Stretching Benefits: ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Stretching Benefits: ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?


ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சி நன்மைகள்

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க

உடலில் இரத்த ஓட்டம் குறைவாக இருப்பின், அது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். இதற்கு நீட்சி பயிற்சி சிறந்த தேர்வாக அமைகிறது. இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும், சிறந்த இரத்த ஓட்டத்தின் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் காயங்கள் விரைவில் குணமடைவதுடன், மன ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.

உடல் வலிமை அதிகரிக்க

நீட்சி பயிற்சி செய்வது உடல் வலிமையை அதிகரிக்கிறது. இதனைத் தொடர்ந்து செய்வது நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதனைச் செய்வது உடல் செயல்பாடுகளைச் செய்ய உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Swimming Benefits: தினமும் நீச்சல் அடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

காயத்தின் அபாயத்தைக் குறிக்க

நீட்சி பயிற்சி செய்வது காயம் அல்லது உடலுக்கு சேதம் ஏற்படும் ஆபத்தை வெகுவாகக் குறைக்கிறது. இதனைச் செய்வது, தசைகளை நெகிழ்வாக்கி எலும்புகளை வலுவடையச் செய்கிறது. இதன் காரணமாக காயம் ஏற்படும் ஆபத்தும் கணிசமாகக் குறைக்கப்படுகிறது.உடற்பயிற்சி செய்வதற்கு முன் நீட்சிப்பயிற்சி செய்யாமல் இருப்பது காயத்தின் ஆபத்தை அதிகரிக்கிறது. எனவே, உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஸ்ட்ரெட்சிங் செய்வது முக்கியமாகும்.

ஸ்ட்ரெட்சிங் செய்யும் போது செய்யக் கூடாதவை

ஸ்ட்ரெட்சிங் செய்பவர்கள் சில தவறுகளைச் செய்கின்றனர்.

  • நீட்சிபயிற்சி செய்யும் போது மூச்சை பிடிக்கக் கூடாது. இந்த காலகட்டத்தில் சுவாச விகிதம் சாதாரணமாக இருக்க வேண்டும்.
  • நீண்ட நேரம் ஒரே இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதாவது 15 விநாடிகளுக்கு மேல் உடலை ஒரு நிலையில் நிறுத்த கூடாது.

இந்த பதிவும் உதவலாம்: Daily Exercise Benefits: இது தெரிஞ்சா இனி தினமும் எக்ஸர்சைஸ் பண்ணுவீங்க

Image Source: Freepik

Read Next

Heart Health: தினமும் இந்த 4 பயிற்சிகளை செய்தால் போதும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்!

Disclaimer