவரவர்களின் தூக்கத் தேவைகளுக்கேற்ப மற்றொன்றிலிருந்து வேறுபடலாம். எனவே, குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு, இரவும் பகலும் போதுமான மற்றும் நல்ல தூக்கம் கிடைப்பது முக்கியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Kids Sleep Tips: உங்கள் பிள்ளைகள் இரவில் சீக்கிரமா தூங்காமல் அடம் பிடிக்கிறார்களா? இந்த உணவை ஊட்டுங்க!
Image Source: Freepik
Read Next
குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் பாதுகாப்பானதா? குழந்தைக்கு எப்போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது?
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 05, 2025 18:02 IST
Published By : கௌதமி சுப்ரமணி