Daily Exercise Benefits: இது தெரிஞ்சா இனி தினமும் எக்ஸர்சைஸ் பண்ணுவீங்க

  • SHARE
  • FOLLOW
Daily Exercise Benefits: இது தெரிஞ்சா இனி தினமும் எக்ஸர்சைஸ் பண்ணுவீங்க

எனினும் உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் இரண்டு முதல் மூன்று நாள்கள் செய்து, பிறகு விட்டு விடுவர். ஆனால், இதை தினமும் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hip Pain Relieve Tips: ரொம்ப நேரம் உட்கார்ந்து இடுப்பு வலியா? இதெல்லாம் டிரை பண்ணுங்க

தினமும் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மனதிற்கு கிடைக்கும் சில ஆரோக்கிய நலன்களைக் கானலாம்.

உடல் எடை குறைய

பெரும்பாலானோர் உட்கார்ந்த வாழ்க்கை முறையையேக் கையாள்கின்றனர். இதனால் உணவு உட்கொண்ட பிறகும் சரியான உடல் செயல்பாடு இல்லாததால் உடல் எடை அதிகமாகிறது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கலாம். இவ்வாறு உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது உடலில் கலோரிகளை எரிக்கிறது.

பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட

இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு உடல் எடை அதிகரிப்பே காரணம். ஆனால் வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பல்வறு உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதன் படி பக்கவாதம், கீல்வாதம், பல வகையான புற்றுநோய், மனச்சோர்வு மற்றும் இன்னும் பிற நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்க

நாள் முழுவதும் வேலை செய்து நல்ல இரவு தூக்கத்தைப் பெற முடியாமல் பலரும் அவதிப்படுவர். ஆனால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் சிறந்த தூக்கத்தைப் பெற முடியும். மேலும் இது தூக்கத்தை ஆழப்படுத்தவும் உதவுகிறது. அதே சமயம், உறங்கும் நேரத்தில் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

இந்த பதிவும் உதவலாம்: Finger Strengthening Exercises: வேலை அதிகமாக செஞ்சி கை விரல் எல்லாம் வலிக்குதா? அப்ப இத செய்யுங்க.

எலும்பு, தசை வலிமைக்கு

வயதாகும் போது பலரும் எலும்புகள், மூட்டுகள், தசைகள் போன்றவற்றின் பாதுகாப்பு அவசியமாகும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மூட்டு வலி பிரச்சனையால் அவதியுறுகின்றனர். எலும்பு, மூட்டுகள் மற்றும் தசைகளின் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு அன்றாட உடல் செயல்பாடுகளைச் செய்ய வேண்டும். மேலும் இதன் மூலம் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

ஆற்றல் திறன் மேம்பாட்டிற்கு

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இத்துடன் இரத்த ஓட்டத்தை சீராக்கி பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது. உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் உடலின் ஆற்றலை மேம்படுத்த முடியும். அந்த வகையில் உடற்பயிற்சி செய்வதில் தசைகளை வலுப்படுத்துதல், சமநிலைப்பயிற்சி போன்ற செயல்பாடுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

மன அழுத்தம் குறைய

நாள்பட்ட வேலையால் இன்று பலரும் அனுபவிக்கும் பொதுவான பிரச்சனையாக மன அழுத்தம் உள்ளது. இதிலிருந்து விடுபட தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம் அல்லது சிறிது விறுவிறுப்பான நடைபயணம் மேற்கொள்ளலாம். தினந்தோறும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது, என்டோர்பின் ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இது மகிழ்ச்சியாகவும், நிதானமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

இதில் குறிப்பிட்டுள்ள பல்வேறு நன்மைகளைப் பெற தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். எனினும் புதிய உடற்பயிற்சித் திட்டத்தைத் தொடங்கும் முன் சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Daily Jogging Benefits: தினமும் 30 நிமிஷம் ஜாகிங் போங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க.

Image Source: Freepik

Read Next

முதுகு வலி பின்னியெடுக்குதா?… இந்த 5 விஷயங்கள் தான் எஸ்கேப் ஆக வழியே!

Disclaimer