Sat Sep 12, 2026 | 12:59 AM IST

Expert

பெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகளும், அவற்றை சரிசெய்யும் முறைகளும்

பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சில பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். இதில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடுகளும், அதை சரி செய்ய உதவும் குறிப்புகள் குறித்தும் ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. அவ்வாறு, நம் உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை தேவைப்படுகின்றன. இந்நிலையில், பெண்கள் தங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்களின் மீது கவனம் செலுத்துவதில்லை. இதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இருக்கலாம். இதனால் பெண்கள் பெரும்பாலான நேரங்களில் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

இதில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்தும், அவற்றை சரி செய்ய உதவும் குறிப்புகள் குறித்தும் சுகாதார பயிற்சியாளரும், ஊட்டச்சத்து நிபுணருமான மாளவிகா சாகல் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: வேகன் டயட் மாறுவதால் உங்க உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

பெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் சரி செய்யும் முறைகள்

நிபுணர் தனது பதிவில் கூறியதாவது, நீங்கள் தொடர்ந்து சோர்வு, முகப்பரு அல்லது மோசமான மனநிலையால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் உடல் உங்களுக்கு ஏதாவது சொல்ல முயற்சிக்கலாம்!. பெண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான வைட்டமின் மற்றும் தாதுப் பற்றாக்குறைகள் மற்றும் அவற்றை சரிசெய்ய உதவும் எளிய, இயற்கை உணவுகள் இவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இரும்புச்சத்து குறைபாடு

பொதுவக, இரும்புச் சத்து குறைவால் சோர்வு, வெளிறிய தோல், மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும், பெண்களுக்கு மாதவிடாயின் போது வெளியேறும் அதிக இரத்தத்தால் உடல் சோர்வு ஏற்படலாம். இந்நிலையில், அவர்களுக்கு இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைக் கொடுப்பதன் மூலம் சோர்வைத் தவிர்க்கலாம்.

சாப்பிட வேண்டியவை

  • பீட்ரூட்
  • பருப்பு
  • கீரை
  • கோழி கல்லீரல்

மெக்னீசியம் குறைபாடு

பெண்களுக்கு மெக்னீசியம் குறைபாடு ஏற்படுவதால், சோர்வு, பலவீனம், சீரற்ற இதயத்துடிப்பு, தூக்கமின்மை, பதட்டம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்படலாம். மேலும், இந்த குறைபாடு PCOS, நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நோய்களின் ஆபத்தை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

சாப்பிட வேண்டியவை

  • பாதாம்
  • வாழைப்பழங்கள்
  • முந்திரி
  • பூசணி விதைகள்

வைட்டமின் டி குறைபாடு

வைட்டமின் டி குறைபாட்டின் காரணமாக எலும்பு வலி, சோர்வு, தசை பலவீனம், மனநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக, பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சாப்பிட வேண்டியவை

  • காளான்
  • தயிர்
  • முட்டை
  • சூரிய ஒளி (தினமும் குறைந்தது 15 நிமிடங்கள்)

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் உப்பு சாப்பிடும் பழக்கம் இருக்கா? அதுக்கு என்ன காரணம் தெரியுமா?

கால்சியம் குறைபாடு

பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாடு காரணமாக, உடையக்கூடிய நகங்கள், பிடிப்புகள், பலவீனமான எலும்புகள், பல் சிதைவு போன்ற பல்வேறு அறிகுறிகள் தோன்றலாம்.

சாப்பிட வேண்டியவை

  • ராகி
  • பால்
  • தயிர்
  • முருங்கை இலைகள்

View this post on Instagram

A post shared by Malvika Sahgal | Health Coach (@malvikasahgal)

ஜிங்க் குறைபாடு

முடி உதிர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, முகப்பரு மற்றும் நகங்கள் பலவீனம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஜிங்க் குறைபாட்டினால் ஏற்படுவதாகும்.

சாப்பிட வேண்டியவை

  • கொண்டைக்கடலை
  • முந்திரி
  • பூசணி விதைகள்
  • எள் விதைகள்

இந்த அனைத்து ஊட்டச்சத்துக்களும் உடலில் சமநிலையாக இருந்தால், பெண்களின் உடல் நலமும் மனநலமும் சிறப்பாக இருக்கும். பெண்கள் தினசரி உணவில் இந்த சமநிலையான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 20, 30 வயதிலேயே தாறு மாறா முடி கொட்டுதா.? என்னாவா இருக்கும்.? தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை இங்கே!

Image Source: Freepik

Read Next

தைராய்டு பிரச்சனைகளுக்கு சீரகம் நன்மை தருமா? நிபுணர் விளக்கம் – எப்படி உட்கொண்டால் பயன் அதிகரிக்கும்?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 16, 2025 11:40 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content