Safety tips for diwali: தீபாவளி கொண்டாட்டத்திற்கு அனைவரும் தயாராகிவிட்டனர். தீபாவளி என்றால் இனிப்பு உணவுகளும், பட்டாசுகளும், புத்தாடைகளும் தான் சிறப்பு. கொண்டாட்டம் முக்கியம் என்றாலும் எதிர்கால இந்தியா என்பது ஒவ்வொருவரின் கடமை. எனவே காற்று மாசுபாடு பாதிப்பை கவனத்தில் கொண்டு ஆரோக்கியமான முறையில் பட்டாசு வெடித்து மகிழுங்கள். அதேநேரத்தில் பட்டாசு வெடிப்பதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பட்டாசு வெடிக்கும் நமக்கு ஏதும் ஆகாது என்று நம்பிக்கை என்றாலும் அக்கம்பக்கத்தினருக்கு விபத்து ஏற்படும் பட்சத்தில் உதவி செய்வது நமது கடமை. எனவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதுகுறித்து டாக்டர் சுஜாதா டி எஸ், டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.

செய்யவேண்டியதும், செய்யக் கூடாததும்
உங்கள் கண்களைத் தேய்ப்பதை தவிர்க்கவும்.
உங்கள் கண்களையும் முகத்தையும் நன்கு கழுவுங்கள்.
எரிச்சல் அல்லது அசௌகரிய உணர்வு இருந்தால், தொடர்ந்து சுத்தமான கண்களை தண்ணீரில் கழுவவும்.
பெரிய அல்லது சிக்கிய துகள்களை அகற்ற முயற்சிப்பதைத் தவிர்க்கவும்; உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
கண்களை மூடிக்கொண்டு உடனடியாக கண் மருத்துவரை அணுகுங்கள்.
செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை (குழந்தைகளுக்கு)
பாதிக்கப்பட்ட கண்களை தேய்க்கவோ, அழுத்தவோ கூடாது என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்.
வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின்றி குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள்.
குழந்தைகள் விஷயத்தில் சமரசம் என்பது வேண்டாம். குழந்தைகள் ஏதேனும் அசௌகரியத்தை உணரும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Pic Courtesy: FreePik