$
Ways To Relieve Hip Pain Due To Sitting: நவீன காலகட்டத்தில் பெரும்பாலானோர் தினந்தோறும் உட்கார்ந்த வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகின்றனர். இதனால் அடிக்கடி இடுப்பு, கால்கள் போன்றவற்றில் வலியை அனுபவிக்கின்றனர். அதே சமயம். பெரும்பாலானோர் இந்த வலிக்கு அதிக கவனம் செலுத்துவதில்லை. இது போன்ற கவனக்குறைவால், எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் இடுப்பு வலியால் எழுந்திருக்க, உட்கார மற்றும் நடப்பது போன்றவற்றில் சிரமம் ஏற்படலாம். மேலும் ஒரே இடத்தில் மணிக்கணக்காக உட்காருவதால் எலும்புகள் வலுவிலந்து, இடுப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதைத் தவிர்க்க, யாஷ் ஃபிட்னஸ் பயிற்சியாளர் யாஷ் அஹர்வால் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Daily Jogging Benefits: தினமும் 30 நிமிஷம் ஜாகிங் போங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க.
இடுப்பு வலி நீங்க உதவும் நிவாரணங்கள்
நீண்ட நேரமாக உட்கார்ந்ததால் ஏற்படும் இடுப்பு வலி நீங்க சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அவ்வப்போது ஓய்வு எடுப்பது
மணிக்கணக்கில் உட்கார்ந்த காரணத்தால் பலருக்கும் இடுப்பு வலி ஏற்படும். இந்த சூழ்நிலையில், அவ்வப்போது ஓய்வு எடுப்பது, இடைவெளியின் போது எழுந்து அங்கும் இங்கும் நடப்பது போன்றவை இடுப்பு வலி ஏற்படுவதைக் குறைக்கும். எனினும், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காரக் கூடாது. வயதானவர்களாக இருப்பின், வலியின் நிலை தீவிரமாக இருக்கலாம்.

வழக்கமாக ஸ்ட்ரெச்சிங் செய்வது
மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், உடலில் தசைகள் இறுகப் பிடிப்பது போல் இருக்கும். எனவே மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நீட்சி பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தசைகள் திறக்கப்பட்டு வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
எடை இழப்பு
சில சமயங்களில் அதிக உடல் எடை காரணமாகவும், இடுப்பு அல்லது கால்களில் வலி ஏற்படலாம். எனவே உடல் எடையை சமநிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும். மேலும் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான பழக்கங்களைக் கையாள்வதுடன், நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.
இந்த பதிவும் உதவலாம்: Finger Strengthening Exercises: வேலை அதிகமாக செஞ்சி கை விரல் எல்லாம் வலிக்குதா? அப்ப இத செய்யுங்க.
முழு ஓய்வு எடுப்பது
இடுப்பு வலி உள்ளவர்கள் ஓய்வில் முழு கவனம் செலுத்துவது அவசியமாகும். பொதுவாக எலும்பு வலி அல்லது வைட்டமின் குறைபாடு உள்ளவர்களுக்கே இடுப்பு வலி அதிகமாகலாம். இது தவிர, நீண்ட நேரம் நிற்பது அல்லது உட்கார்ந்திருப்பது போன்றவை இடுப்பு வலியை ஏற்படுத்தலாம். எனவே, நேரம் கிடைக்கும் சமயத்தில் நன்றாக ஓய்வெடுப்பது நல்லது. மேலும், இரவில் ஆழ்ந்த உறக்கம் பெறலாம்.
சூடான அல்லது குளிர் அழுத்தம் தருவது
மணிக்கணக்காக, உட்கார்ந்து இருப்பது அல்லது நிற்பதன் காரணமாகவும் இடுப்பு வலி அதிகரிக்கலாம். போதிய ஓய்வு எடுத்தாலும், இடுப்பு வலி குறையவில்லை எனினும், சூடான அல்லது குளிர்ந்த அழுத்தங்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மருத்துவரை அணுகுதல்
நீண்ட நாள்களாக இடுப்பு வலி பிரச்சனையை அனுபவிப்பவர்கள், மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. சில நேரங்களில் வைட்டமின் குறைபாட்டால், இடுப்பு வலி ஏற்படும். இவை குறிப்பாக பெரும்பாலும் வயதானவர்களுக்கே ஏற்படும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படும் இடுப்பு வலி பிரச்சனையில் இருந்து நிவாரனம் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Chronic Pain Remedies: உடம்பு வலியால் நீண்ட நாள்களாக அவதியா? இதை டிரை பண்ணி பாருங்க
Image Source: Freepik