Plank Benefits: ஒட்டு மொத்த உடல் எடையை வேகமாக குறைக்க இந்த ஒரு உடற்பயிற்சி போதும்

  • SHARE
  • FOLLOW
Plank Benefits: ஒட்டு மொத்த உடல் எடையை வேகமாக குறைக்க இந்த ஒரு உடற்பயிற்சி போதும்


Plank Exercise And Its Benefits: உடல் எடையைக் குறைக்க ஏராளமான உடற்பயிற்சி வகைகள் மற்றும் யோகாக்கள் உள்ளன. உடலில் ஆங்காங்கே கால், கை, வயிறு, தொடை போன்ற பகுதிகளில் கொழுப்புகள் அதிகமாகி உடல் எடையைக் கூட்டுகிறது. அதிலும் குறிப்பாக ஆண், பெண் என அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தொப்பையைச் சுமந்திருப்பது. இதனால், உடல் எடையைக் குறைக்க சிக்கலான நடைமுறைகள் அல்லது ஜிம்மில் நேரத்தைக் கழிப்பர். ஆனால், இந்த ஒட்டு மொத்த உடல் எடையையும் குறைக்க ஒரு தீர்வாக பிளாங் உடற்பயிற்சி உள்ளது. இது உடலின் தொப்பையில் உள்ள கொழுப்பை வேகமாகக் கரைக்க உதவுகிறது. மேலும், உடலில் தசைகளை வலுப்படுத்தி கை, தொடை போன்ற பகுதிகளில் உள்ள எடையையும் குறைக்க உதவுகிறது.

ஏன் பிளாங் உடற்பயிற்சி

பிளாங் உடற்பயிற்சி தொப்பையின் கொழுப்பைக் கரைத்து அபரிமிதமான ஆற்றலைக் கொண்ட ஒரு உடற்பயிற்சி ஆகும். இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் வயிறு, முதுகு, கை, மற்றும் தொடைப்பகுதிகளில் உள்ள தசைகளை நீக்க உதவுகிறது. மேலும், இது வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை விரைவாகக் குறைத்து, வலுப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க உதவும் 5 ஓட்டப் பயிற்சிகள்

பிளாங் உடற்பயிற்சி எவ்வாறு செய்வது?

  • தரையில் அல்லது மென்மையான துணி ஒன்றைத் தரையில் விரித்து குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின், மெதுவாக கைகளின் முட்டிப்பகுதியில் உடலின் மேல் பகுதி தாங்கியாவாறும், இரண்டு கால்களின் விரல்கள் உடலின் கீழ் பகுதியைத் தாங்கியவாறும் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு செய்யும் போது, உங்கள் தலையிலிருந்து குதிகால் வரை உடல் நேர்க்கோட்டில் இருக்கும். இது உடலின் முக்கிய தசைகளை வலுப்படுத்துகிறது.
  • முதலில் 20 முதல் 30 வினாடிகளில் தொடங்கி, பின் 1 நிமிடம் அல்லது அதற்கு மேல் அதிகமாக இந்த நிலையில் இருக்க முயற்சிக்கலாம். எவ்வளவு நேரம் அதிகமாக, பிளாங் செய்ய முயற்சி செய்கிறோமோ, உடல் எடை விரைவாக குறைவதை உணரலாம். இதை நாள்தோறும் செய்வதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

பிளாங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

பிளாங் செய்வது உடல் எடையைக் குறைப்பதுடன், இன்னும் பிற கூடுதல் நன்மைகளைத் தருகிறது. அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

மேம்படுத்தப்பட்ட தோரணை

பிளாங் செய்வது முழு உடல் எடையையும் குறைப்பதுடன், தசைகளை வலுவாக்கி உடல் தோரணையை மேம்படுத்த உதவுகிறது.

மேம்படுத்தப்பட்ட சமநிலை

குறுக்கு வயிறு, மலக்குடல் வயிறு போன்ற இடங்களில் உள்ள தசைகளைக் குறி வைத்து உடல் சமநிலை அடைய வழிவகுக்கிறது.

எளிய மற்றும் வசதியான உடற்பயிற்சி

இந்த பிளாங் செய்வதற்கு எந்த உடற்பயிற்சி உபகரணங்களும் தேவையில்லை. மேலும், இது எளிய வகை உடற்பயிற்சி ஆகும்.

குறைந்த தாக்கம்

பிளாங் செய்வதால் உடலில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும். இது முதுகை வலுவாக்கவும், உடல் தோரணையை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Exercise To Overcome Stress: மன அழுத்தத்திலிருந்து விடுபட இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

Image Source: Freepik

Read Next

Knee Strength Exercise: மூட்டு வலி காணாமல் போக இதை செய்து பாருங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்