Crackers Health Effects: பட்டாசு வெடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பா? எப்படி தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Crackers Health Effects: பட்டாசு வெடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பா? எப்படி தெரியுமா?

மேலும், தீபாவளியன்று பட்டாசுகளை வீசுவது காற்றில் தூசி மற்றும் மாசுபடுத்தலை அதிகரிக்கும். பொதுவாக பட்டாசுகள் சில இரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், பட்டாசுகளை வெடித்த பிறகு அதில் உள்ள இரசாயனங்கள் மற்றும் சில கண்ணுக்குத் தெரியாத துகள்களும் சுற்றுசூழலுக்குத் தீங்கு விளைவிப்பதாக அமைகின்றன. இப்படி, பட்டாசு வெடிப்பதால் வெளியேறும் இரசாயனங்கள் எப்படி உடலை பாதிக்கிறது என்பது குறித்து காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Appetite Loss: பசியின்மை வர காரணம் என்ன? இதை சரிசெய்வது எப்படி?

பட்டாசுகளில் உள்ள இரசாயனங்கள்

பட்டாசு வெடிப்பது உடல் நலத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதில் முதலில் பட்டாசுகளில் காணப்படும் இரசாயனங்கள் மற்றும் அவை எந்தவகையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து காண்போம்.

காட்மியம் – காட்மியம் கலந்த காற்றை சுவாசிப்பதால், அனிமியா அல்லது இரத்த சோகை பிரச்சனை ஏற்படலாம். இது இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கிறது.

காரீயம் – இது உடலில் நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதாகும்.

காப்பர் – காப்பர் ஆனது நம் சுவாச பாதையை எரிச்சலூட்டும் வகையில் அமைகிறது.

சோடியம் – இந்த சோடியம் காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் கலந்து தீயை உண்டாக்கலாம்.

ஜிங்க் – இந்த உலோகப் புகையை உறிஞ்சுவது காய்ச்சலை உண்டாக்கும். மேலும், இது வாந்தி உணர்வைத் தூண்டும்.மக்னீசியம் – மக்னீசிய புகையானது காய்ச்சலை உண்டாக்கலாம்.

பட்டாசு வெடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் விளைவுகள்

பட்டாசு வெடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகையான விளைவுகளைத் தருகிறது.

புற்றுநோய் அபாயம்

பட்டாசு வெடிக்கும் போது, வண்ணங்களை உருவாக்க கதிரியக்க மற்றும் விஷ கூறுகள் பயன்படுத்தப்படும். இந்த கலவைகள் காற்றை மாசுபடுத்துவதால், புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ulcer Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா.? அப்ப இது கண்டிப்பா அல்சர் தான்!

மார்பு எரிச்சல்

பட்டாசில் இருந்து வெளியேறும் அடர்த்தியான புகை நம் சுவாசக் குழாயை பாதிக்கலாம். குறிப்பாக சிறு குழந்தைகளின் சுவாச குழாயை இது எளிதில் பாதிக்கிறது. மேலும், சளி, ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காற்றை மாசுபடுத்தும் புகை மிகவும் கடுமையான விளைவை ஏற்படுத்தலாம். இது மார்பு மற்றும் தொண்டை நெரிசலை ஏற்படுத்துகிறது.

தொண்டை, சுவாச பிரச்சனை

பட்டாசு வெடிப்பதால், அதில் உள்ள இரசாயனங்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத மாசுத் துகள்கள், கண்கள், மூக்கு மற்றும் தொண்டையில் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

மேலும் இதன் காற்று மற்றும் ஒலி மாசுபாடு சுவாசம், இதயம் மற்றும் நரம்பு மண்டலம் போன்ற கோளாறுகள் உள்ளவர்களை பாதிக்கிறது.

எனவே இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதுடன், நமது சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்க சுற்றுச்சூழல் நட்புடன், தீபாவளியை பட்டாசுக்குப் பதிலாக விளக்குகளுடன் கொண்டாடலாம். காற்று மாசுபாடற்ற தீபாவளியைக் கொண்டாடுவதிலேயே நம்முடைய பொறுப்பு மற்றும் ஆரோக்கியம் நிறைந்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Kidney Health: கிட்னி பாதுகாப்புக்கான சில ஆரோக்கிய வழிமுறைகள்!

Image Source: Freepik

Read Next

நெருங்கும் தீபாவளி… ஆஸ்துமா நோயாளிகளே கவனமாக இருங்க!

Disclaimer