
நாடு முழுவதிலும் கடந்த 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கொண்டாடினர். பட்டாசுகள் வெடிக்கும் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தீபாவளி பண்டிகை தொடங்கும் முன்னரே தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான பல வழிகாட்டுதல்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.ஆனாலும் வழிகாட்டுதல்களை மீறி பட்டாசு வெடிக்கும் போது பல்வேறு விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தன.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி முதல் 3ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட காயம் காரணமாக மதுரையில் உள்ள பிரபல மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனையில் தென் மாவட்டங்களில் இருந்து 104 பேருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 children lost their eyes in Diwali firecracker accident
இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உரிய சிகிச்சை பலனின்றி 4 குழந்தைகளுக்கு முற்றிலும் கண் பாதிப்பு ஏற்பட்டு கண்கள் அகற்றப்பட்டுள்ளதாக அரவிந்த் மருத்துவமனை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே இது போன்ற கண் பாதிப்புகள் மட்டும் பார்வை இழப்புகளை தவிர்க்கும் தீபாவளி உள்ளிட்ட விழாக்காலங்களில் குழந்தைகளின் நலன் கருதி பட்டாசு வெடிக்கும் போது மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் கையாள வேண்டும் என அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தீபாவளியின் போது மட்டுமல்ல எதிர்பாராதவிதமாக நிகழும் விபத்துக்களின் போதும் கண்களில் காயம் ஏற்பட்டால் தற்காத்துக் கொள்வது மற்றும் என்னென்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிந்து கொள்வோம்...
இதையும் படிங்க: Home Remedies For Dry Eye: கண்களில் வறட்சி, எரிச்சல் தாங்க முடியலையா?... உடனடி தீர்வுக்கு ஈசியான வீட்டு வைத்தியங்கள்!
கண்ணில் உள்ள தூசி, மணல் அல்லது ஏதாவது பொருட்கள் பட்டால் செய்ய வேண்டியவை:
- உப்புக் கரைசல் அல்லது தெளிவான நீரில் கண்ணை துடைக்கவும்.
- மெதுவாக கண்களை சிமிட்டுங்கள், இது கண்களில் உள்ள தூசு அல்லது மணலை வெளியேற்ற உதவும்.
- கண்களில் தூசு அகற்றப்பட்டாலும், கார்னியல் சிராய்ப்பின் தீவிரத்தை பரிசோதிக்க கண் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
செய்யக்கூடாதவை:
- கண்ணைத் தேய்க்க வேண்டாம், இது கார்னியல் சிராய்ப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
- கண்ணில் வெட்டு அல்லது காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை:
- உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
- முடிந்தால் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்.
- பொருளை அகற்றவோ அல்லது துடைக்கவோ முயற்சிக்காதீர்கள்.
- காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவதைத் தவிர்க்கவும்.
- பிரகாசமான விளக்குகளை நேரடியாகப் பார்க்க வேண்டாம்.
- தொலைக்காட்சி, லேப்டாப், செல்போன் ஸ்கிரீன்களில் இருந்து விலகி இருங்கள்.
- தண்ணீர் கொண்டு கண்களை சுத்தப்படுத்த வேண்டாம், ஏனெனில் இது தொற்றுக்களை உருவாக்கக்கூடும்.
தீக்காயங்களுக்கு செய்ய வேண்டியவை:
- உப்புக் கரைசல் அல்லது சுத்தமான தண்ணீரில் உடனடியாக கண்ணை சுத்தப்படுத்தவும்.
- உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
செய்யக்கூடாதவை:
- கண்ணைத் தேய்க்கக் கூடாது.
- கண்ணில் கட்டு போடாதீர்கள்.
Image Sourc: Freepik
Read Next
Energy Drinks Side Effects: அடிக்கடி எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிப்பிங்களா? கிட்னி பத்திரம் மக்களே!
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version