Doctor Verified

Chronic Pain Remedies: உடம்பு வலியால் நீண்ட நாள்களாக அவதியா? இதை டிரை பண்ணி பாருங்க

  • SHARE
  • FOLLOW
Chronic Pain Remedies: உடம்பு வலியால் நீண்ட நாள்களாக அவதியா? இதை டிரை பண்ணி பாருங்க


Home Remedies For Chronic Pain: உடலின் எந்தப் பகுதியிலும் நீண்ட காலமாக நீடிக்கும் வலியை நாள்பட்ட வலி எனக் கூறுவர். சில நேரங்களில் இது மூட்டு வலியைப் போல் உணரலாம். இது தவிர, கீழ் முதுகு வலி, தலைவலி மற்றும் ஏதேனும் காயம் காரணம் போன்றவற்றாலும் நாள்பட்ட வலி ஏற்படலாம். இந்த வகை வலி, குணமடைய வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம்.

சில நேரங்களில் வலி முற்றிலும் குணமாகலாம். சில சமயங்களில் மீண்டும் வலி தொடங்கலாம். மக்களின் இயல்பான வழக்கத்தைப் பாதிக்கும் இந்த நாள்பட்ட வலியிலிருந்து விடுபட அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். நீண்ட நாள் வலியிலிருந்து விடுபட நவி மும்பையில் உள்ள மெடிகோவர் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர், நீரிழிவு மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர். சச்சின் நலவாடே சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

நீண்ட நாள் வலியிலிருந்து நிவாரணம் பெற வழிகள்

மருத்துவர் சச்சின் நலவாடே அவர்களின் கூற்றுப்படி, நாள்பட்ட வலியிலிருந்து நிவாரணம் பெற அன்றாட வாழ்க்கையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Empty Stomach Exercise: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா? நிபுணர் தரும் விளக்கம்

ஆரோக்கியமான உணவைக் கையாளுதல்

நாள்பட்ட மற்றும் அதிக வலியைச் சமாளிக்க உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். உணவு முறை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது. இது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. நாள்பட்ட வலியைச் சமாளிக்க, அழற்சி எதிர்ப்பு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களிலிருந்து விலகி நிற்பது நல்லது. உதாரணமாக, சிவப்பு கார்போஹைட்ரேட் மற்றும் சிவப்பிறைச்சிகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

வழக்கமான உடற்பயிற்சி

ஆரோக்கியமான உணவு முறைகளுடன், வழக்கமான உடற்பயிற்சி, யோகா போன்றவை அவசியமாகும். கிளீவ்லேன்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, நாள் ஒன்றுக்கு சுமார் 30 நிமிடங்கள் குறைந்த தீவிரம் உள்ள உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நாள்பட்ட வலியிலிருந்து நிவாரணம் பெற முடியும். உதாரணமாக தினமும் நடைபயிற்சி, ஜாகிங் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

உடற்பயிற்சி செய்வது சிறந்த மன அழுத்த நிவாரணியாகவும் செயல்படுகிறது. இது நாள்பட்ட வலியிலிருந்து நம்மை விடுவிக்கிறது. அதே சமயம், குறைந்த தீவிரம் கொண்ட பயிற்சிகள் மேற்கொள்வது எளிதானதாக இருப்பினும், உடலில் எந்தப் பகுதியில் வலி அதிகமாக இருப்பினும் உடற்பயிற்சி செய்யும் முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Running on Empty Stomach: வெறும் வயிற்றில் ஓடுவது உடல் நலத்திற்கு நல்லதா? நிபுணரின் கருத்து என்ன?

மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது

நாள்பட்ட வலிக்கு மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகும். எனவே நீண்ட நாள் வலியிலிருந்து விடுபட நினைப்பவர்கள், மன அழுத்தத்திலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். மன அழுத்தத்தைச் சமாளிக்க ஒவ்வொருவருக்கும் தனி வழி இருக்கிறது. எனினும் மன அழுத்தத்தைச் சமாளிக்க உதவும் பொதுவான காரணியாக, தொடர்ந்து யோகா, தியானம் மற்றும் மனதின் செயல்பாடுகளில் பங்கேற்பது மன அழுத்தத்திலிருந்து விடுபட வைக்கிறது.

நல்ல தூக்கம்

ஆரோக்கியமான நல்ல உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் உள்ளிட்டவற்றுடன், நல்ல தூக்கமும் அவசியமாகும். தூக்கமின்மை அல்லது தூக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்களால் சிலருக்கு நாள்பட்ட வலி மோசமாகலாம். போதுமான தூக்கம் வரவில்லை எனில், எடை அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம். இது வலியை அதிகரிக்கலாம். மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் நல்ல தூக்கம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Exercise To Overcome Stress: மன அழுத்தத்திலிருந்து விடுபட இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

Image Source: Freepik

Read Next

ஜிம்மில் சேரும் முன் இந்த பரிசோதனைகள் மிக மிக முக்கியம்.. மருத்துவர் பரிந்துரை!

Disclaimer

குறிச்சொற்கள்