What happens when you drink lemon water on an empty stomach: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், பானங்கள், நட்ஸ், விதைகள் போன்றவை உள்ளன. அவ்வாறே எளிதாகக் கிடைக்கக் கூடிய உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய பழங்களில் ஒன்றாக எலுமிச்சை அமைகிறது. இதை நம் அன்றாட உணவில் பல்வேறு வழிகளில் சேர்க்கலாம். எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த மூலமாகும். இந்த வைட்டமின் சி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து உடல் எடையை குறைப்பது வரை பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
பெரும்பாலானோர், எலுமிச்சையை தண்ணீர் வடிவில் எடுத்துக் கொள்கின்றனர். குறிப்பாக, இந்த பானத்தை காலையில் முதலில் உட்கொள்ளும் போது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீரை எடுத்துக் கொள்வது உடலுக்கு பல வழிகளில் உதவுகிறது. இருப்பினும், இதை வெறும் வயிற்றில் தினமும் உட்கொள்வது சில ஆபத்தான பக்க விளைவுகளையும் தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இதில் தினந்தோறும் வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீரை அருந்துவதால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Lemon Water Benefits: குளிர்காலத்தில் எலுமிச்சை நீர் குடிப்பதன் நன்மைகள்.!
தினமும் வெறும் வயிற்றில் எலுமிச்சைத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
காலை நேரத்தில் எலுமிச்சை பானத்தைக் குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் சில விளைவுகளைக் காணலாம்.
வயிற்று வலி
தினந்தோறும் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகளில் ஒன்றாக வயிற்று வலி அமைகிறது. ஏனெனில் எலுமிச்சை தண்ணீர் அமிலத்தன்மை கொண்ட பானமாகும். இந்த அதிகப்படியான அமிலத்தன்மை வாந்தி, குமட்டல் அல்லது வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, உணர்திறன் வாய்ந்த வயிறு உள்ள நபர்களுக்கு, இந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இந்த பானத்தை உட்கொண்ட பிறகு, அசௌகரியத்தைக் கண்டால் அதன் அளவைக் குறைப்பது அல்லது பானத்தை முற்றிலும் குறைப்பது அவசியமாகும்.
பற்சிப்பி அரிப்பு
இந்த பானத்தைத் தினமும் அருந்துவதால் ஏற்படும் மிகவும் ஆபத்தான விளைவுகளில் ஒன்றாக பற்களின் பற்சிப்பியில் அரிப்பு ஏற்படுவதாகும். இதற்கு எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமே காரணமாகும். இவை பற்களின் பாதுகாப்பு அடுக்கை சிதைத்து, பற்சிதைவு மற்றும் உணர்திறனை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இது நாளடைவில் கடுமையான பல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். மேலும், இதற்கு விலையுயர்ந்த சிகிச்சைகள் தேவைப்படும் நிலை ஏற்படலாம். இந்த அசௌகரியத்தைக் கண்டால், எலுமிச்சை பானம் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
ஒவ்வாமை எதிர்வினைகள்
இது அரிதான விளைவுகளில் ஒன்றாகும். எனினும், சில நபர்கள் எலுமிச்சைக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளை அனுபவிக்கலாம். இதன் அறிகுறிகளாகவே தோல் வெடிப்பு மற்றும் அரிப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எனவே, எலுமிச்சை நீரை உட்கொண்ட பிறகு இது போன்ற பாதகமான விளைவுகளைக் கண்டால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது. தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்னை இருக்கா.? மறந்தும் இதை குடிக்காதீர்கள்..
நெஞ்செரிச்சல்
தினமும் எலுமிச்சை தண்ணீர் பானத்தை அருந்துவது நெஞ்செரிச்சல் அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும். எலுமிச்சைச் சாற்றின் அமிலத்தன்மை உணவுக்குழாயை எரிச்சலடையச் செய்து, அசௌகரியத்திற்கு வழிவகுக்கிறது. இதன் அறிகுறிகளாக மார்பு மற்றும் தொண்டையில் எரியும் உணர்வு போன்றவை ஏற்படலாம். இது மிகவும் வேதனையைத் தரக்கூடியதாக இருக்கலாம். எனவே இந்த அறிகுறிகளை அனுபவித்தால், எலுமிச்சை தண்ணீர் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் சிக்கல்
எலுமிச்சை தண்ணீரை அதிகளவு அருந்துவது சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. அதாவது இதில் உள்ள அமிலத்தன்மை, கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்களை உறிஞ்சுவதில் தலையிடலாம். காலப்போக்கில் இது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, இந்த ஊட்டச்சத்துக்களை ஏற்கனவே குறைவான அளவில் வைத்திருப்பவர்களுக்கு இது பாதிப்பாக அமையலாம்.
தினமும் வெறும் வயிற்றில் எலுமிச்சைத் தண்ணீர் அருந்துவது இது போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க வாய்ப்புண்டு. இதனைத் தவிர்க்க, தினமும் உட்கொள்ள வேண்டிய பானத்தின் சரியான அளவைத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் உணவு முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யும் முன்பாக உணவு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: காலை வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு மட்டும் கலந்து குடித்து பாருங்க..
Image Source: Freepik