இன்றைய வாழ்க்கை முறையால் அதிகம் கேட்கப்படும் உடல்நல பிரச்சினைகளில் ஒன்றாக Polycystic Ovary Syndrome (PCOS) உள்ளது. பெரும்பாலும் பெண்களின் ஹார்மோன் சமநிலை குலைவு காரணமாக இது உருவாகிறது. உலகளவில் சுமார் 10 பெண்களில் 1 பெண் இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
PCOS அறிகுறிகள்
* சீரற்ற மாதவிடாய் சுழற்சி
* முகப்பருக்கள் மற்றும் எண்ணெய் சுரக்கும் தோல்
* முகம் மற்றும் உடலில் தேவையற்ற முடி வளர்ச்சி
* உடல் எடை அதிகரிப்பு, குறிப்பாக வயிற்றுப் பகுதியில்
* தலைமுடி உதிர்வு அல்லது thinning
* கர்ப்பம் தரிக்க சிரமம்
PCOS ஏற்படும் காரணங்கள்
* இன்சுலின் எதிர்ப்பு (Insulin resistance)
* குடும்ப மரபியல் (Genetics)
* அதிக மன அழுத்தம் மற்றும் உடல் இயக்கம் குறைவு
* Junk foods மற்றும் செயற்கை உணவுகள்
* ஹார்மோன் imbalance (Androgen அதிகரிப்பு)
இந்த பிரச்சினை நீண்டகால நோய்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்பதால், ஆரம்பத்திலேயே வாழ்க்கை முறை மாற்றம் அவசியமாகிறது.
PCOS பெண்களுக்கு 2 சூப்பர்ஃபுட்ஸ் - நிபுணர் பரிந்துரை!
பெண்கள் தினசரி வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் மூலம் PCOS-ஐ கட்டுப்படுத்தலாம் என நிபுணர் அகிலா ஜோஷி கூறுகிறார். குறிப்பாக, இரண்டு இயற்கையான Superfoods-ஐ உங்கள் உணவில் சேர்த்தால், ஹார்மோன் சமநிலையைப் பேணவும், மாதவிடாய் சீரான முறையில் நடக்கவும் உதவும் என்கிறார் அவர்.
வெந்தயம் (Fenugreek seeds)
வெந்தய விதைகள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி, மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும் தன்மை கொண்டவை. மேலும் உடல் இன்சுலின் சுரப்பி சீராகச் செயல்படவும், மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகரிக்கவும் உதவுகின்றன.
இலவங்கப்பட்டை (Cinnamon)
இலவங்கப்பட்டை இரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. இது உடலில் உள்ள அலர்ஜியை குறைத்து, மாதவிடாய் சுழற்சியை சீராக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இறுதியாக..
இந்த சூப்பர்ஃபுட்ஸ் மட்டும் போதுமானதல்ல. உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், மனஅழுத்தம் குறைத்தல் ஆகியவையும் சேர்ந்து செயல்பட்டால்தான் PCOS-ஐ கட்டுப்படுத்த முடியும் என நிபுணர் அறிவுறுத்துகிறார்.
Disclaimer: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான உடல்நலக் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இவை மருத்துவரின் ஆலோசனையை மாற்றாது. PCOS அல்லது ஏதேனும் உடல்நலப் பிரச்சினை தொடர்பாக நீங்கள் சந்திக்கும் அறிகுறிகள் இருந்தால், தகுதியான மருத்துவரின் பரிசோதனை மற்றும் சிகிச்சை அவசியம். உங்கள் உடல்நலத் தேவைக்கு ஏற்ப தனிப்பட்ட மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிக முக்கியம்.