பளபளப்பான சருமத்திற்காக நிறைய பேர் எப்போதும் க்ரீம்கள், லோஷன்கள் போட்டு தோலை பராமரிக்க முயல்கிறார்கள். ஆனால் உண்மையான அழகு உள்ளிருந்து வரும் என்பதை அவர்கள் அறியவதில்லை. சந்தையில் கிடைக்கும் தயாரிப்புகள் சில நேரம் வேகமான மாற்றத்தை தரும் போல தோன்றலாம், ஆனால் அவை நீடித்த நன்மைகள் தருவதில்லை.
இயற்கை உணவுப்பொருட்கள் மற்றும் பானங்கள் தான் உங்கள் தோலை நிஜமாகவே ஜொலிக்க வைக்கும். அதில் முக்கியமானது தான் “கொலாஜன்”. இது உங்கள் தோலை உறுதியும், மென்மையும் கொண்டதாக மாற்றும். கொலாஜன் இல்லை என்றால், வயதான தோற்றம், சுருக்கம், மெலிந்த தோல் போன்றவை ஏற்படக்கூடும்.
சமீபத்தில் ஒரு நிபுணர், வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய ஒரு கொலாஜன் பானம் பற்றி பகிர்ந்துள்ளார். இந்த பானம் உங்கள் உடலில் உள்ள இயற்கை கொலாஜன் உற்பத்தியை தூண்டும், தோலின் நரம்புகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும், மற்றும் சருமத்தை உயிரோட்டமாக மாற்றும் இயற்கை சூப்பர் டிரிங்காகும்.
கொலாஜன் - பளபளப்பான சருமத்திற்கான ரகசியம்!
தோல் பளபளப்பாகவும் இளமையாகவும் இருக்க, வெளிப்புற பராமரிப்பு மட்டும் போதாது; உணவின் மூலம் உடலுக்குள் இருந்து கொலாஜன் வளர்ச்சி முக்கியம் என NOURISHÉ ஊட்டச்சத்து நிபுணர் சர்தக் குக்ரேஜா கூறுகிறார்.
“நான் இதை 'யூத் க்யூப்ஸ்’ (Youth Cubes) என்று அழைக்கிறேன். இது ஒரு கிளாஸ் ஒயின் அல்ல... இது ஒரு 'கொலாஜன் க்ளோ கிளாஸ்’,” என அவர் நகைச்சுவையுடன் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், “தோல் பராமரிப்பு கிரீம்கள் சருமத்தின் மேற்புறத்தில் வேலை செய்யலாம். ஆனால், இந்த Cubes உங்கள் உடலை உள்ளிருந்து பளபளப்பாக்கும் சக்தி கொண்டவை” என்றார்.
இந்த க்யூப்ஸ்களில், வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழகு மேம்படுத்தும் இயற்கை கூறுகள் மற்றும் கொலாஜன் உற்பத்தியை தூண்டும் சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை சருமத்தை இளமையாக வைத்திருக்க, சுருக்கங்களை தாமதப்படுத்த, மற்றும் ஒரு இயற்கையான 'ப்ளோ' கொடுக்க உதவுகின்றன.
“இந்த க்யூப்களை தினமும் ஒரு குளிர்ந்த தண்ணீர் அல்லது ட்ரிங்கில் கலந்து குடிக்கலாம். இது உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, அதிகமான ஆக்ஸிஜனேற்றங்களை வழங்கும். அதனால் உங்கள் சருமம் உள்ளிருந்து நிகரற்ற பளிச்செலுடன் மின்னும்,” என அவர் மேலும் கூறுகிறார். தயாரிப்பு எளிதானது என்றும், நாம் ஒரே முறை கடினமாக உழைத்து இந்த cubes தயாரித்து, அடுத்த 10–12 நாட்களுக்கு சேமித்து வைத்து பயன்படுத்தலாம் என்று மேலும் கூறினார்.
மேலும் படிக்க: வயதை வெல்லும் உணவு ரகசியம்.. 50 வயதிலும் ஜொலிக்க.. தினமும் இதை சாப்பிடுங்க!
தயாரிக்கும் முறை
* சிட்ரஸ் பழங்கள் போன்ற கொலாஜன்-நிரப்புப் பொருட்களின் கலவையை உருவாக்கவும்
* அவற்றை தண்ணீரில் கலந்து, கலவையை ஐஸ் கியூப் தட்டுகளில் நிரப்பவும்.
* க்யூப்ஸை உறைய வைக்கவும். பின்னர், அதை 10-12 நாட்கள் வைத்திருக்கலாம்.
* தினமும் ஒரு டம்ளரில் ஒரு cube தண்ணீரில் கரைத்து உட்கொள்ளுங்கள்.
* இந்த எளிய பழக்கம் சருமத்திற்கு தினசரி கொலாஜன் மற்றும் பிற ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
கொலாஜனில் என்ன சிறப்பு இருக்கிறது?
கொலாஜன் என்பது உங்கள் தோல், முடி மற்றும் நகங்களில் உள்ள ஒரு புரதமாகும். நீங்கள் வயதாகும்போது, உங்கள் உடல் குறைவான கொலாஜனை உற்பத்தி செய்கிறது, இது சுருக்கங்கள் மற்றும் மந்தமான சருமத்தை ஏற்படுத்தும். இந்த முக்கியமான புரதத்தை உங்கள் உடலில் அதிகமாக உற்பத்தி செய்ய கொலாஜன் அதிகம் உள்ள உணவுகளை நீங்கள் உண்ணலாம் அல்லது கொலாஜன் கலந்த பானங்களை குடிக்கலாம். இது உங்கள் சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
கொலாஜன் பானங்கள் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது?
நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சில வாரங்களுக்கு கொலாஜன் சப்ளிமெண்ட்களை உட்கொண்டவர்கள் மேம்பட்ட நீரேற்றம், நெகிழ்ச்சித்தன்மை மற்றும் சருமத்தில் குறைவான சுருக்கங்களை அனுபவித்ததாகக் கண்டறிந்தனர். கொலாஜன் பானங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அதை இளமையாகவும், பொலிவுடனும் மாற்றும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
கிரீம்களை விட இயற்கை பானம் ஏன் சிறந்தது?
லோஷன்கள் மற்றும் கிரீம்கள் உங்கள் சருமத்தின் மேற்பரப்பில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், கொலாஜன் பானங்கள் உள்ளிருந்து வரும் விஷயங்களைக் கையாளுகின்றன. அவை உங்கள் உடல் சரும செல்களை சரிசெய்யவும் மீண்டும் உருவாக்கவும் அனுமதிக்கின்றன, இது நீண்ட காலம் நீடிக்கும் ஆரோக்கியமான பளபளப்பை உங்களுக்கு வழங்குகிறது. மேம்பட்ட இரத்த ஓட்டம் மற்றும் அதிகரித்த ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற கூடுதல் நன்மைகளையும் நீங்கள் பெறுவீர்கள்.