Energy Drinks Side Effects: சமீப காலமாக ஆற்றல் பானங்கள் பயன்பாடும் அதை குடிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் வல்லுநர்கள் தங்களுக்கான விரைவான ஆற்றல் ஊக்கத்தை உடனடியாக பெற விரும்புகிறார்கள். அதற்கு எனர்ஜி ட்ரிங்க்ஸ் உதவியைதான் நாடுகிறார்கள்.
இருப்பினும், சர்க்கரை, காஃபின் நிறைந்த இந்த பானங்கள் இதய ஆரோக்கியத்திற்கு அப்பாற்பட்ட அபாயங்களையும் ஏற்படுத்தக்கூடும், இது சிறுநீரக பாதிப்புக்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிகம் படித்தவை: Dark chocolate: தினமும் டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?
எனர்ஜி ட்ரிங்க்ஸ் கிட்னி பாதிப்பை ஏற்படுத்துமா?
ஐதராபாத்தில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெப்ராலஜி மற்றும் யூரோலஜியின் மூத்த சிறுநீரக மருத்துவர் டாக்டர் சுஜீத் ரெட்டி தனியார் தளத்துக்கு அளித்த தகவலின்படி, ஆற்றல் பானங்கள் அதிக காஃபின் உள்ளடக்கம் கொண்டவையாகும், ஏனெனில் அவை வழக்கமான கப் காபியை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக காஃபின் கொண்டுள்ளது.
இது தற்காலிக விழிப்புணர்வை அளிக்கும் அதே வேளையில், சிறுநீரகங்களில் சில விளைவுகளையும் ஏற்படுத்தும். காஃபின் என்பது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடிய ஒரு மூலமாகும். இதை அதிக அளவில் உட்கொள்ளும் போது, இது சிறுநீரகங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, முன்னதாக இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்தம் அல்லது சிறுநீரக நோய் ஏற்பட்டு சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை
அதிக அளவு எனர்ஜி பானங்களை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆற்றல் பானங்களில் காஃபின் அதிக அளவில் காணப்படுகிறது. அதிக அளவு காஃபின் உட்கொள்வது இதய பிரச்சினைகள், உயர் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு பிரச்சினைகள் மற்றும் நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தும்.
நீரிழப்பு
சிலர் தாகம் எடுக்கும் போது தண்ணீருக்கு பதிலாக எனர்ஜி பானங்களை சாப்பிட விரும்புகிறார்கள். தண்ணீருக்குப் பதிலாக ஆற்றல் பானங்கள் குடிப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும், ஏனெனில் தண்ணீருக்கு பதிலாக, காஃபின், சர்க்கரை மற்றும் பல சுவைகள் அதை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன.
சர்க்கரை நோய் பிரச்சனை
சந்தையில் சர்க்கரை இல்லாத பல ஆற்றல் பானங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றில் பெரும்பாலானவற்றை தயாரிக்க சர்க்கரை இன்னும் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவு சர்க்கரையை உட்கொள்வது உடலின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம், இதன் காரணமாக நீரிழிவு போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்படக் கூடும்.
பற்களை சேதப்படுத்தும்
ஆற்றல் பானங்கள் தயாரிக்க சர்க்கரை மற்றும் பல வகையான சுவைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுவை மற்றும் சர்க்கரையின் பயன்பாடு காரணமாக, இது பற்களுக்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. ஆற்றல் பானங்களில் இருக்கும் சர்க்கரை உங்கள் பற்களின் பற்சிப்பியைக் கெடுக்கும், இதன் காரணமாக அதிக உணர்திறன், குழி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அமைதியின்மை
ஆற்றல் பானங்களை உட்கொள்வது ஹார்மோன்களில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இது சில நேரங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தும். அதிக அளவு எனர்ஜி பானங்களை உட்கொள்வதும் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
இந்த பானங்களைத் தொடர்ந்து உட்கொள்வது, சிறுநீரகச் செயல்பாட்டைப் பாதிக்கும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மேலும், முன்பே இருக்கும் சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Image Source: FreePik