Fri Sep 11, 2026 | 10:21 PM IST

Expert

ஒட்டுமொத்த நன்மைகளையும் பெற நீங்க தினமும் நடக்க வேண்டிய 5 வாக்கிங்.. என்னென்ன தெரியுமா?

நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நடைபயிற்சி முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் தினமும் எந்தெந்த நடைபயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ள தகவல்களைக் காணலாம்.

அன்றாட வாழ்வில் யோகா, உடற்பயிற்சி போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. உடற்பயிற்சியைப் பொறுத்தவரை ஏராளமானவை உள்ளது. அதில் ஒன்றாகவே நடைபயிற்சி அமைகிறது. பொதுவாக, நடைபயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பலவித நன்மைகளை அளிக்கிறது. நடைபயிற்சியில் ஏராளமான வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுமே தனித்தனி நன்மைகளை வழங்குகிறது. இதில் தினமும் செய்ய வேண்டிய 5 நடைபயிற்சிகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் சுகாதார பயிற்சியாளரான ரேணு ரகேஜா அவர்கள் consciouslivingtips இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

தினமும் செய்ய வேண்டிய 5 நடைப்பயிற்சிகள்

நிபுணர் தனது பதிவில், நீங்கள் தினமும் செய்ய வேண்டிய 5 நடைப்பயிற்சிகள்—வீட்டிலேயே! என்று தனது பதிவைத் தொடங்கினார். மேலும் அவர், ஜிம் இல்லையா? பிரச்சனை இல்லை! வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த 5 எளிய நடைப்பயிற்சிகள் உங்கள் வலிமை, தோரணை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மாற்றும் - உங்கள் சொந்த உடலைப் பயன்படுத்தினால் போதும். ஒரு இடத்தைப் பிடித்துத் தொடங்குங்கள்! என்று நடைபயிற்சிகள் குறித்து பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: 40 வயதில் உங்க ஹார்ட் ஹெல்த்தியா நீங்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் இதோ

கால் நடைப்பயிற்சி (தடாசனம்)

முதலாவதாக கால் நடைபயிற்சியான தடாசனாவை நிபுணர் பரிந்துரைக்கிறார். இவை தோரணையை மேம்படுத்தவும், விறைப்பைக் குறைக்கவும், மையங்களை வலுப்படுத்தவும் மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவும் என குறிப்பிடுகிறார். இந்த பயிற்சியை 1 நிமிடம் செய்ய நிபுணர் பரிந்துரை செய்கிறார்.

இந்த ஆசனம் செய்வது கால்கள் மற்றும் முதுகெலும்பை பலப்படுத்தவும், உடல் தோரணையை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

குதிகால் நடைப்பயிற்சி

குதிகாலில் நடப்பதே குதிகால் நடைபயிற்சி என அழைக்கப்படுகிறது. இது கணுக்கால்களை வலுவாக்கவும், சிறந்த இரத்த ஓட்டத்திற்கும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுவதாக நிபுணர் பரிந்துரைக்கிறார். இந்த பயிற்சியை 1 நிமிடம் செய்ய நிபுணர் கூறுகிறார்.

மேலும் இந்த பயிற்சி கூடுதலாக உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், பாதங்கள் மற்றும் கால்களில் உள்ள தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. இவை மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனச்சோர்வின் அறிகுறிகளைப் போக்கவும் உதவுகிறது.

இடுப்பு சுழற்சி நடைபயிற்சி

இடுப்பு சுழற்சி நடைபயிற்சியைக் கையாள்வது,“இறுக்கமான இடுப்புகளைத் தளர்த்தவும், முதுகு விறைப்பைக் குறைக்கவும், நெகிழ்வாக உணரவும், கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது!” என்று குறிப்பிடுகிறார். இந்த பயிற்சியையும் 1 நிமிடம் வரை செய்வதற்கு நிபுணர் பரிந்துரைக்கிறார்.

இந்த பயிற்சி செய்வதன் மூலம் கீழ் முதுகு வலி ஏற்படுவதைக் குறைக்கலாம். மேலும் இது மேம்பட்ட இடுப்பு மூட்டு இயக்கத்திற்கும், தசைகளை வலுப்படுத்துவதற்கும், உடல் சமநிலையை மேம்படுத்தவும் உதவுவதாக கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: எடையை மடமடனு வேகமாகக் குறைக்க ஈவ்னிங் டைம்ல இந்த பழக்கங்களைப் பின்பற்றுங்கள்

பக்கவாட்டு நடைப்பயிற்சி

இந்த பயிற்சியானது “தொடைகளை தொனிக்கவும், இடுப்புகளை வலுப்படுத்தவும், நிலைத்தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது” என நிபுணர் கூறுகிறார். இந்தப் பயிற்சியை 1 நிமிடம் வரை செய்வது நன்மை பயக்கும்.

பக்கவாட்டு நடைபயிற்சி செய்வது கீழ்-உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. இது உடலில் கொழுப்பை எரிப்பதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவுகிறது.

View this post on Instagram

A post shared by Renu Rakheja | Nutritionist & Health Coach (@consciouslivingtips)

தலைகீழ் நடைப்பயிற்சி (பின்னோக்கி நடப்பது)

இந்த வகை நடைபயிற்சி ஆனது,“உங்கள் முழங்கால்களைப் பாதுகாக்கவும், சமநிலையை அதிகரிக்கவும் மற்றும் மூட்டு வலியைத் தடுக்கவும் உதவுகிறது” என நிபுணர் கூறுகிறார். இந்த பயிற்சியை 2-5 நிமிடங்கள் செய்ய நிபுணர் பரிந்துரைக்கிறார்.

இது சமநிலை மற்றும் எடையை மேம்படுத்தவும், கலோரிகளை எரிக்கவும், கால்கள் மற்றும் வயிற்று தசைகளை வலுப்படுத்தவும், முதுகுவலியைக் குறைக்கவும் உதவுவதாக நிபுணர் கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து, அவர், “உங்கள் வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு எளிய தினசரி வழக்கம் - முடிவுகள் மட்டுமே!” என்று குறிப்பிடுகிறார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி கல்லீரல் சிரோசிஸை மேம்படுத்துமா? நிபுணர் கூறும் உண்மைகள்!

Image Source: Freepik

Read Next

சாப்பிட்ட உடனே ஓடினால் என்னாகும் தெரியுமா? உணவுக்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓடலாம்?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 21, 2025 21:03 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content