What foods help hair growth and thickness: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகிறது. இன்று பலரும் முடி உதிர்தல், முடி வறட்சி, முடி உடைதல் மற்றும் இன்னும் பல்வேறு முடி தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு மன அழுத்தம் அதிகரிப்பு, நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படலாம். குறிப்பாக, பருவகாலத்தின் போது முடி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
பருவகால மாற்றங்களினால் முடி உதிர்தல் பிரச்சனையை மக்கள் பலரும் சந்திக்கின்றனர். அதிலும் மழைக்காலத்தில் அதிக முடி உதிர்தலைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு ஈரப்பதம் மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பருவமழையின் போது முடி உதிர்வு ஏற்படுவது உண்மையானதாகும். மேலும் இது அறிவியலால் ஆதரிக்கப்படுகிறது. இதில் அதிக முடி உதிர்வு பிரச்சனையைச் சந்திப்பதற்கான காரணங்களையும், அதைத் தவிர்க்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்தும் ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இதில் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: அசுர வேகத்தில் முடி வளரனுமா.? ஒரு வாரம்.. தொடர்ந்து இந்த எண்ணெயை Night-ல தடவிட்டு வாங்க.. சும்மா அப்படி வளரும்!
முடி உதிர்வு ஏற்படுவதற்கான காரணங்கள்
ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, பருவகாலத்தின் போது அதிகளவிலான தலை முடி உதிர்வு ஏற்படுவதற்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம்.
முடி வளர்ச்சி சுழற்சி மாற்றம்
கோடைக்காலத்தில் முடி டெலோஜென் (ஓய்வெடுக்கும்) கட்டத்தில் நுழைகிறது. இதனைத் தொடர்ந்து மழைக்காலத்தில் முடி உதிர்தல் தொடங்குகிறது.
தொற்றுகள் மற்றும் காய்ச்சல்
மழைக்காலத்தில் தொற்றுக்கள் மற்றும் காய்ச்சல் ஏற்படுவது பொதுவானதாகும். இதனால், நோய்க்குப் பிந்தைய முடி உதிர்தல் பிரச்சனையைத் தூண்டுகிறது (டெலோஜென் எஃப்லூவியம்).
அதிக ஈரப்பதம் இருப்பது
தலைமுடியில் அதிகளவு ஈரப்பதம் காரணமாக, முடியின் மேற்புறம் வீங்கி எளிதில் முடியை உடையச் செய்கிறது.
முடியின் வேர்களை உள்ளிருந்து பாதுகாக்க உதவும் உணவுகள்
நிபுணரின் கூற்றுப்படி, “ஒரு நல்ல செய்தியாக சரியான உணவுகளின் மூலம் வேர்களை உள்ளிருந்து பாதுகாத்து வலுப்படுத்தலாம்” என்று கூறியுள்ளார்.
ஆரஞ்சு பூசணி விதைகள்
பருவகாலத்தின் போது ஏற்படும் அதிகப்படியான முடி உதிர்வுக்கு ஹார்மோன் DHT-உற்பத்தி காரணமாகும். இந்நிலையில், பூசணி விதைகளில் முக்கியமான தாதுவான துத்தநாகம் DHT உற்பத்தியை நிறுத்துகிறது. இந்த தாது டெஸ்டோஸ்டிரோனை DHT ஆக மாற்றுவதற்கு காரணமான நொதியைத் தடுக்கும் பாதையை வழங்குவதன் மூலம் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. மேலும் பூசணி விதைகளில் உள்ள குக்குர்பிடசின் எனப்படும் முடி வளர்ச்சியைத் தூண்டும் சேர்மம் உள்ளது. இதை அன்றாட உணவில் சாலட்கள் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்க்கலாம் அல்லது சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: அழகான முடிக்கு எக்ஸ்பென்சிவ் ட்ரீட்மென்ட் தேவையில்லை.. இந்த உணவுகள் மட்டும் போதும்.! டாக்டர் பால் பரிந்துரை..
நன்னாரி
நிபுணரின் கூற்றுப்படி, முடி உதிர்தலைத் தடுக்க உதவும் வரிசையில் அடுத்ததாக நன்னாரி அமைகிறது. இவை உடலை குளிர்விக்கவும், உட்புற வீக்கத்தைக் குறைக்கவும், குறிப்பாக உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என அறியப்படுகிறது. இது உள் உடல் வெப்பத்தை குளிர்விப்பதன் மூலமும், வெப்பத்தால் அதிகரிக்கும் உச்சந்தலையில் வீக்கம் மற்றும் மழைக்காலத்தின் பலவீனமான நுண்ணறைகளைத் தடுப்பதன் மூலம் முடி உதிர்தலைக் குறைப்பதில் பங்கு வகிக்கிறது.
View this post on Instagram
கருப்பு எள்
“கருப்பு எள்ளில் கால்சியம், துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்ததாகும். இவற்றை எடுத்துக் கொள்வது வலுவான, முடி நுண்குழாய்களை ஆதரிக்க உதவுகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, முடியின் வேர்களை பலப்படுத்தி, முடி உதிர்தலைத் தடுக்க உதவுகிறது. மேலும் இவை முடியின் வேர்களைத் தூண்டி, ஆரோக்கியமான முடியை வளர்க்க உதவுகிறது.
ஆலிவ் விதைகள்
ஆலிவ் விதைகள் இரும்புச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். இது உச்சந்தலையில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக, ஒரு நோய்க்குப் பிறகு இதை எடுத்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது காய்ச்சலுக்குப் பிந்தைய முடி உதிர்தலை எதிர்த்து இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
உலர்ந்த இஞ்சி
இவை குடல் வீக்கத்தைத் தணிக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை உச்சந்தலையில் ஊட்டச்சத்து விநியோகத்தை மேம்படுத்துகிறது.
நிபுணர் பரிந்துரைத்த இந்த வகை உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் முடி உதிர்வைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: முடி அதிகமா கொட்டுதா? இந்த உணவுகளை சாப்பிடுங்க.!
Image Source: Freepik