Stretching exercises: நீங்க நடைபயிற்சிக்கு முன் நீங்க செய்ய வேண்டிய நீட்சி பயிற்சிகள்

உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள நடைபயிற்சி செய்யும் முன் நீட்சி பயிற்சி செய்வது அவசியமாகும். இது தசை பதற்றத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் உடலை ஆரோக்கியமாக வைக்க நாம் செய்ய வேண்டிய சில நீட்சி பயிற்சிகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Stretching exercises: நீங்க நடைபயிற்சிக்கு முன் நீங்க செய்ய வேண்டிய நீட்சி பயிற்சிகள்


What stretches do you do before walking: நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும், உடலைக் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள சில உடற்பயிற்சிகளை நாம் மேற்கொள்கிறோம். அதன் படி, நடைபயிற்சி ஒரு சிறந்த பயனுள்ள மற்றும் எளிய உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். நாள்தோறும் நடைபயிற்சி செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை உடலுக்கு ஆற்றலை அளிக்கவும், சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

மேலும் இவை எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்தவும், எடை குறைப்பிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம், நாம் தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது, நடைபயிற்சி செய்வதற்கு முன்னதாக நீட்சி பயிற்சி செய்வது முக்கியமாகும். ஏனெனில் நடைபயிற்சிக்கு முன்னதாக, நீட்சி பயிற்சியை மேற்கொள்வது காயம் அல்லது தசைப்பிடிப்பு ஏற்படாமல் இருக்க வைக்கலாம். இதில் நடைபயிற்சிக்கு முன்னதாக நாம் மேற்கொள்ள வேண்டிய சில நீட்சி பயிற்சிகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Flexibile Body Benefits: உடல் இந்த தோரணையில் இருந்தா, உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லதாம்.

நடைபயிற்சியின் ஆரோக்கிய நன்மைகள்

நடைபயிற்சி செய்யும் போது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், எண்டோர்பின்களை வெளியிடுவதற்கும் மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலமும் உடலை ஓய்வெடுக்க வைக்கிறது. இவை அனைத்துமே மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க உதவுகிறது. இவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், உடல் முழுவதும் சிறந்த சுழற்சியை ஊக்குவிப்பதன் மூலம் மனநிலை மேம்பாட்டிற்கு உதவுகிறது. ஆரோக்கிய நன்மைகளுக்கு அப்பால், நடைபயிற்சி செய்வது சிகிச்சை மற்றும் மகிழ்ச்சிகரமானதாக அமைகிறது.

நடைபயிற்சிக்கு முன் செய்ய வேண்டிய நீட்சி பயிற்சிகள்

நிற்கும் குவாட்ரைசெப்ஸ் ஸ்ட்ரெச்

இந்த பயிற்சியானது தொடையின் முன்பகுதியில் உள்ள பெரிய தசைகளை குறிவைக்கும் ஒரு எளிய பயிற்சியாகும். இது உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதன் மூலம் எந்த தசைப்பிடிப்பு அல்லது காயத்தையும் தடுக்கலாம். இந்த நீட்சிப்பயிற்சி உடலை நெகிழ்வாக மாற்றுகிறது. முதலில் உயரமாக நின்று, இடது கையை எடுத்து, பின்னால் வந்து, இடது கால் அல்லது கணுக்காலைப் பிடித்து, பிட்டம் நோக்கி இழுக்க வேண்டும். அது நேராக நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியை 30 முதல் 60 வினாடிகள் வரை பிடித்து, மாற்றி, மீண்டும் செய்யலாம். ஆய்வு ஒன்றில் நிற்கும் குவாட்ரைசெப்ஸ் ஸ்ட்ரெச் செய்வது தசை நெகிழ்ச்சி மற்றும் மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஜம்பிங் ஜாக்

ஜம்பிங் ஜாக் ஒரு பயனுள்ள உடற்பயிற்சியாகும். இது உடற்தகுதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இது உடலின் நெகிழ்வுத்தன்மை மற்றும் உடற்தகுதியை மேம்படுத்த உதவுகிறது. இது எந்த உபகரணமும் இல்லாமல் எங்கும் செய்யக் கூடிய ஒரு பயனுள்ள பயிற்சியாகும். இதில் உயரமாக நின்று, உங்கள் கால்களையும் கைகளையும் பக்கவாட்டில் இணைத்து, குதிக்கும் போது, கைகளையும் கால்களையும் விரித்து, மீண்டும் குதித்து, உங்கள் கைகளையும் கால்களையும் ஒன்றாகக் கொண்டு தொடக்க நிலைக்குத் திரும்பலாம். இந்த பயிற்சி செய்வது சுவாசம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Stretching Exercise Benefits: ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்வதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

கை, தோள்பட்டை நீட்டுதல்

முதலில் மார்பைச் சுற்றி உங்கள் கையை நீட்டி, எதிர் கையால் பிடித்து, மெதுவாக உடலை இழுக்க வேண்டும். இதை 30 விநாடிகள் அப்படியே வைக்கலாம். பிறகு, கைகளை சுழற்ற வேண்டும். இவ்வாறு செய்வது தோள்பட்டை மற்றும் கை தசைகளை தளர்த்த உதவுகிறது. ஆய்வு ஒன்றில், விளையாட்டு வீரர்கள் தங்கள் உடற்பயிற்சிகளுக்கு முன் நீட்டித்தல் மற்றும் கை மற்றும் தோள்பட்டை அசைவுகளைச் செய்தவர்கள் மேம்பட்ட அளவிலான இயக்கம் மற்றும் தசைச் செயல்பாட்டை அனுபவித்ததாகக் கூறப்படுகிறது.

கால் தொடுதல்

கால் விரல் தொடுதல் உடற்பயிற்சியானது நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த ஒரு எளிய மற்றும் பயனுள்ள பயிற்சியாகக் கருதப்படுகிறது. இது காயங்கள் மற்றும் தசைப்பிடிப்புகளைத் தவிர்க்க உதவுகிறது. இதில் முதலில் உயரமாக நின்று, கைகளை காற்றில் உயர்த்தி, மெதுவாக குனிந்து கீழே 30 விநாடிகளுக்கு கால் பிடியைத் தொடவும். இவ்வாறு 5 முறை செய்யலாம். ஆய்வு ஒன்றில், கால்விரல்களைத் தொடும் நீட்சிப்பயிற்சியானது ஒட்டுமொத்த நெகிழ்வுத்தன்மையை கணிசமாக மேம்படுத்துவதுடன், உடல் செயல்பாடுகளின் போது காயம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

இவ்வாறு பல்வேறு நீட்சிப் பயிற்சிகளை நடைபயிற்சி செய்யும் முன் மேற்கொள்வது தசை பதற்றத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Stretching Benefits: ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Water Walking Benefits: நீரில் நடைபயிற்சி செஞ்சிருக்கீங்களா? இது தெரிஞ்சா நீங்களும் நடப்பீங்க

Disclaimer