Waterborne Disease Prevention: நீரால் பரவும் நோயிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது?

  • SHARE
  • FOLLOW
Waterborne Disease Prevention: நீரால் பரவும் நோயிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது?


water borne diseases causes and prevention: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை வலி என பல வகையான தொற்றுக்கள் ஏற்படுவது சகஜம். குறிப்பாக, மழைக்காலத்தில் பெரும்பாலான தொற்றுக்கள் தண்ணீர் மூலம் பரவுகின்றது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, வயிற்றுப்போக்கினால் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 1.4 மில்லியன் குழந்தைகள் இருப்பதாகவும், அவர்கள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் கூறியுள்ளது.

டைபாய்டு, வயிற்றுப்போக்கு, மலேரியா, காலரா, ஹெபடைடிஸ் ஏ, ஷிகெல்லோசிஸ், கிரிப்டோஸ்போரிடியோசிஸ், சைக்ளோஸ்போரியாசிஸ், மைக்கோபாக்டீரியம் மரினம் தொற்று, லெப்டோஸ்பிரோசிஸ், ஓடிடிஸ் மீடியா, விப்ரியோ நோய் போன்ற நோய்கள் நீரினால் பரவும் நோய்கள். எனவே, மழைக்காலத்தில் அனைத்து விஷயங்களையும் கவனமாக செய்ய வேண்டும். நீரினால் பரவும் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Waterborne Diseases: மக்களே உஷார்… மழைக்காலத்தில் இந்த கொடிய நோய்கள் நீரின் மூலம் பரவுமாம்!

சுத்தமான குடிநீர்

நீரினால் பரவும் நோய்களைத் தடுக்க நீங்கள் குடிக்கும் நீர் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருப்பதை உறுதி செய்யவும். குடிக்கும் நீரை எப்போதும் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கவும். தண்ணீர் சேமிக்கும் குவளையை தினமும் சுத்தமாக கழுவ வேண்டும்.

சுற்றுப்புற தூய்மை

நீரினால் பரவும் நோய்களைத் தடுக்க, நீங்கள் இருக்கும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கவும். வீட்டை சுற்றி நீர் தேங்க விடாதீர்கள். அதே போல, சுற்றுப்புறத்தில் குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றவும். மழைக்காலத்தில் குப்பைகளில் பூச்சிகள் மாற்றும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யலாம். இதனால், பல்வேறு நோய் தோற்று ஏற்படும்.

இந்த பதிவும் உதவலாம் : Rainy Season: மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சூப் குடியுங்க!

சரியான விழிப்புணர்வு

தண்ணீரால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கு, இது குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். குடிப்பதற்கும், சமைப்பதற்கும், தனிப்பட்ட சுகாதாரத்திற்கும் பாதுகாப்பான தண்ணீரைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விளக்குவது அவசியம். உணவு உண்பதற்கு முன்பும், கழிப்பறையைப் பயன்படுத்திய பின்பும் கைகளை முறையாகக் கழுவினால், கைகள் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளைக் குறைக்கலாம்.

தடுப்பூசி

சில நீர்வழி நோய்களைத் தடுப்பதற்கு, தடுப்பூசி ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் பெறுவதை உறுதிசெய்வது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் உதவும்.

இந்த பதிவும் உதவலாம் : Cyclone Michaung: புயல் வெளுத்து வாங்கப்போகுது… செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை பற்றி தெரிஞ்சிக்கோங்க!

அறிகுறி மற்றும் சிகிச்சை முறை

நீரினால் பரவும் நோய்களை சரியான நேரத்தில் கண்டறிந்து, சிகிச்சை வழங்கப்படுவது அவசியம். தொடர்ந்து காய்ச்சல், இருமல், வயிற்று வலி, வயிற்று போக்கு மற்றும் தலைவலி ஆகியவை ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். இதன் மூலம், நிலைமை தீவிரமடைவதைத் தடுக்கலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Waterborne Diseases: மக்களே உஷார்… மழைக்காலத்தில் இந்த கொடிய நோய்கள் நீரின் மூலம் பரவுமாம்!

Disclaimer