Spices that may help reduce the risk of cancer: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பல்வேறு வகையான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதில் புற்றுநோயும் அடங்கும். ஆம். இன்று பலரும் பல்வேறு வகையான புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனினும், புற்றுநோயை எதிர்த்துப் போராட அன்றாட உணவில் சில உணவுப்பொருள்களைச் சேர்க்கலாம்.
அதன் படி, சில மசாலாப் பொருட்கள் புற்றுநோயைத் தடுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக மசாலா பொருள்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் அதிகளவில் உள்ளது. இது பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இந்த மசாலாக்கள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோயைத் தடுக்க மற்றும் சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. அதன் படி, இதில் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவக்கூடிய சில மசாலாப் பொருள்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cancer Causing Foods: புற்றுநோயை உண்டாக்கும் அபாய உணவுகள் இதுதான்.!
புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் மசாலா பொருள்கள்
சில மசாலா பொருள்கள் உணவில் ஒரு தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்தைச் சேர்ப்பதை விட, புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
பூண்டு
பூண்டில் அதிகளவிலான அல்லிசின் என்ற கந்தக கலவை காணப்படுகிறது. இந்தக் கலவையானது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது வயிறு, பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட்டில் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. இது தவிர, பூண்டில் நிறைந்துள்ள கலவைகள் டிஎன்ஏவை பழுதுபார்க்கவும், மற்றும் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை மெதுவாக்கவும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில் பூண்டு மற்றும் வெங்காயம் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இலவங்கப்பட்டை
அன்றாட உணவில் நாம் சேர்க்கும் மசாலாப் பொருள்களில் இலவங்கப்பட்டையும் ஒன்று. இது அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கவோ அல்லது தடுக்கவோ உதவுகிறது. கூடுதலாக, இலவங்கப்பட்டையில் காணப்படும் அத்தியாவசிய எண்ணெய் புற்றுநோய் கட்டியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
கிராம்பு
கிராம்பு ஆண்டிசெப்டிக், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள மசாலாப் பொருளாகும். ஆய்வு ஒன்றில், கிராம்பு சாறு பெருங்குடல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சிறந்த சிகிச்சையாகக் கருதப்படுகிறது. மேலும் இது நுரையீரல் புண்களில் பெருகும் உயிரணுக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Mouth Cancer Foods: உஷார்! இந்த உணவெல்லாம் காலையில் சாப்பிட்டா வாய் புற்றுநோய் கன்ஃபார்ம்
குங்குமப்பூ
குங்குமப்பூவில் ஒரு முக்கிய அங்கமாக குரோசின் உள்ளது. இது பல வகையான புற்றுநோய்களில் கட்டி வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. அதே சமயம், இவை செல் சுழற்சியை நிறுத்துவது போன்ற புற்றுநோயைத் தடுக்கும் செயல்முறையில் முக்கியமான வழிமுறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் ஆனது பாலிஃபீனால் கலவையாகும். இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த பண்புகள் பெருங்குடல், கணையம் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவுவதாக ஆய்வில் கூறப்படுகிறது. மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக, இது நீண்ட காலமாகவே ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது கதிர்வீச்சு சிகிச்சை மூலம் ஆரோக்கியமான செல்களை சேதமடைவதிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
இஞ்சி
இஞ்சியில் ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் என்ற உயிர்வேதியியல் கலவைகள் காணப்படுகிறது. இது ஒரு வகையான புற்றுநோய் எதிர்ப்புப் பண்பு ஆகும். இந்த பண்புகள் புற்றுநோய் உயிரணுக்களின் இறப்புகளைத் தூண்டுவதன் மூலம் புற்றுநோயைத் தடுக்கிறது. மேலும், இது புற்றுநோய் செல்கள் பரவுவதையும் தடுக்கிறது. ஆய்வு ஒன்றில், இஞ்சி சாற்றின் நுகர்வு பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கவும் மற்றும் சிகிச்சையளிப்பதற்கும் தேவையான ஆற்றலைத் தருகிறது. இது தவிர, வயிற்று வலி, இரைப்பை குடல் பிரச்சினைகள் மற்றும் குமட்டல் போன்றவற்றிற்கும் ஒரு சிறந்த மூலிகை தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகை மூலிகைகளின் உதவியுடன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம். இதன் மூலம் புற்றுநோய் தாக்குதலிலிருந்து விடுபட முடியும். எனினும், எந்தவொரு பொருள்களை எடுத்துக் கொள்ளும் முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Cancer Fighting Foods: புற்றுநோயை தடுக்கும் சூப்பட் ஃபுட்ஸ் இதோ..
Image Source: Freepik