Should I sleep with coconut oil on my face: இன்றைய காலத்தில் சரும ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை பலரும் வீட்டு வைத்திய முறைகளைக் கையாள்கின்றனர். இதில் தேங்காய் எண்ணெயும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தேங்காய் எண்ணெய் என்றாலே முடிக்குப் பயன்படுத்தக் கூடிய முதன்மையான மற்றும் சிறந்த எண்ணெய் ஆகும். ஆனால், இது சருமத்திற்கு நன்மை பயக்கும் என்பது பெரும்பாலானோர் அறியாத ஒன்றாகும். ஆம். உண்மையில் இது ஒரு பிரபலமான சரும பராமரிப்புத் தேர்வாகும்.
சருமத்தில் தேங்காய் எண்ணெயைத் தடவுவது புதிய விஷயமல்ல. இதை முகத்தில் எப்படி தடவுவது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எல்லோரும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாமா? என்பதற்கு சரியான புரிதல் இருப்பது மிகவும் முக்கியமாகும். இதில் சருமத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி மற்றும் அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு என்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து காணலாம்.
சரும பராமரிப்பில் தேங்காய் எண்ணெய் உதவுமா?
தேங்காய் எண்ணெய் சருமப் பராமரிப்பில் மிகவும் சிறந்ததாகக் கூறப்படுகிறது. ஆம். இந்த எண்ணெய் மசாஜ்களுக்கு மட்டுமல்லாமல், சரும பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் என்ற கொழுப்பு அமிலம் உள்ளது. இதனுடன், இந்த எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவை சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், சருமத்திற்கு ஊட்டமளிக்கவும் உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil For Skin: முகம் கண்ணாடி போல ஜொலிக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருள்களைச் சேர்த்து பயன்படுத்துங்க
மேலும், தேங்காய் எண்ணெயில் குறைவான அளவில் கொழுப்பு இருப்பதால், இது பொதுவாக எல்லா பருவங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதை பயன்படுத்துவதற்கு முன்பாக அதைப் பயன்பாட்டு முறையைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும். ஏனெனில், தவறான வழியில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது சருமத்திற்குத் தீங்கா விளைவிக்கலாம். எனவே முகத்தில் அல்லது சருமத்தில் தடவுவதற்கு முன்பாக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவது எப்படி?
முகத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, கைகள் மற்றும் முகத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு சுத்தம் செய்வது அவசியமாகும். பின்னர், உள்ளங்கையில் சில துளிகள் தேங்காய் எண்ணெயை எடுத்து, அதை இரு கைகளுக்கும் இடையில் தேய்த்து, பின்னர் இதை முகத்தில் சமமாகப் பரப்ப வேண்டும்.
தேங்காய் எண்ணெயை சருமத்தில் மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் அது சருமத்தில் உறிஞ்சப்பட்டு ஊட்டமளிக்கிறது. இதை 30-4- நிமிடங்கள் வைத்து, அதன் பிறகு எண்ணெயை நீக்க முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும். இதில் சருமம் மென்மையாகவும் ஈரப்பதமாகவும் இருப்பதைக் கவனிக்கலாம்.
இரவில் தூங்கும் போது தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தருகிறது. மேலும், இரவு நேரத்தில் சருமத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால், தூங்கும் போது சருமத்தை ஈரப்பதமாக்கி ஊட்டமளிக்க உதவுகிறது.
முகத்தை சுத்தம் செய்த பிறகே, தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது அவசியமாகும். இது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தின் அமைப்பை மேம்படுத்த இரவு முழுவதும் வேலை செய்ய உதவுகிறது. மேலும் சரும மென்மையை பராமரிக்கிறது. மசாஜ் செய்த பிறகு, இரவு முழுவதும் அதை அப்படியே வைப்பது, காலையில் முகத்தை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: பல்பு போன்ற பளீரென முகத்தை பெற தேங்காய் எண்ணெயில் இவற்றை கலந்து தடவுங்க!
மஞ்சள் கலந்த தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது
மிகவும் வறண்ட சருமத்தைக் கொண்டிருப்பவர்கள், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த விரும்பினால், அதனுடன் சிறிது மஞ்சளைச் சேர்க்கலாம். 3-4 சொட்டு அளவிலான தேங்காய் எண்ணெயுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு ஒரு பேஸ்ட் தயார் செய்யலாம். பின்னர், இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி ஒரு மணி நேரம் வைத்து, பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் மெதுவாகக் கழுவ வேண்டும்.
தேங்காய் எண்ணெய் ஒவ்வாமையை ஏற்படுத்துமா?
- தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பாக எப்போதும், சரும வகையைச் சரிபார்ப்பது அவசியமாகும். ஏனெனில், எண்ணெய் பசை சருமம் கொண்டிருப்பவர்களுக்கு, இது நன்மை பயக்காது. எனவே இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- மேலும், தேங்காய் எண்ணெய் வறண்ட சருமத்திற்கு நன்மை பயக்கும். ஏனெனில், இது சருமத்திற்கு மிகவும் ஈரப்பதமூட்டுகிறது. இது ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும், உரிதல் அல்லது எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றவும் உதவுகிறது. இது தவிர, சிலருக்கு தேங்காய் எண்ணெய் ஒவ்வாமை இருக்க வாய்ப்புள்ளது.
- இந்த ஒவ்வாமை காரணமாக சிவத்தல், அரிப்பு அல்லது தடிப்புகள் ஏற்படலாம். எனவே, வறண்ட சருமம் இருப்பினும், இது எந்த எதிர்வினையையும் ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்ய முதலில் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும்.
ஏன் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்?
சருமம் எண்ணெய் பசையாகவோ அல்லது முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ளதாகவோ இருந்தால், முகத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில், தேங்காய் எண்ணெய் தடிமனாக இருப்பின், சரும துளைகளை அடைத்து விடும் அபாயம் ஏற்படலாம். இவ்வாறு துளைகள் அடைபட்டால், அதிக முகப்பரு மற்றும் தோல் தொற்றுகளுக்கு வழிவகுக்குகிறது. எனவே எண்ணெய் பசை அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Coconut oil on face: இரவு தூங்கும் முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவுவதால் என்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
Image Source: Freepik