உங்க ஹார்ட் எந்த பிரச்சனையும் இல்லாம ஸ்ட்ராங்கா இருக்கணுமா? இந்த உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Fibre rich foods for heart health: இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதில் பலரும் பலவகையான முயற்சிகளைக் கையாள்கின்றனர். எனினும், அன்றாட உணவில் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுப்பதில் தவறுகின்றனர். இதில் உணவில் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது இதய ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
உங்க ஹார்ட் எந்த பிரச்சனையும் இல்லாம ஸ்ட்ராங்கா இருக்கணுமா? இந்த உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Fiber-rich foods that you should include to your diet to boost your heart health: இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, நீண்ட கால உட்கார்ந்த வாழ்க்கை முறை, சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் இதய பாதிப்பு உட்பட பல்வேறு உடல் உபாயங்கள் ஏற்படலாம். இதய ஆரோக்கியத்தைப் பாதிப்பதில் உணவுமுறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி, போதிய நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாததால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

ஏனெனில் இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவு நார்ச்சத்து, குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்பு மூலக்கூறுகளுடன் பிணைந்து இரத்த ஓட்டத்தில் அவை உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் தமனிகளில் பிளேக் உருவாகும் அபாயம் குறைக்கப்பட்டு, இதய நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. கூடுதலாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இருதய பிரச்சினைகளுக்கு பங்களிக்கும் இன்சுலின் கூர்முனைகளைத் தடுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Heart Health Foods: இதயத்துக்கு எந்த பிரச்சனையும் வராம இருக்க நீங்க சாப்பிட கூடாத உணவுகள்

இதய ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து ஏன் முக்கியம்?

பொதுவாக அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை இரண்டுமே இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகளாகும். இந்நிலையில், நார்ச்சத்தை தவறாமல் உட்கொள்வது செரிமான அமைப்பை நன்றாகச் செயல்பட வைக்கிறது. இது உடலில் அதிகப்படியான கொழுப்பு குவிவதைத் தடுக்கவும், ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. எனவே இது இதய ஆரோக்கியத்திற்கு நேரடியாக நன்மை பயக்கும்.

இதய ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளின் பட்டியலைக் காண்போம்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், பொட்டாசியம், தாவர அடிப்படையிலான புரதம் போன்ற பல்வேறு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், இதய செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. அன்றாட உணவில் கறிகள், சாலட்கள், சூப்களில் பருப்பைச் சேர்ப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சியா விதைகள்

சியா விதைகளில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது. சியா விதைகளைத் தண்ணீரில் ஊறவைப்பது அல்லது தயிர், ஸ்மூத்திகள் அல்லது புட்டுகளில் சேர்ப்பது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

அவகேடோ

அவகேடோ பழத்தில் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்க உதவும் நார்ச்சத்துக்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் போன்றவை அதிகளவு உள்ளது. இது உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கவும் உதவுகிறது. அன்றாட உணவில் அவகேடோவை சாலட்கள், ஸ்மூத்திகள் அல்லது சாண்ட்விச்கள் போன்ற வழிகளில் சேர்ப்பது இதய செயல்பாட்டையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Heart Health Foods: இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த உணவுகளை சாப்பிடவும்.!

ஓட்ஸ்

ஓட்ஸ் ஆனது கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். குறிப்பாக, இதில் உள்ள பீட்டா-குளுக்கன் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. அதன் படி, காலை உணவாக ஒரு கிண்ணம் ஓட்ஸ் சாப்பிடுவது அல்லது பேக்கரி பொருள்கள் மற்றும் ஸ்மூத்திகளில் ஓட்ஸைச் சேர்ப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த வழியாகும்.

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் லிக்னான்கள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்த வளமான மூலமாகும். இவை இரண்டுமே உகொழுப்பின் அளவைக் குறைத்து, இதய நோய்களிலிருந்து பாதுகக்க உதவுகிறது. அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு, அரைத்த ஆளி விதைகளை சாலட்கள் மீது தூவலாம். ஓட்மீல் அல்லது ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்.

பெர்ரி

பெர்ரி பழங்களில் நார்ச்சத்துக்கள், பாலிபினால்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை தமனி செயல்பாட்டை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. தினமும் ஒரு கைப்பிடி அளவிலான பெர்ரிகளை சாப்பிடுவது அல்லது ஸ்மூத்திகளில் சேர்ப்பது அத்தியாவசிய வைட்டமின்களை வழங்குவதுடன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Antioxidant foods: இரும்பு போன்ற ஸ்ட்ராங்கான இதயத்திற்கு நீங்க சாப்பிட வேண்டிய ஆன்டி ஆக்ஸிடன்ட் உணவுகள் இதோ!

Image Source: Freepik

Read Next

என்ன செய்தாலும் உடலில் கொழுப்பு ஏறுதா? ஊட்டச்சத்து நிபுணர் தரும் உணவுமுறை மாற்றங்கள் இதோ

Disclaimer