சருமத்தைப் பளபளப்பாக வைக்க ஆலிவ் எண்ணெய் தரும் நன்மைகள் இதோ.. எப்படி பயன்படுத்துவது?

Benefits of applying olive oil on face: சருமத்தை பளபளப்பாக வைப்பதற்கு சில எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். அவ்வாறு, சருமத்தைப் பொலிவாக்குவதில் ஆலிவ் எண்ணெய் உதவியாக இருக்கும். இதில் சருமத்திற்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சருமத்தைப் பளபளப்பாக வைக்க ஆலிவ் எண்ணெய் தரும் நன்மைகள் இதோ.. எப்படி பயன்படுத்துவது?

Benefits of using olive oil on face: சருமம் அழகாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். இதற்காக பலர் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். சில சமயங்களில் இதில் காணப்படும் இரசாயனங்களின் காரணமாக பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனினும் இன்னும் பலர் வீடுகளில் உள்ள சில இயற்கையான பொருள்களைக் கையாள்கின்றனர். ஆம். உண்மையில் நம் வீட்டில் இருக்கும் உணவுப்பொருள்கள் முதல் இயற்கையாகவே கிடைக்கும் சில செடிகள், மூலிகைகள் போன்றவை சருமத்தைப் பொலிவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அவ்வாறு, நம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் பலரும் சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய ஆலிவ் எண்ணெய் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். ஆலிவ் எண்ணெயின் நுகர்வு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இதை சருமத்திற்குப் பயன்படுத்தலாம். இதில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, சோடியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Almond Oil For Skin: பாதாம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் நல்லது; பாதாம் எண்ணெயின் பயன்கள்!!

சருமத்திற்கு ஏன் ஆலிவ் எண்ணெய்?

ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு ஊட்டமளிப்பதுடன் சருமத்தை மென்மையாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது. உண்மையில், இதை எந்த நேரத்திலும் முகத்தில் தடவலாம். ஆனால், குறிப்பாக இரவு நேரத்தில் முகத்தில் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது மிகுந்த நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது. உண்மையில் முகத்தில் இரவில் தூங்குவதற்கு முன்னதாக ஆலிவ் எண்ணெயைத் தடவுவது, சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படுகிறது. இது சருமத்திற்கு பல நன்மைகளைத் தர உதவுகிறது.

இரவில் முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

சருமத்தை சுத்தம் செய்வதற்கு

இரவில் முகத்திற்கு ஆலிவ் எண்ணெயைத் தடவுவதன் மூலம், சருமத்தில் காணப்படும் துளைகளில் படிந்துள்ள அழுக்குகள் எளிதில் சுத்தம் செய்யப்படுகிறது. இவை சருமத்தில் உள்ள இறந்த சருமத்தையும், அதிகப்படியான எண்ணெயையும் அகற்ற உதவுகிறது. இதன் மூலம் சருமத்தை சுத்தமாக மற்றும் பளபளப்பாக வைக்க வழிவகுக்கிறது. இதை மேக்கப்பை நீக்கவும் பயன்படுத்தலாம்.

சருமத்தை பளபளப்பாக்குவதற்கு

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ ஆனது அதிகளவில் காணப்படுகிறது. இது சருமத்தில் உள்ள நிறமி, கறைகள், மற்றும் பழுப்பு நிறத்தை அழிக்க உதவுகிறது. தூங்குவதற்கு முன்னதாக ஆலிவ் எண்ணெயை சருமத்தில் தடவுவது, சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. இது சருமத்தை இயற்கையாகவே பளபளப்பாக்க உதவுகிறது.

ஒவ்வாமைகளை நீக்குவதற்கு

ஆலிவ் எண்ணெய் ஆனது நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். இது சரும தொற்றுக்களைத் தடுக்க உதவுகிறது. இரவில் முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தடவுவதால் அரிப்பு, சொறி, தடிப்புகள் மற்றும் ஒவ்வாமையிலிருந்து விடுபட முடியும். இதன் மூலம் பருக்களைக் குணப்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Coconut oil on face: இரவு தூங்கும் முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவுவதால் என்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு

சருமத்திற்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இவை சருமத்தில் ஈரப்பதத்தை பூட்டுவதன் மூலம் நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் நிறைந்துள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் வறட்சியைக் குறைக்க உதவுகிறது. இதற்கு, தினமும் தூங்குவதற்கு முன்பாக முகத்தை ஆலிவ் எண்ணெயால் மசாஜ் செய்யலாம். இதை இரவு முழுவதும் அப்படியே விட்டு விடலாம்.

வயதாவதைத் தடுக்க

ஆலிவ் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை சருமத்தை இளமையாக வைத்திருக்க ஏதுவாக அமைகிறது. சருமத்திற்கு ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுவதால் சருமம் இறுக்கமடைகிறது. கூடுதலாக, இது சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் போன்ற வயதான அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது.

இரவில் சருமத்தில் ஆலிவ் எண்ணெயை தடவுவது எப்படி?

  • முதலில் சருமத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவிக் கொள்ளலாம்.
  • பின்னர் ஒரு துண்டு பயன்படுத்தி உலர வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு, கையில் 4-5 சொட்டு ஆலிவ் எண்ணெயை எடுத்து முகத்தில் தடவ வேண்டும்.
  • விரும்பினால், அதில் சில துளிகள் தேயிலை மர எண்ணெய் அல்லது அத்தியாவசிய எண்ணெயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பிறகு கைகளால் முகத்தை 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு, இதை இரவு முழுவதும் அப்படியே வைக்கலாம்.
  • அதன் பின்னர், காலையில் முகத்தை தண்ணீரில் கழுவிக் கொள்ளலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Olive Oil: இரவில் முகத்திற்கு ஆலிவ் ஆயில் தடவுவது நல்லதா? இதன் பயன்கள் இங்கே!

Image Source: Freepik

Read Next

முக சுருக்கங்களை நீக்கி சருமம் மென்மையா, இளமையா இருக்கணுமா? இந்த 5 விஷயங்களை செய்யுங்க

Disclaimer