Doctor Verified

Empty Stomach Exercise: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா? நிபுணர் தரும் விளக்கம்

  • SHARE
  • FOLLOW
Empty Stomach Exercise: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா? நிபுணர் தரும் விளக்கம்

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா இல்லையா?

டாக்டர் பத்மநாபாவின் கூற்றுப்படி, “பொதுவாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது பெரும்பாலான ஆரோக்கியமான நபர்களுக்கு பாதுகாப்பான ஒன்றாகும். எனினும், இவை ஒருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் அமையும். மேலும், சிலருக்கு ஆற்றல் குறைவாக இருக்கும் போது அல்லது சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்வது லேசான தலைவலி அல்லது தலைச்சுற்றலை ஏற்படுத்தலாம். இதில் அசௌகரியமாக உணர்ந்தால் அல்லது பாதகமான விளைவுகளை அனுபவித்தால், உடற்பயிற்சி செய்யும் முன் சிறிது சிற்றுண்டியை எடுத்துக் கொள்வது நல்லது” எனக் கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Plank Benefits: ஒட்டு மொத்த உடல் எடையை வேகமாக குறைக்க இந்த ஒரு உடற்பயிற்சி போதும்

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது உடற்பயிற்சியின் வகையைப் பொறுத்து அமையுமா?

சில உடற்பயிற்சியின் வகைகளைப் பொறுத்து, வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா அல்லது சாப்பிட வேண்டுமா என்பது அமையும். லைட் ஜாகிங், சுறுசுறுப்பான நடைபயிற்சி, யோகா போன்ற மிதமான பயிற்சிகளுக்கு வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது நல்லது.

மிகத் தீவிர பயிற்சிகளான, சகிப்புத்தன்மை பயிற்சி, தீவிர கார்டியோ, பளு தூக்குதல் போன்ற பயிற்சிகளுக்கு, சிறிய அளவிலான உணவு அல்லது சிற்றுண்டியை எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு சிறிதளவு சிற்றுண்டி எடுத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்வதால், அதற்குத் தேவையான ஆற்றலையும் பெற முடியும்.

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதை யார் தவிர்க்க வேண்டும்

பலரும் வெறும் வயிற்றில் பாதுகாப்பாக உடற்பயிற்சி செய்யலாம். எனினும் சிலர் இதனைத் தவிர்ப்பது நல்லது. சிறிதளவு சிற்றுண்டி சாப்பிடுவதன் மூலம் பயனடையலாம் என மருத்துவர் கூறியுள்ளார்.

கூடுதலாக, சில மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளும் நிலையில் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதன் படி நீரிழிவு, குறைந்த இரத்த அழுத்தம், குறைந்த இரத்தச் சர்க்கரை கொண்டவர்கள் விளைவுகளைத் தடுக்க உடற்பயிற்சிக்கு முன் கட்டாயம் உணவை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Exercise To Overcome Stress: மன அழுத்தத்திலிருந்து விடுபட இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

மேலும், கர்ப்ப காலத்தில் பெண்கள் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவர்களும் உடற்பயிற்சி செய்யும் முன் சிறிது உணவெடுப்பது நல்லது. மேலும், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அல்லது குறிப்பிட்ட உணவுத் தேவைகள் கொண்ட பெண்கள் போன்றோர் சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது என மருத்துவர் கூறுகிறார்.

என்ன வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்?

உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் செயல்திறனை அதிகரிக்க, நல்ல ஊட்டச்சத்து மிக்க உடல் வலிமையை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, உடற்பயிற்சி செய்யும் போது சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது, ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானதாகும்.

  • இயற்கை உணவு
  • நட்ஸ், ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள்
  • மெலிந்த புரதங்கள்
  • பழங்கள், காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள்
  • பச்சை காய்கறிகள்
  • முட்டை மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகள்

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது என்பது உடற்பயிற்சி செய்யும் போது உற்சாகமாக இருப்பின் எந்த தீங்கும் இல்லை. இவை உடல் எடை இழப்பை ஆதரிக்கலாம். இருப்பினும், குமட்டல், தலைவலி, தலைச்சுற்றல் போன்றவை இருப்பின், உடற்பயிற்சி செய்யும் முன் கட்டாயம் சிறிது உணவை எடுத்துக் கொள்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Strengthen Your Legs: கால்களை வலுவாக வைத்திருக்க இதை செய்யுங்கள்!

Image Source: Freepik

Read Next

Strengthen Your Legs: கால்களை வலுவாக வைத்திருக்க இதை செய்யுங்கள்!

Disclaimer