$
What happens if you eat too much protein: உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் புரதமும் அடங்கும். இது உடலின் பல்வேறு செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு மக்ரோநியூட்ரியண்ட் ஆகும். அதாவது உடலில் திசுக்கள் மற்றும் உறுப்புகளின் அமைப்பு, செயல்பாடு மற்றும் ஒழுங்குமுறையை பராமரிக்க உதவுகிறது. எனவே இது உணவின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் புரதங்களில் உள்ள அமினோ அமிலங்கள் திசுக்களை சரிசெய்யவும், தசைகளை உருவாக்கவும், என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.
அதன் படி, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவிலான புரதத்தை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு பங்கு வகிக்கிறது. இந்த செயல்பாடுகளில் வளர்ச்சிதை மாற்ற மேம்பாடு, தசை வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் எடை மேலண்மை உள்ளிட்டவை அடங்கும். இவை உடலில் திருப்தியை ஊக்குவிக்க உதவுகிறது. புரதம் ஒரு முக்கியமான ஊட்டச்சத்தாக இருப்பினும், அதை மிதமாக உட்கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் புரதத்தின் அதிகப்படியான நுகர்வு உடலை கடுமையாக பாதிக்கலாம். மேலும் இது உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில் அதிகப்படியான நுகர்வு எவ்வாறு ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Milk Protein Powder Benefits: பாலுடன் புரோட்டீன் பவுடர் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
அதிக புரதம் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்
எடை அதிகரிப்பு
புரதம் உட்கொள்வது தசையை கட்டி எழுப்புவதற்கும், பழுதுபார்க்கவும் மிகவும் முக்கியமானதாக அமைகிறது. எனினும், இந்த புரதத்தை அதிகளவு உட்கொள்வது கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. ஏனெனில், இதில் நாம் கலோரிகள் எரிப்பதை விட, அதிக கலோரிகளை உட்கொள்வதை அடிப்படையாகக் கொண்டது. இது தேவையற்ற எடையை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது.

செரிமான பிரச்சனைகள்
புரதத்தின் அதிகப்படியான நுகர்வு காரணமாக குறிப்பாக விலங்கு மூலங்களிலிருந்து பெறப்படும் புரதங்களை உட்கொள்வது மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஏனெனில், அதிக புரத உணவுகளில் போதுமான நார்ச்சத்துக்கள் இல்லை. இதனால், செரிமான பிரச்சனையை ஏற்படுத்துவதுடன், குடல் இயக்கங்களைப் பாதிக்கிறது.
ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வு
அதிக புரதத்தை உட்கொள்வது மற்றும் இன்னும் பிற போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாத போது, அது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற பிற முக்கிய ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தலாம். ஏனெனில், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்கு சமநிலையான உணவு முக்கியமானது.
இந்த பதிவும் உதவலாம்: யார் புரோட்டீன் பவுடரை உட்கொள்ளக்கூடாது? இதன் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
இதய பாதிப்பு
புரத உணவுகள் அதிலும் குறிப்பாக சிவப்பு இறைச்சி போன்ற விலங்கு அடிப்படையிலான புரதங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதன் காரணமாக, உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து காணப்படலாம். இவை இறுதியில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வதால் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகள் காரணமாக இதய பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.
சிறுநீரக பிரச்சனைகள்
அதிக புரதத்தை உட்கொள்வது சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக, சிறுநீரகங்கள் புரத வளர்ச்சிதை மாற்றங்களிலிருந்து கழிவுகளை வடிகட்ட கடினமாக உழைக்கிறது. மேலும், அதிகளவு புரதம் உட்கொள்வதால், சிறுநீரகங்கள் அதிக வேலை செய்ய வழிவகுக்கிறது. இதனால் நீண்ட கால சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

வாய் துர்நாற்றத்திற்கு
அதிகளவு புரோட்டீன் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் உள்ள உணவுகள் கெட்டோசிஸ் எனப்படும் நிலைக்கு வழிவகுக்கிறது. உடல் கொழுப்பை ஆற்றலுக்காக எரிக்கும் போது இது நிகழ்கிறது. இந்த செயல்முறையானது கீட்டோன்கள் எனப்படக்கூடிய விரும்பத்தகாத, பழ வாசனையை ஏற்படுத்துகிறது. அதிலும் இவை துலக்குதல் அல்லது மவுத்வாஷ் மூலம் கூட எளிதில் மறையாது.
நீரிழப்பு
அதிகளவு புரதத்தால் ஏற்படும் பிரச்சனைகளில் நீரிழப்பும் ஒன்று. புரதச் சிதைவின் துணைப்பொருளான நைட்ரஜனை உடல் வெளியேற்றுவதால் அதிக புரத உட்கொள்ளல் சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கிறது. இந்நிலையில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காத போது நீரிழப்பு ஏற்படலாம். இது தலைவலி, சோர்வு, தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
நாம் அதிக புரதங்களை எடுத்துக் கொள்வதால் இது போன்ற பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். எனவே மிதமான அளவில் புரதம் உட்கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Protein Powder Side Effects: அதிகப்படியான புரோட்டீன் பவுடர் எடுத்துக்கிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வருமாம்
Image Source: Freepik